Skip to main content

Posts

Showing posts with the label கட்டுரை

துப்பாக்கியின் உடல்

எனக்கு ஒரு பொம்மை துப்பாக்கி கிடைத்தது. பெசண்ட் நகரில் காலை நடை போகும் போது, விச்ராந்தி உணவு விடுதிக்கு வெளியே தட்டுப்பட்டது.ஏதேனும் ஒரு குழந்தை வாசலில் விட்டுச் சென்றிருக்கலாம். ஜாங்கோ திரைப்படத்தில் கிறிஸ்டோபர் வால்ட்ஸ் பயன்படுத்தும் derringer மாதிரியான கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ளக்கூடிய உலோக பொம்மைத் துப்பாக்கி. பிஸ்டல் வகை. மேல்பகுதியை இழுத்துவிட்டு குதிரையைக்கூட அழுத்தமுடிந்தது. நான் முதல்முறை நிஜத் துப்பாக்கியை பார்த்தது என் பதின் வயதில். ஒரு பரிந்துரைக் கடிதம் கோரி திருநெல்வேலி டவுணில் வசித்த ஜமீன்தாரான குட்டி என்ற சண்முக சுந்தரம் அவர்களின் வீட்டுக்குச் சென்றபோது, ஹால் சுவரில் மாட்டப்பட்டிருந்த ரைபிளைக் கண்டேன். அவர் வருவதற்கு முன்னால் எழுந்துபோய் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். துப்பாக்கிக் கட்டையும் அதிலிருந்து நீளும் பளபளப்பான உலோகக் குழலும் கொடுத்த சில்லிப்பு மறக்கவியலாதது. அப்போது மூளை சூடானதையும் மறக்க முடியாது. பின்னர், 2010 வாக்கில் சென்னையில் ஒரு துப்பாக்கியை தொட்டு பார்த்தேன். அண்ணா திரையரங்குக்கு பக்கவாட்டில் மௌண்ட் ரோட்டையும் வாலாஜா சாலையையும் இணைக்கும் இருட்டான காம்ப...

மரணத்தைக் கலையாக்கிய காந்தி

ஓவியம்: ஆதிமூலம் ‘காந்தி – அஹிம்சையின் முடிவு’ நூலைப் படித்து முடிக்கும்போது, அசோகமித்திரன் எழுதிய சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ‘காந்தி’யின் வாக்கியம் கூடுதலாக நம்மை அறைந்து எதிரொலிக்கிறது. ‘உண்மை கசப்பானது’ என்ற வாக்கியமே அது. சத்தியத்தின் கண்ணாடியில் நெருக்கமாகத் தன் சுயத்தை, வாழ்க்கை முழுக்க பிரதிபலித்துப் பார்த்துக்கொண்டேயிருந்த காந்தியும் அவரது சமகாலத்தவருக்கு மட்டுமல்ல இன்றைய தலைமுறையினருக்கும் ஏன் வரலாற்றுக்கும் கூட, விழுங்கிச் செரிக்க இயலாத கசப்பானதொரு வியக்தியென்ற உணர்வை மீண்டும் ஏற்படுத்தும் நூல் இது. இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் பிரிவினையின்போதும் இனப்படுகொலை என்று சொல்லப்படக்கூடிய அளவில் நடந்த இந்து – முஸ்லிம் மோதல்களைச் சுற்றி காந்தியும், அவரது அஹிம்சையும், அவர் தன் சுயத்துடன் மேற்கொண்ட அசாத்தியமான வீரமும், காந்தியை அவநம்பிக்கையை நோக்கி, துயரத்தை நோக்கி அலைக்கழிப்பை நோக்கி எப்படித் தள்ளியது என்பதைப் பகுப்பாய்வு செய்யும் நூல் இது. 000 இருபதாம் நூற்றாண்டில் உலகளவில் மூன்று இயக்கங்கள் வரலாற்றுப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தி வெகுமக்களின் வாழ்க்கை மீதும் தாக்கத்தை ஏ...

