Skip to main content

Posts

Showing posts from January, 2018

ஓஷோவின் முல்லா நஸ்ரூதின்

முல்லா நஸ்ரூதின் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார் . வீட்டிலிருந்து அவசரமாகத் தந்தி ஒன்று வந்ததால் அவசர அவசரமாக பெட்டி படுக்கைகளைக் கட்டி , ரயிலைப் பிடிக்க தரைத்தளத்திற்கு வந்தார் . கட்டணத்தைச் செலுத்தி ரசீதை வாங்கியபிறகு , காரில் ஏறப்போகும்போதுதான் அவருக்கு தன் குடையை அறையிலேயே தவறவிட்டு வந்தது தெரியவந்தது . முல்லா நஸ்ரூதின் விடுதிக்குள் நுழைந்து லிப்டில் ஏறி தனது அறைக்குச் சென்றார் . 14- வது மாடி அது . முல்லா தங்கியிருந்த அறை ஏற்கனவே ஒரு புதுமணத் தம்பதிகளுக்கு ஒதுக்கப்பட்டிப்பதாக தகவல் தெரிய முல்லா தன் அறையின் முன்னால் என்ன செய்வதென்று தெரியாமல் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தார் . ரயிலுக்குச் சீக்கிரமே கிளம்பவேண்டிய நெருக்கடி இருப்பினும் முல்லாவால் சபலத்தைக் கைவிட முடியவில்லை . அறையின் கதவுத் துவாரம் வழியாக உள்ளே நடப்பதைப் பார்க்கத் தொடங்கினார் .   அவர்கள் புதுமணத் தம்பதிகள் . திருமணச் சடங்குகளால் மிகவும் களைப்படைந்து , விருந்தினர்கள் உறவினர்களின் தொல்லையில்லாமல் அப்போ

கண்ணீரைச் சிரிப்பாக்கிய அகதி

கனடாவில் வாழும் இலக்கியச் செயல்பாட்டாளரும், ‘காலம்’ இதழின் ஆசிரியருமான செல்வம் அருளானந்தம், இலங்கையிலி ருந்து பாரீஸுக்குப் போய் வாழ்ந்த ஒன்பது வருட அனுபவங்களை நினைவுத் தீற்றல்களாக எழுதியுள்ள நூல் ‘எழுதித் தீராப் பக்கங்கள்’. பெரும்பாலும் இந்திய, தமிழக வாழ்வையொத்த குடும்பம், ஊர், சாதிசனம் என்ற குண்டான்சட்டி பரப்பளவே கொண்ட ஒரு சம்பிரதாயமான யாழ்ப் பாண வாழ்க்கையிலிருந்து உயிர்பயம் துரத்த எல்லைகளையும் கடல்களையும் கடக்க நேர்ந்த அகதியின் குறிப்புகள் இவை. கவிஞர் பிரமிளின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘ஒரு சமூகத்தின் உயிரை இருபத்தி நாலு மணிநேரமும் இருள் சூழத் தொடங்கிய காலத்தில்’ யாழ்ப் பாணத்திலிருந்து புறப்பட்ட முதல் தலைமுறை அகதிகளில் ஒருவர் செல்வம். இன ஒடுக்குமுறையாலும் முரண்பாடுகளாலும், வரைபடத்தில் கூட முன்னர் பார்த்தறியாத நாடுகளை நோக்கித் துரத்தப்படும் ஒரு அகதியின் கண்ணீர் உலர்ந்த சிரிப்பை ஒவ்வொரு அத்தியாயத்திலும் உணர முடிகிறது. ‘எழுதித் தீராப் பக்கங்கள்’ நூலை சுவாரசியமான கேலிச் சித்திரங்களின் தொகுப்பு என்று சொல்லலாம். பிறரைக் கண்டு சிரிப்பது போன்றே தன்னைப் பார்த்தும் சிரிக்கத் த

