Skip to main content

Posts

Showing posts from February, 2023

ஒற்றை இருதயத்தின் வாசனை

சென்ற நூற்றாண்டு பிறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னர் நான் யார் என்று கேட்டு வெங்கட்ராமன் என்னும் சிறுவன் வந்து நின்ற அதே கோயிலுக்குள் தான் அன்றிரவு வந்து நின்றேன். அவன் நுழையும்போது, வெளியில் உள்ள பித்தளைப் பாத்திரக் கடைகள் இருந்திருக்காது. நான் உள்ளே நுழைந்த பிறகும் வெளியில் உள்ள உலகமும் காலமும் மறைந்துபோய்விட்டது. கரையான்களும் எறும்புகளும் கடித்து மண்ணோடு மண்ணாக ஒட்டி அழுகிய தசையோடு, நிஷ்டையில் அந்தச் சிறுவன் இருந்த பாதாள லிங்கம் இருக்கும் ஆயிரம்கால் மண்டபம்  தெரிகிறது. நான் பிரம்ம தீர்த்தக் குளத்தின் அருகே உள்ள மண்டபத்தின் முன்னர் நின்றேன். உள்ளே நுழைந்ததும் தென்பட்ட முருகனின் சந்நிதியில் விபூதியை நெற்றி முழுக்கப் பூசி எனது நோய் இங்கே இப்போதே குணமாகிவிட வேண்டுமென்ற உன்மத்த வெறியுடன் தான் இந்தக் கோயிலுக்குள்ளும் நுழைந்திருந்தேன்.  பிரிவு நேரும் என்று அறிந்தே வந்த உறவென்றாலும், உறவின் போது சந்தோஷமும் குற்றவுணர்வும் ரகசியமும் சுமையும் சேர்ந்து மூச்சு முட்டினாலும் அவளைப் பிரியும் கணத்தில் தான் பிரிந்தவளின் மகத்துவம் எனக்குத் தெரியத் தொடங்கியது. பிரிவு நோயாகியது. சேர்ந்திருந்த போது வெள

கும்பலின் மேதைமை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

துரோகம், வெறுப்பு, வன்முறை போதுமெனும் அளவுக்கு உள்ளது குறிக்கப்பட்ட நாளன்று ஒரு ராணுவத்துக்கு  வழங்கும் அளவுக்கு   சராசரி மனிதனில் அபத்தம் உள்ளது அத்துடன் கொலைக்கு எதிராகப் போதிப்பவர்கள் எவரோ அவர்களே அதில் தேர்ந்தவர்களாக உளர் அத்துடன் நேசத்தைப் போதிப்பவர்கள் யாரோ அவர்களே வெறுப்பதில் சிறந்தவர்களாய் உளர் அத்துடன்  போரிடுவதில் சிறந்தவர்கள் யாரோ அவர்களே  இறுதியில் சமாதானத்தைப் பிரசங்கிக்கிறார்கள் கடவுளைப் போதிப்பவர்களுக்கு கடவுள் தேவை அமைதியைப் போதிப்பவர்களிடம் அமைதி இல்லை நேசத்தைப் போதிப்பவர்களிடம் நேசம் இல்லை போதிப்பவர்களிடம் ஜாக்கிரதை அறிந்தவர்களிடம் ஜாக்கிரதை புத்தகங்களை வாசித்தபடி இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாய் இருங்கள். வறுமையைப் பழிப்பவர்கள் எவரோ வறுமையில் பெருமிதம் கொள்பவர்கள் எவரோ அவர்களிடம் ஜாக்கிரதையாய் இருங்கள் உடனடியாகப் புகழ்பவர்களிடம் ஜாக்கிரதை தேவை அவர்களுக்கு திரும்பப் புகழ்வது அவசியமாக உள்ளது உடனடியாக எதிர்ப்பு தெரிப்பவரிடம் கவனம் தேவை தமக்கு தெரியாதது குறித்து அவர்கள் அச்சப்படுகிறார்கள் தொடர்ந்து கூட்டத்தைத் தேடிக்கொண்டிருப்பவரிடம் எச்சரிக்கையாய் இருங்கள் தனிமை உணர்வைத் த

அதிகமாக விற்கும் நாவலாசிரியனின் நேர்காணலைப் படித்தபோது - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

  அவன் எழுதுவதைப் போன்று பேசுகிறான் அவனது முகம் புறாவைப் போன்றது, வெளிவிவகாரங்களால் தீண்டப்படாதது. அவனது சௌகரியமான உறுதியான வெற்றியை வாசிக்கும்போது  பயங்கரத்தின் சின்ன நடுக்கம் என்னில் பாய்கிறது. “அடுத்த வருடம் ஒரு முக்கியமான நாவலை எழுதப் போகிறேன்” என்று உரைக்கிறான். சில பத்திகளை விட்டுத் தாவுகிறேன் ஆனால் அந்த நேர்காணல் இரண்டரை பக்கங்களுக்கும் அதிகமாக நீள்கிறது. ஒரு மேஜை விரிப்பில் பால் சிந்தியதைப் போல டால்கம் பவுடரின் மிருதுவை ஒப்ப சாப்பிட்ட மீனின் எலும்புகளைப் போல வெளிறிய கழுத்து டையில் ஈரமான கறையைப் போல அதிகரிக்கும் முணுமுணுப்பு போல. இந்த மனிதன் மிகவும் அதிர்ஷ்டசாலி அவன் சூப் கிச்சனில் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. இந்த மனிதனுக்குத் தோல்வி என்ற கருதுகோளே தெரியாது அதற்காக அவனுக்கு அதிக ஊதியம் தரப்படுகிறது. நான் படுக்கையில் கிடந்து நேர்காணலை வாசிக்கிறேன். தரையில் செய்தித்தாளை நழுவவிடுகிறேன். அப்போது ஒரு சத்தம் கேட்கிறது. ஒரு சிறிய ஈ ரீங்கரிக்கிறது.  அது பறப்பதை அறையை ஒழுங்கற்றுச் சுற்றுவதை கவனிக்கிறேன். இறுதியாக வாழ்க்கை.  (சூப் கிச்சன் - இலவச உணவு விடுதி)