அசோகமித்திரன் இருந்த வீதி

  அன்று காலை பெசண்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, தரமணி வழியாக வேளச்சேரிக்குள் நுழைந்து, அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவில் புகுந்து என் வீட்டை நோக்கி, இரண்டு சக்கர வாகனத்தைத் திருப்பினேன். அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவின் மறுமுனையில் ஒரு வினோதக் காட்சி. வெள்ளை பெயிண்ட் அடித்த குப்பை ஆட்டோ, சென்னை மாநகராட்சியின் பிரசாரப் பாடலைப் பாடிக் கொண்டே என்னை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்க, குப்பைக்காரர் வண்டியை பின்னாலிருந்து பதற்றத்துடன் துரத்திவருகிறார். நான் எனது வண்டியை ஓரமாக நிறுத்தி இறங்கி, குப்பை ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையை உற்றுப் பார்த்தேன். முன் கண்ணாடிச் சட்டகத்துக்குப் பின்னால் யாரும் இல்லை. ஓட்டுனரே இல்லாமல் ஓடும் அதிசயத்தைப் பார்த்து வியந்து வெறித்து நின்றிருந்தபோது ஆட்டோ என்னை மிதவேகத்தில் கடந்தது. பக்கவாட்டுப் பார்வையில் வண்டியின் ஓட்டுனர் இருக்கையில், ஒரு குட்டிப்பையன் அமர்ந்து விபரீதம் எதையும் முகத்தில் காண்பிக்காமல் வண்டியை ஓட்டிப் போய்க்கொண்டிருந்தான். அப்போதுதான் நிலைமையின் அபாயம் தெரிந்தது. உடனடியாக கண்ணில் கண்ட பெரிய சிமெண்ட்...

நண்பர் அரவிந்தன்

எதிர்  பிளாட்பாரத்தில் இறந்து இருண்டு கிடக்கும் எலியின் வாலருகே  மினுங்கிக்கொண்டிருக்கிறது அன்பைவிடச் சிறந்த உணர்ச்சி ஒன்று க்ளிங் ளிங் என்ற ஓசையோடு சாலையில் கால் வைக்க முடியவில்லை முன்னும் பின்னும் முரட்டு வாகனங்கள் இடைவேளை இன்றி ஒரு நாள் ஒரு நூற்றாண்டு பல நூற்றாண்டுகள் திடீர் இடைவெளியில் குறுக்காக ஓடி, ஏறினேன். எதிர் பிளாட்பாரத்தில் தவறிக் கிடக்கும் நீர்த் தாவரத்தின் கசிவில் மினுங்கிக் கொண்டிருக்கிறது, அன்பை விட சிறந்த உணர்ச்சி ஒன்று க்ளிங் ளிங் என்ற ஓசையோடு.  - தேவதச்சன் தேவதச்சன் எழுதிய இந்தக் கவிதையில் திரும்பத் திரும்ப ‘அன்பை விடச் சிறந்த உணர்ச்சி’ என்றொரு உணர்ச்சி குறிப்பிடப்படுகிறது. கவிதைக்குள் அது என்னவென்பதை தேவதச்சன் சொல்லவில்லை.அவருடனான ஒரு தொலைபேசி உரையாடலில் அன்பைவிச் சிறந்த உணர்ச்சின்னா அது மரியாதை தான் ஷங்கர் என்று போகிற போக்கில் சொன்னார்.  அரவிந்தனுடனான 30 வருடத்துக்கும் மேலான தொடர்பைப் பற்றிப் பேசுவதற்காக எங்கள் உறவைத் தொகுத்துப் பார்க்கும்போது, மரியாதை தான் அன்பைவிடச் சிறந்த உணர்ச்சி என்று கவிஞர் தேவதச்சன் உரைத்தது ஞாபகத்துக்கு வருகிறது. அன்புக்...

குடிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சாக்ரடீஸ் - சார்லஸ் சிமிக்

  தீவிரமான குடி இரவொன்றில் துணையாக இருக்க, ஏதோவொரு நுண்கலைக் கழகத்திலிருந்து அவர்கள் தத்துவவாதி சாக்ரடீஸின் சிலையை எடுத்துவந்திருக்கலாம். சாக்ரடீஸ் சிலை மிகவும் கனமாக இருந்தது. இரண்டு பேரும் சேர்ந்து அதை இழுத்துக்கொண்டு வர வேண்டியிருந்தது. இப்படித்தான் சாக்ரடீஸ் சிலையோடு ஒவ்வொரு விடுதியாகச் செல்லவேண்டியிருந்தது. சாக்ரடீஸை பிரத்யேக இருக்கையில் அமரச்செய்தனர். பரிசாரகர் வரும்போது மூன்று கிளாஸ்கள் ஆர்டர் செய்தனர். சாக்ரடீஸ் மதுக்கோப்பையுடன் ஞானம் சுரக்க அமர்ந்திருந்தார். பின்னர் மலிவுவிலை மதுவிடுதி ஒன்றில் ஜிப்சிகள் இசைக்க, சாக்ரடீஸூடன் இரண்டு குடிகாரிகளும் சேர்ந்து ஆடினார்கள். அவர்களுக்கு புதிய நண்பரை மிகவும்  பிடித்துவிட்டது. அவர்கள் சாக்ரடீஸுக்கு முத்தம் கொடுத்தபடி ஒயினையும் குடிக்கவைத்தனர். சாக்ரடீஸ் வாயெல்லாம் சிவப்பாகிவிட்டது. வாய் உடைந்து வழிவது போன்ற சிவப்பு. விடியல் வந்தவுடன் டிராம் பாதை நிறுத்தமொன்றில் சாக்ரடீஸைக் கைவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். 2-ம் எண் கொண்ட டிராம் வண்டியின் கதவுகள் திறக்கின்றன. உறக்கம் கவிழ்ந்த முகங்களுடன் இறங்கும் தொழிற்சாலைப் பணியாளர்களை,...

