வேதாகமம் தொடங்கி ஆட்டோவின் முதுகு வரை நுண்மொழிகளும் பொன்மொழிகளும் நமக்கு இன்றைக்கும் அன்றாடத் தேவையாகவே உள்ளது. க்ஷணப் பொழுது உண்மைகள், நித்திய உண்மைகள், அவரவர் தொடர்புடைய, அவரவரின் அவ்வப்போதுடன் தொடர்புடைய அனுபவத்தைச் சார்ந்த உண்மைகளைப் பிரதிபலிப்பதாக இந்த நுண்மொழிகள் இயங்குகின்றன. ‘சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும். கர்த்தரைத் தேடுகிறவருகளுககோ ஒரு நன்மையும் குறைவுபடாது.’ பாளையங்கோட்டைக்குள் நுழையும்போது, தேவாலயச் சுவரில் பேருந்து கடக்கும்போதெல்லாம், சிறுவயதில் என் மீது தாக்கம் செலுத்திய இந்த வரிகள் இப்போது ஒன்றும் செய்யாது. அப்படியா என்று கேட்டுவிட்டுக் கடந்துவிடுவேன். எனது கருத்துலகம், படைப்புலகத்தை வடிவமைத்த ஆசிரியர்களில் ஒருவரான காஃப்காவின் நுண்மொழிகள் புத்தகத்தை வாசித்து முடித்தபோது, பல நுண்மொழிகள் அந்தரங்கத் தன்மை கொண்டவை. எனக்கு அவை எதையும் தொடர்புறுத்தவில்லை. ஆனால், காஃப்காவின் உலகில் உள்ள வஸ்துகள், தொடர்ந்து அவரைப் பாதிக்கும் விஷயங்கள் உண்டு. காகம் தென்படுகிறது. காஃப்காவின் வாழ்க்கையிலேயே அமைதியும் மகிழ்ச்சியும் நிலவிய காலத்தில் எழுதப்பட்டது என