Skip to main content

Posts

Showing posts with the label கண்டராதித்தன்

கண்டராதித்தனின் ‘பாடிகூடாரம்’

புராதனம், புராணிகம், வரலாற்றின் இடிபாடுகளுக்குள், சமகால வாழ்வின் இடிபாடுகளை ஒளித்துவைத்து எழுதும் தொனியையும் உள்ளடக்கத்தையும் கொண்ட கண்டராதித்தன், செவ்வியல் குணத்திலிருந்து எதார்த்தத்தை நோக்கி ‘பாடிகூடாரம்’ கவிதைத் தொகுதியில் மிக மெதுவாக நகர்ந்திருக்கிறார். பாடிகூடாரத்தில் உள்ள கவிதைகளில் சுயசரிதையெனத் தோன்று அந்தரங்க மொழிகொண்டு அன்றாட உலகத்துக்கு அவர் கவிதைகள் தரையிரங்கியிருக்கின்றன. கலாப்ரியாவின் சாயலையும் நகுலனின் சாயலையும் முந்தைய கவிதைத் தொகுதிகளில் மிகச் சன்னமாக உணர முடிந்திருக்கிறது. இத்தொகுதியில் உள்ள கண்டராதித்தனின் ‘தாழ்வாரம்’ கவிதையில் உள்ள சித்திரத்தன்மை கலாப்ரியாவை வெளிப்படையாகவே ஞாபகப்படுத்தியது. தாழ்வாரம் கவிதையைப் படிக்கும்போது திண்ணையுள்ள பழைய ஓட்டுவீடு தோற்றம் கொள்கிறது. தாழ்வாரத்தை நோக்கிப் பணிந்து வாழத்தெரியவில்லை என்று கவிதை சொல்லி சொன்னாலும், ‘பாடிகூடாரம்’ தொகுதி கவிதைகளில் மொழி, அந்தரங்கத்தை நோக்கியும் அன்றாடத்தை நோக்கியும் சன்னம் கொண்டிருக்கிறது. தாழ்வாரம் பணியிலிருந்து எப்போது வீடு திரும்பினாலும் நீங்கள் துக்கமாக இருப்பதாக பிள்ளைகள் புகார் சொல்கிறார்கள் எவ...

மகாநினைவு கொண்டது தோல்வி கண்டராதித்தன் அவர்களே

ஷங்கர்ராமசுப்ரமணியன் இரண்டாயிரத்துக்குப் பிறகு தமிழ் நவீன கவிதை பெற்றிருக்கும் அலாதியான வகைமைகள், மொழிபுகள் மற்றும் பல்லுயிர்த் தன்மையைப் பார்க்கும் போது அவற்றைக் கற்பனை உயிரியான நவகுஞ்சரம் பறவையுடன் ஒப்பிட முடியும். தமிழின் தற்காலக் கவிதைகளை ஓருருவமாக வரைந்துப் பார்க்க நாம் முயன்றால், சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடுப்பு, பாம்பின் வால், யானை,மான் மற்றும் புலியின் கால் என அது வடிவு கொள்ளலாம். இப்பின்னணியில் தனியானத் த்வனி மற்றும் பருவங்களோடு இடிபாடுகளின் வசீகரத்தைக் கொண்ட தனிமொழி கண்டராதித்தனுடையது. உறவுகளின் இடிபாடுகள், ஆளுமைகளின் இடிபாடுகள், பால்நிலைகளின் இடிபாடுகள், காதல் மற்றும் காமத்தின் இடிபாடுகளைச் சிதைந்த மரபின் கோபுரத்திலிருந்து எழுதும் பிரக்ஞை கொண்டக் கவிதைகள் அவை. நவீனத்துக்கும் சமகாலத்துக்கும் முதுகுகாட்டுவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கின்றன இவரது கவிதைகள். கண்டராதித்தன் என்ற பெயரையும் அவரது கவிதைகளையும் அனிச்சையாகப் பிரித்துபோட்டு வழக்கம்போலக் கடந்துவிட முடியாது- நகுலன் என்ற பெயரை வெறும் பெயர்தான் என்று கடக்க முடியாததைப் போல. பெயர் க...