Skip to main content

Posts

Showing posts with the label அஞ்சலி

நிகழை மறுத்த ஸ்ரீ ரங்கம் கண்ணன்

டி. கண்ணன் இறந்தபின்னால் சமீபத்தில் ஒரு கனவு.  ‘திருநெல்வேலியில் பழைய வீடுகளை இன்னும் கொண்டிருக்கும் தெருக்களில் ஒன்றான தெற்கு புதுத் தெருவில், நானும் கண்ணனும் போய்க்கொண்டிருக்கிறோம். அவரது மரணத்துக்குப் பிறகு முகநூலிலும் வாட்ஸப்பிலும் நண்பர்கள் பகிர்ந்த ஒரு புகைப்படத்தில் அணிந்திருந்த அழகிய ஜிப்பாவை அணிந்திருக்கிறார். கந்தர்வன் போல எழில்குறையாமல் நடந்துவருகிறார். ஒரு பழைய பாணி கட்டடத்துக்குள் நுழைகிறோம். பகல்வேளையிலும், நித்தியமான ஒரு சாயங்காலத்தை உருவாக்கும் மஞ்சள் கண்ணாடிக்கூண்டு விளக்குகளோடு, அந்த கட்டடத்தின் பிரதான அறை இருந்தது. அதன் ஒருபக்கத்தில் பெண்கள் பெரிய பெரிய கண்ணாடி குடுவைகளுக்குப் பின்னால் பலகாரங்களை அடுக்கிக் கொண்டிருக்கின்றனர். “இது அருமையான பட்சணக் கடைப்பா” என்று சொல்லி, புராதனமானதாகவும் மனதுக்கு இதமாகவும் தோன்றும் மர மேஜை நாற்காலிகளில் ஒன்றில் உட்கார வைத்தார். அந்த அறையில் தைலம் போல வழிந்துகொண்டிருந்த பொன்னொளியில் கண்ணனைப் பார்த்தபடி இருக்கிறேன்.’ இந்தக் கனவின் உள்ளடக்கத்தோடு தொடர்புடைய பண்பு உள்ளவர் டி.கண்ணன். நிலையான வேலையோ இருப்பிடமோ அமையாத சூழலில், குடி, உணவு...

வலிகளுக்கு விடைசொல்லிப் போய்விட்டார் ரமேஷ்

பிரேம், ஷங்கர், ரமேஷ் (புகைப்படம்:குட்டி ரேவதி, 2002) சென்ற நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் அமைப்பியல், பின் நவீனத்துவம் சார்ந்த கோட்பாட்டு எழுத்துகளை அறிமுகப்படுத்தியவர்களே, கூடுதல் பரபரப்போடும் மேட்டிமைத்தனத்தோடும் வன்முறையோடும் தங்கள் எழுத்துகள் வழியாக வெளிப்பட்டுக்கொண்டிருந்த சிறுபத்திரிகை சூழலில் அழுத்தமாக அறிமுகமான பெயர்களில் ஒன்று ரமேஷ்-பிரேம். அ.மார்க்ஸ், ரவிக்குமாரின் எழுத்துகள் நன்றாகத் தொடர்புறுத்துபவை. பூக்கோவையும், ரோலன் பார்த்தையும், ஆஷிஸ் நந்தியையும், காப்ரியேல் கார்சியா மார்க்வெஸையும், பின்னர் ஆங்கிலம் அறிந்தபின்னர் படித்தபோது இவர்கள், அந்த ஆசிரியர்களுக்குச் செய்தது எத்தனை பயங்கரமென்று உணரமுடிந்தது.  ரமேஷ்- பிரேம் இருவரும் சேர்ந்து எழுதிய ‘கிரணம்’ குறுங்காவியம் என்னை முழுமையாக ஈர்த்த படைப்பு. புரிந்தும் புரியாமலும் அச்சத்துடனும் ‘ புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும் ’ நாவலையும், ‘ஆதியிலே மாமிசம் இருந்தது’ நாடகங்களையும் வாசித்திருக்கிறேன். ‘புதைக்கப்பட்ட மனிதர்களும் எழுதப்பட்ட மனிதர்களும்’ நாவலின் அட்டைப்படத்தில் உள்ள தாழியில் வைக்கப்பட்ட சடலத்தின் கோரமான...

போய் இருங்கள் டி. பி. ராஜீவன்

சென்னையில் மழை சில நாட்களுக்குள்ளேயே வீட்டையும் மனத்தையும் ஆக்கிரமித்து இந்த வருடத்து நவம்பர் மாதத்தையும் எனக்கு நரகமாக்கியுள்ள நிலையில், ஜெயமோகனின் இணையத்தளம் வழியாகத் தெரிந்துகொண்ட மலையாளக் கவிஞர் டி. பி. ராஜீவனின் மரணச் செய்தி, உள்ளே எங்கோ அறுத்துக் கொண்டே இருக்கிறது. டி. பி. ராஜீவன் தனது மரணப்படுக்கையில் எழுதிய இறுதிக் கவிதை அவரது ஆழமான நகைப்பைத் தவறவிடவில்லை. விடுதலை, மீட்சி என்று நாம் நம்பிய மார்க்கங்கள் அனைத்தும் என் ஜி ஓ தன்மையாக மாறியிருப்பதுதான் இந்த நூற்றாண்டு நமக்குத் தந்த பரிசு. சென்ற நூற்றாண்டின் விடுதலைக் கருத்தியல், இறக்கும்போது ஈன்றுவிட்டுப் போன சவலைக் குழந்தைதான் இந்த என்ஜிஓ ஆக்கம். புற்றுநோய்க்கு தொடு சிகிச்சை செய்ய அந்த நோயாளியின் கையைக் கேட்கும் அவலம் தான் இந்த என்ஜிஓ ஆக்கம். இடதுசாரி அரசியல் தொடங்கி சினிமா, எழுத்து வரை இந்த என் ஜி ஓ ஆக்கத்தின் ஆக்கிரமிப்பே நம்மை அனுதினமும் தோற்கடித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆக்கம் கெட்ட குழந்தையை வைத்துக் கொண்டு நம் மேல் இன்று கவிழத்துடிக்கும் கொடுங்கோன்மையை எதிர்த்துப் போரிடவே முடியாது. அதைத்தான் ‘தூமோர்ணையாக’ப் பார்த்து மரணத்தி...