எனக்குக் கிடைத்த ஜெர்மன் தலைக்கவசம் – சார்லஸ் சிமிக்

உலகம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும்போது வயலினில் கீரீச்சிடும் சத்தங்களை எழுப்பிக்கொண்டிருந்தான், குழந்தை நீரோ. நான் மார்க்கெட்டுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, சாக்கடையில் தொண்டை வெட்டுண்டு கிடப்பவர்களை ஒருமுறை பார்த்தேன். பின்னர் ஒருநாள் பேன்கள் மண்டிய ஜெர்மன் தலைக்கவசம்  எனக்குக் கிடைத்தது. என் குடும்பத்தில் பிரபலமான கதையாகவும் அது ஆனது. போருக்குப் பின்னரான அந்தச் சில்லிடும் பசிகொண்ட குளிர்காலங்களில் கரியடுப்பைச் சுற்றி நெருக்கமாக அமர்ந்து நள்ளிரவு வரை எல்லாரும் வருத்தத்தோடு பேசிக்கொண்டிருந்ததை நான் நினைவுகூர்கிறேன். அப்போது யாராவது ஒருவர் இரவின் நடுவிலோ ஆரம்பத்திலோ பேன்கள் மண்டிய எனது ஜெர்மன் தலைக்கவசத்தை நகைச்சுவைக்காக எடுத்துவந்து தருவது வாடிக்கையாக இருந்தது. பேன்கள் மண்டிய ஜெர்மன் ஹெல்மட்டை அணிந்துகொண்டு அலையும் அளவுக்கு நான் முட்டாள் பையனாக இருந்தேன். முதியவர்கள் அந்தக் காட்சியைக் கண்டு கண்களில் நீர்வரச் சிரிப்பார்கள். பேன்கள் தலைக்கவசத்தை நிறைத்து ஊர்ந்துகொண்டிருக்கும். ஒரு குருடனால் கூட அவற்றின் ஓட்டத்தைப் பார்க்க முடியும். நான் எதுவும் பேசாமல் அங்கே உட்கார்ந்திரு...

அப்பா பிடித்த பன்றிக்குட்டி – சார்லஸ் சிமிக்

இரவு விருந்துகளுக்கான கருப்பு கோட்(TUXEDO SUIT) அணிந்து  எனது தந்தை கையிடுக்கில் பன்றிக்குட்டியுடன் போஸ் கொடுத்த புகைப்படம் என்னிடம் உண்டு. அவர் ஒரு மேடை மீது நிற்கிறார். கழுத்தில் அதீத இறக்கத்தில் வெட்டப்பட விருந்து கவுன்களுடன், களுக்கென சிரித்துக் கொண்டிருக்கும் இரண்டு இளம்பெண்களோடு, அவர் அப்படத்தில் நிற்கிறார். அவரும் சிரித்துக்கொண்டிருக்கிறார். பன்றியின் வாயோ திறந்துள்ளது. ஆனால், அது சிரிப்பதுபோலத் தெரியவில்லை.  அது ஒரு புத்தாண்டு விருந்து. 1926-ம் ஆண்டு. நைட் கிளப் ஒன்றில் அவர்கள் இருந்திருக்க வேண்டும். நள்ளிரவில் விளக்குகளை அணைத்தபின்னர் அந்தப் பன்றிக்குட்டி அங்கே ஓடிவந்திருக்க வேண்டும். அங்கு ஏற்பட்ட குளறுபடியில்  கதறல் ஒலி எழுப்பும் பன்றியை எனது அப்பா பிடித்திருக்க வேண்டும். தற்போது அந்தக் குட்டி அவருடையது. பரிசாகரிடம் கேட்டு வாங்கி ஒரு கயிறை அவர்கள் குடித்துக்கொண்டிருந்த மேஜையில் கட்டிவிட்டிருக்கிறார். அவரும் அந்த இளம்பெண்களும் கயிற்றில் கட்டப்பட்ட பன்றியும் அந்த இரவு முழுக்க வெவ்வேறு இடங்களுக்குச் சென்று குடித்துள்ளனர். பன்றிக்குட்டிக்கும் அவர்கள் சாம்பெய்ன் வாங...

