Skip to main content

Posts

Showing posts with the label சிறுகதை வாசிப்பு

ஒருநாள் - நகுலன் (எழுத்து இதழ் - 1959)

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவா...

பாலசுப்ரமணியன் பொன்ராஜின் ‘சீமுர்க்’

பாலசுப்ரமணியன் பொன்ராஜின் சீமுர்க் சிறுகதைத் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று என்று கருதும் கதையான ‘சீமுர்க்’ கதையைப் படிக்கும்போது புனைவும்,  மெய்யியலா என்ற கேள்வியை என்னால் தவிர்க்க இயலவில்லை.  சிந்தனையும் புனைவும் விமர்சனப் பார்வையும் மேலோங்கிய பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகளை போர்ஹே கதைகளை வரையறுப்பது போல ஹைப்ரிட் கதைகள் என்று வரையறுத்துக் கொள்ளலாம். போர்ஹேசின் சிறுகதையொன்றில் ஒரு வாக்கியம் வரும். அவன் தன்னைப் பற்றி பிறர் கருதும்போது தனது வருங்கால சாதனைகளையும் சேர்த்து வைத்து மதிப்பிட வேண்டுமென்று விரும்புபவனாகவும், பிறரை அவர்களது கடந்தகாலச் செயல்களை வைத்து மதிப்பிடுபவனாகவும் இருந்தான் என்று போர்ஹெஸ் எழுதியிருப்பார். இந்த வாக்கியம் போர்ஹெசின் கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல; நம்மில் பெரும்பாலானவர்களின் மனப்போக்குக்குப் பொருந்தக்கூடிய பொதுவான மனித இயல்பு குறித்த கண்டுபிடிப்பு அதில் இருக்கிறது.  மெய்யியலும் அறிவியலும் போலவே இந்தப் பூமியில் நமது உயிர் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதைச் சிந்திக்கும் மாற்று முறைமைகளாகவே கவிதையும், சிறுகதையும், நாவலாக இருக்கிறது. மூளை நரம்பிய...

ஒரு பிரார்த்தனை – ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்

ஆயிரம் முறைகள் , எனது அங்கமாக இருக்கும் இரண்டு மொழிகளிலும் , எனது உதடுகள் உச்சரித்தன ; தொடர்ந்து மந்திர ஜெபத்தை எனது உதடுகள் உச்சரித்துக் கொண்டிருக்கவும் செய்யும் ; ஆனாலும் அதில் ஒருபகுதி மட்டுமே எனக்குப் புரிந்தது . இந்த நாளின் காலையில் – ஜூலை 1, 1967 – நான் ஒரு பிரார்த்தனையை முயற்சிக்க ஆசைப்பட்டேன் ; அது அந்தரங்கமானது ; வழிவழியாக வந்தது அல்ல . அப்படியான ஒரு முயற்சி மனிதசக்தியைத் தாண்டிய அர்ப்பணிப்பை வேண்டுவது என்று எனக்குத் தெரிந்திருந்தது . அந்தப் பிரார்த்தனையிலிருந்து எதையும் கோருவதற்கு நான் விலக்கப்பட்டவன் . எனது கண்களை இரவு நிரப்பக்கூடாது என்று வேண்டுவது பைத்தியக்காரத்தனம் ; குறிப்பாக சந்தோஷமாக , நியாயமாக அல்லது ஞானவான்களாக இல்லாத , பார்க்கும் திறனுள்ள ஆயிரம் மனிதர்களை நான் அறிவேன் . காலத்தின் அணிவகுப்பென்பது காரண காரியங்களின் வலையாக இருப்பதால் , கருணையின் பரிசாக எதைக் கேட்டாலும் , அது எத்தனைதான் சிறியதாக இருந்தாலும் , அந்த இரும்புவலையின் கண்ணியை உடைக்கவோ , ஏற்கெனவே உடைந்திருக்க வேண்டுமென்றோ கோருவதுதான் ....