ஆம் இவர்கள் இன்னொரு கிரகத்தில் இருந்து வந்த பறவைகள் இவ்வுலகின் களங்கம் ஏறா கண்கள் எங்கோ மிதக்க ஏன் வெயிலில் பேருந்து நிறுத்தங்களில் புழுக்கம் கொண்ட சமையலறைகளில் அலுவலகங்களில்
ஷங்கர்ராமசுப்ரமணியன் முண்டகக்கண்ணி அம்மன் ரயில் நிறுத்தத்துக்குள் ரயில் நுழைகிறது ரயில் நிற்காத யாரும் ஏறாத இறங்காத ஸ்டேசன் அது. அங்கே இதுவரை காதலிக்கவில்லை குறுஞ்செய்திகளைப் பரிமாறவில்லை எதையோ தொலைத்துவிட்டு பிளாட்பாரத்தில் நின்று அழுததும் இல்லை யாரும் ஆனாலும் முண்டகக்கண்ணி அம்மன் ரயில் நிலைய இருட்டை ரயில் சற்று மெதுவாகவே கடக்கிறது.