ஓவியர் ஜெயராஜ் – தமிழ் வாழ்க்கையின் மைக்கேல் ஆஞ்சலோ

தமிழ்நாட்டில் சில ஆயிரங்கள் கணக்கில் வாசகர்களிடம் புழங்கி, அதிகார, ஆட்சி செல்வாக்கு இல்லாத மணிக்கொடி, எழுத்து, கசடதபற சிறுபத்திரிகைகளும் அதில் வந்த படைப்புகளும் ஆவணமாக்கத்துக்கும் விரிவான ஆய்வுகளுக்கும் உள்ளாகியிருக்கின்றன. ஆனால், வெகுஜன அரசியலும் வெகுஜன சினிமாவும் வெகுஜனப் பத்திரிகைகளும் அன்றாட உணவாகவும் பேச்சாகவும் மூச்சாகவும் இருந்த ஒரு நூற்றாண்டு தமிழ் வாழ்க்கையில் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஒரு சினிமா போஸ்டர் கூட ஆவணப்படுத்தப்படவில்லை. குமுதம், ஆனந்த விகடன் தொடங்கி சரோஜாதேவி வரை சென்ற நூற்றாண்டில் நம் தமிழ் சமூகம் நவீனமடைந்த வரலாற்றைக் காட்டும் வெகுஜன பத்திரிகை எழுத்து, சித்திரங்கள் ஆகியவற்றுக்கு பதிவே இல்லாமல் பெரும் மறதியின் புதைசேற்றில் உள்ளன. சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் ஆண்கள், தமிழ் பெண்கள், அணிந்த ஆடைகள், புழங்கிய வீடுகள், பயணித்த வாகனங்கள் ஆகியவற்றுக்கு நம்மிடம் இருக்கும் அரிதான ஆவணங்களில் ஒன்றான ஓவியர் ஜெயராஜின் சித்திரங்களும் அப்படித்தான் நமது மறதிக்குள் போய்விட்டன. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 86 வயதில் மனைவி ரெஜினாவுடன் சென்னை சூளைமேட்டில் உள்ள வீட்டி...

சபரிநாதனின் 'துஆ’

  இறால் , தனது உடலை இழந்து , வெறும் கூடாக எஞ்சும்போதும் புறநிலையில் எப்படி இறாலாகவே தோற்றம் அளிக்கிறது ? அக்கூடு வெறும் அரண் மட்டும் அல்ல. உள்பகுதியை இழந்தபிறகு , இறாலின் தோடு ஒரு   நுட்பமான ஆபரணமாகிவிடுகிறது. இறாலின் தன்னிலையும் அதில் வெளிப்படுகிறது. ஆபரணத் தன்னிலை ; ஆனால் சாரம் இறங்கியது.   இறாலற்ற ஓர் இறால். எர்னஸ்ட் ஹெமிங்வேயின் “பெரிய இரட்டை இதய நதி” ( Big Two-Hearted River) சிறுகதையில் நாயகன் நிக் , ட்ரவுட் ( TROUT) மீனைப் பிடித்து , அதன் உட்புறம் , நாக்கு , செவுள் எல்லாவற்றையும் அனாயசமாக அகற்றி , கழுவியபிறகும் அவனுக்கு அது உயிருள்ள ட்ரவுட் மீனைப்போலவே தெரிகிறது. இறாலில் தோடோ அல்லது ஹெமிங்க்வேயின் டிரவுட் மீனோ , இரண்டுமே   உள்ளடக்கமே இல்லாத நுட்பமான செறிவான தன்னிலைகள். தன் சமீபத்திய கவிதை நூலான “துஆ”வில் , இல்லாமல் இருக்கிற அந்த தன்னிலையினையே , சபரிநாதன் அடைந்துள்ளார். இத்தொகுப்பில் தன்னிலையைத் துறந்த பாவனையில் நாடகங்களை நிகழ்த்தி , தன்னிலையை பல நிலைகளில் வெளிப்படுத்தும் பிரயத்தனத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். தன்னிலையை வேறுவேறு காலங்களிலும் பருவங்களிலும் நி...