Skip to main content

Posts

Showing posts with the label கவிதைகள்

பூனைச் சதுக்கம் கவிதைகள்

ஷங்கர்ராமசுப்ரமணியன் உதிர்ந்த கொன்றைப் பூக்களுக்கு அடியில் தெரு நிசப்தத்துடன் இருப்பதைப் பார்த்தபடி காலை நடைபயிற்சிக்குச் சென்றபோது தகரக் குப்பைத் தொட்டிக்கு அருகே முளைத்தது போல வெறித்துக் கொண்டிருந்தது சாம்பல் நிறப் பூனையொன்றின் துண்டிக்கப்பட்ட தலை. எல்லாம் திடுக்கிட்டு அதிர திரும்பப் பார்க்காமல் நடந்தேன் வலதுகை தூக்கி இருக்கிறதாவென்று தொட்டுப் பார்த்தேன் வெட்டப்பட்ட என் கழுத்து தெரு மண்ணில் நரநரக்கிறது அகப்பட்ட பூனையின் சீற்றச் சீறல்கள் என்னைத் துரத்தத் தொடங்கியது உடல் துவங்கி மீசைரோமம் வரை ரூபம் பெருக்கிக் காட்டும் ஆகிருதியும் ஆவேச மியாவ்களும் என்னைச் சிலிர்ப்பித்தது சாலையின் குறுக்கே மறித்தாரோ காம்பவுண்ட் சுவரில் பிடித்தாரோ கணிப்பொறி திரையிலிருந்து உந்துதல் அடைந்தாரோ கறிவெட்டும் பலகையில் அரிந்தது போல் நேர்த்தியாய் வெட்டியவரின் சாகசமும் சேர்த்து என்னை உலுக்கியது வெட்டப்பட்ட பூனையின் தனிமை அவனது தனிமை பூனையின் இருட்டு அவனின் இருட்டு பூனையின் வீரம் அவனின் வீரம் அனைத்தும் இந்தக் கிரகத்தில் நடந்த ஆதிக்கொலை...

காதல் அற்ற காதல் கவிதைகள்

இந்தக் கோடை எந்த நினைவுகளின் மேலும் சாய்ந்து இளைப்பாறவோ துக்கப்படவோ அனுமதிக்கப் போவதில்லை பழுத்து உதிர்ந்து வேனலின் நீராவிக் கலத்தில் அவியும் இலைகளின் மணத்தை நான் அப்படியே முகரவேண்டும் அதிகாலையில் ஆறுதலாகப் பெய்யும் பின்பனிக்கு என் உடலை எந்த முன்ஞாபகங்களுமின்றி சுத்தமாகத் துடைத்துத் தர வேண்டும் ஒரு பறவையை அதன் வாலின் துடிப்போடு நிகழ்கணத்தில் அப்படியே பார்க்கவேண்டும் கடக்கும் பெண்ணின் உடல் எழிலை குட்டிக் குழந்தைகளை தன்னிரக்கமின்றி ரசிக்க வேண்டும் சென்றவளின் சுவடின்றி இந்தக் கோடை தரும் காதலுணர்வை என் உதடுகளை நானே தடவி ருசிப்பதைப் போல நான் தனியே சுவைக்க வேண்டும் இந்தக் கோடையில் பெருகி என்னைக் கொல்லும் ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டு அழித்து மீண்டும் ஏகாந்தத் தனியனாக வேண்டும் . தெரியாதா பேரன்பே தெரியாததன் பெருந்துளையிலிருந்து தானே அவள் வந்தாள் வந்த துளைக்குள்ளேயே அவளும் மறைந்து போனாள் காதலும் மறைந்தது தெரியாததற்குள் நீ இதுவரை எதையெல...