நவீன இந்திய சமூக உருவாக்கத்தில் பங்களிப்பு செய்த சீர்திருத்தவாதிகளில் ஒருவரும் துறவியும் கல்வியாளருமான நாராயண குரு, கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லும் விதமாக சம்வாத வடிவில் 15 பாடல்களாக எழுதிய நூல் ‘அறிவு’. மேற்கில் அறிவின் தோற்றம் குறித்து அறியும் ஆய்வுப்புலம் ‘அறிவுத்தோற்றப்பாட்டியல்’ (epistomology) என்ற பெயரில் உள்ளது. இந்தியாவில் வேதாந்த மரபின் ஒரு பகுதியாக அறிவு மற்றும் பிரக்ஞையின் தோற்றமும் அவற்றின் செயல்பாடுகளும் பிரச்சினைகளும் ஆராயப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் 1887 முதல் 1897 வரையிலான காலகட்டத்தில் நாராயண குரு, நவீன மனிதர்களின் மனப்போக்குக்குப் பதில் அளிக்கும் விதமாக, வேதாந்தத்தின் அடிப்படையில் எழுதிய பிரக்ஞையின் அறிவியலாக இந்த நூல் முக்கியமானது. நாராயண குருவின் வழிவந்த துறவியும் கேரளத்தின் முன்னணி அறிஞர்களில் ஒருவருமான நித்ய சைதன்ய யதி, நாராயண குருவின் 15 பாடல்களுக்கும் ஆங்கிலத்தில் எழுதியுள்ள தெளிவுரை ‘அறிவு - ஞானத்தின் ஆய்வியல் - நாராயண குரு’ என்ற நூலாகத் தமிழில் வெளிவந்திருப்பது முக்கியமான நிகழ்ச்சியாகும். திரும்பத் திரும்பப் படித்தும் விவாதித்தும் தெரிந்துகொள...