ஒரு தொலைவிலிருந்து ஞாநி

தாம் கொண்ட கருத்தியலையும் தமது தனி வாழ்க்கையையும் வேறுவேறாகப் பார்க்கவியலாத இலட்சியவாதத் தலைமுறை ஒன்றின் பிரதிநிதி ஞாநி. சினிமா, அரசியல், எழுத்து அனைத்துமே கேளிக்கையை மையமாகக் கொண்டு வெகுஜனக் கலாச்சாரத்தைத் தீர்மானித்த 1970, 80-களில் இலக்கியம், கலை, அரசியல், சிந்தனைத் துறைகளில் எந்த உடனடிப் பயனையும் கருதாது சொந்த நஷ்டங்களைப் பொருட்படுத்தாது ஈடுபட்டவர்களில் ஒருவர். பெண்ணியம், பெரியாரியம், சுற்றுச்சூழல், தலித்தியம், மாற்றுக் கல்வி, மாற்று மருத்துவம், விளிம்பு நிலை அரசியல், தீவிர இலக்கியம் போன்றவை மீது இன்று அரசுக்கும் வெகுஜன ஊடகங்களுக்கும் வெகுமக்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அக்கறைக்கு இவர்கள்தாம் காரணம். மென்மை, மிதம், தீவிரம் என அடையாளப்படுத்த முடியுமே தவிர, இந்த ஆங்க்ரி யங்மேன்கள் எல்லாரையும் மார்க்சியம் பாதித்திருந்தது. இவர்கள் அனைவரும் உயர், மத்தியதர வர்க்க, முன்னேறிய சமூகங்களிலிருந்து வந்த இளைஞர்களாகவே பெரும்பாலும் இருந்துள்ளனர். ஞாநியைப் பொறுத்தவரை எந்தத் தீவிரமான விஷயமும் வெகுமக்களைச் சேரும் விதமாக இருக்க வேண்டும் என்பதே அவரது பிரதான வேலைத் திட்டமும் நோக்கமுமாக இருந்தது. ‘தி

அவளுக்குக் காயம் படுவதில்லை

சைக்கிள் ஓட்டத் தொடங்கி ஆறு மாதங்களான பிறகு எனது பன்னிரெண்டு வயது மகள் முதல்முறையாக காயம்படும் அளவுக்கு நேற்றுத் தான் விழுந்தாள். அடிபடுவதும் காயங்களும் தொடர் நினைவுகளாக இருந்த எனது தலைமுறையின் ஞாபகம் எனக்கு வந்தது. அவள் காண்பித்த காயங்களை விட, அவளுக்கும் அந்தக் காயங்களுக்கும் இருக்கும் இடைவெளி மீது எனது கவனம் குவிந்தது. அந்த இடைவெளியில் தான் நான் காண்பிக்க வேண்டிய அதிர்ச்சியின் அசலும் கனமும் குறைந்திருக்க வேண்டும். அவள் என்னைப் போல அடிக்கடி காயப்படுவதுமில்லை.    பிறந்து மொழி பயிலத் தொடங்கும் முன்னர், தவழத் தொடங்கிய போதே எனது தங்கை, கழற்ற இயலக்கூடிய அடிபம்பை இழுத்துப்போட்டுக் கன்னத்தைக் கிழித்துக் கொண்டாள். அவள் முகத்திலும் எனது  நினைவிலும் அந்த நாளும் அந்தத் தருணமும் உறைந்திருக்கிறது. அரசு மருத்துவமனையின் திறந்த ஜன்னல் வழியாக அவளுக்குத் தையல் போட்டதை அழுதுகொண்டே பார்த்த ஞாபகமும் இருக்கிறது. பென்சில் சீவும் போது கையை நடுவில் விட்டு எலும்பு தெரிய வெள்ளையாகப் பிளந்து ரத்தமாகப் பொழிந்த என் நடுவிரல் இன்னமும் ஞாபகத்தில் உள்ளது. சைக்களிலும் கிரிக்கெட்டும் சிரங்கும் ஏற்படுத்தியவை