Skip to main content

Posts

Showing posts with the label நாவல் வாசிப்பு

நாவலெனும் பிரம்மாண்ட உலைக்களம்

  நாவல் பற்றிய பி . கே . பாலகிருஷ்ணனின் முழு சிந்தனைகளும் தமிழில் கிடைக்கத்தான் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கிறதே தவிர , அவர் இந்த நூலை எழுதிய மூன்று ஆண்டுகளிலேயே தமிழ் சூழலில் நாவல் பற்றிய விவாதம் தொடங்குவதற்குக் காரணமாகிவிட்டார் . 1968- ல் நகுலன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட “ குருக்ஷேத்திரம் – ஓர் இலக்கியத் தொகுப்பு ” நூலில் பி . கே . பாலகிருஷ்ணனின் “ நல்ல நாவலும் மகத்தான நாவலும் ” என்ற கட்டுரை , நீல . பத்மநாபனின் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது . அந்த அடிப்படையில் பி . கே . பாலகிருஷ்ணன் துவக்கி வைத்த நாவல் குறித்த உரையாடலின் தொடர்ச்சியையும் தாக்கத்தையும் சுந்தர ராமசாமி , சி . மோகன் , ஜெயமோகன் ஆகியோர் ஓரளவு பரந்த அளவில் விவாதமாக ஆக்கியுள்ளனர் . நவீன நாவல்களைத் தாண்டி , செவ்வியல் , பின்நவீனத்துவ வடிவிலும் சிறந்த படைப்புகள் தமிழில் கடந்த கால் நூற்றாண்டில் வெளியாகியிருக்கின்றன . நாவல் பற்றிய விவாதங்களும் இந்தச் சாதனைக்கு நிச்சயம் உரமூட்டியிருக்க வேண்டும் . 1965- ல் மலையாளத்தில் எழுதி , ஐம்பது ஆண்டுகளுக்...