Skip to main content

Posts

Showing posts with the label ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்

புராணக்கதை - ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்

  ஆபேலின் மரணத்துக்குப் பிறகு காயினும் ஆபேலும் தற்செயலாகச் சந்தித்துக் கொண்டனர். அவர்கள் பாலைவனத்தினூடாக நடந்துகொண்டிருந்தபோது, இருவருமே நெடியவர்கள் என்பதால், தொலைவிலேயே ஒருவரையொருவர் இனம்கண்டு கொண்டனர்.  தரையில் இரண்டு சகோதரர்களும் அமர்ந்து நெருப்பை உண்டாக்கிச் சாப்பிட்டனர். அந்திசாயத் தொடங்கியபோது, களைப்புற்றவர்கள் எல்லாரும் செய்வதைப் போல், அவர்கள் மௌனமாக அமர்ந்திருந்தனர். வானில் ஒரு நட்சத்திரம் சுடர்ந்தது, ஆனால் அதற்கு இன்னும் ஒரு பெயர் வழங்கப்படவில்லை. காயின், ஆபெலின் நெற்றியில் கல்பதிந்த தடத்தை நெருப்பொளியில் கண்டு, வாய்க்குக் கொண்டுபோகவிருந்த ரொட்டியைக் கீழே போட்டுவிட்டு, தனது சகோதரனிடம் மன்னிப்பைக் கோரினான். “நீதான் என்னைக் கொன்றதா, அல்லது நான் உன்னைக் கொன்றேனா?” ஆபேல் பதிலளித்தான். “எதுவும் எனக்கு ஞாபகத்தில் இல்லை; இப்போது நாம் இங்கே சேர்ந்து அமர்ந்திருக்கிறோம், முன்பைப் போல.” “நீ என்னை மெய்யாகவே மன்னித்துவிட்டாயென்று இப்போது நான் தெரிந்துகொண்டேன்” காயின் கூறினான். “ஏனெனில் மறப்பதுதான் மன்னிப்பதாகும். நானும் மறக்க முயற்சிப்பேன்.” “ஆம்” என்றான் ஆபெல் மெதுவாக. “உறு...

ஒவ்வொரு எறும்பும், ஷேக்ஸ்பியரைப் போல அல்லது வால்ட் விட்மனைப் போல - ஹோர்ஹெ லூயி போர்ஹெஸ்சின் கடைசி நேர்காணல்

  ஞானக்கூத்தன் தனது வாழ்வின் சாயங்காலத்தில் எழுதிய கவிதைகளில் 12 வயதுச் சிறுவனின் களங்கமின்மையும் விந்தையும் சிரிப்பும் கூடிவந்தது. அவரது முந்தைய முத்திரைகளாக இருந்த விஷமமும் குத்தலும் நீங்கிய கனிவை அந்தச் சிறுவன் பெற்றிருந்ததை ‘பென்சில் படங்கள்’, ‘இம்பர் உலகம்’ கவிதைத் தொகுதிகளில் காண முடிந்தது. ஹோர்ஹெ லூயி போர்ஹெஸ் , இறுதியாக அளித்த நேர்காணலை வாசித்தபோது ஞானக்கூத்தனின் அந்த இயல்புதான் ஞாபகத்துக்கு வந்தது. ஹோர்ஹெ லூயி போர்ஹெஸ் சின் விந்தை, அநிச்சயம், நகைச்சுவை, பரிவு, நெகிழ்ச்சி, நிறைவை வெளிப்படுத்தும் முழுமையான நேர்காணல் இது. 12 ஆண்டுகள் உடன் வாழ்ந்து மறைந்த செல்லப் பூனை, காதல்கள், அம்மாவின் மீது இறுதிவரை கொண்டிருந்த பிரியம் என எல்லா ரசங்களும் வெளிப்படும் நேர்காணல் இது. லோபஸ் லெக்யூப்க்கு இந்த நேர்காணலை அளித்துள்ளார்.   பார்வையின்மை தொடர்பான பேச்சிலிருந்து அந்த நேர்காணல் தொடங்குகிறது. பார்வையிழப்பு ஏற்பட்டவுடன் அவரிடம் மிஞ்சியிருந்த ஒரே நிறம் என்று மஞ்சளைக் குறிப்பிடுகிறார். தான் அறிந்த முதல் வண்ணம் என்று மஞ்சளைக் குறிப்பிட்டு அதை மிருகக் காட்சி சாலையில் புலிகளிடம் பார...

தெரிந்தது அந்த இன்மை - ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்

அமைதி மற்றும் தெளிவுடன் இருப்பதை நிலவு அறியாது மணலும் அறியாது தான் மணல் என்று. உடனேயோ எப்போதுமோ எந்த வஸ்துவும் அறியப்போவதில்லை இங்கு அலாதி வடிவத்தோடு இருப்பதை. யானைத் தந்தத்திலிருந்து உருவாக்கப்பட்ட காய்கள் தெரியாத சதுரங்கத்திலிருந்து மிகத் தொலைவில் உள்ளன அவற்றை வழிநடத்தும் கையிலிருந்து, முதல் நகர்த்தலிலிருந்து. குறுகிய மகிழ்ச்சி நீடித்துறையும் வேதனையாலான மனிதவிதி ஒருவேளை இன்னொருவரின் கருவியாக இருக்கலாம். நம்மால் அறியமுடியாது. அதற்கு கடவுளின் பெயரைக் கொடுப்பதும் உதவாது. அச்சம், சந்தேகம், நம்மால் முடிக்க இயலாத மதியவேளைப் பிரார்த்தனை எல்லாமும் வீண். நான் என்ற அம்பை எந்த நாண் விடுவித்திருக்கும்? அந்தக் கரத்தின் இலக்கு எந்த உச்சமாக இருக்கும்?

போர்ஹெஸ் என்னும் முடிவற்ற புத்தகம்

தமிழ் நவீன இலக்கிய வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒருவர் ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ். தன் வாழ்க்கையில் ஒரு நாவல்கூட எழுதியிராத போர்ஹெஸ், லத்தீன் அமெரிக்க நாவலின் தந்தை என்று கருதப்படுகிறார். சிறுகதைகளிலேயே நாவலுக்குரிய சம்பவங்களையும் சாத்தியங்களையும் கையாளக்கூடிய போர்ஹெஸ், நாவலின் அனுபவப் பிரம்மாண்டத்தையும் அதன் முடிவின்மையையும் உணரவைப்பதில் வல்லவர். மனிதர்கள் தம் எண்ணங்கள் வழியாகவும், கருத்துருவங்கள் வழியாகவும், கனவுகள் வழியாகவும் வாழும் பாகுபாடற்ற தனிப் பிரபஞ்சங்களை போர்ஹெஸின் புனைவுகளில் பார்க்கலாம். நன்மை, தீமை, மகிழ்ச்சி, துக்கம் முதலியவை அவர் உலகில் தற்செயல்களே. போர்ஹெஸ் ஒன்பது வயதில் ஆஸ்கர் வைல்டின் ‘தி ஹேப்பி பிரின்ஸ்’ படைப்பை மொழிபெயர்த்தவர்; 12 வயதில் ஷேக்ஸ்பியரின் அத்தனை படைப்புகளையும் ஸ்பானிய மொழியிலும் ஆங்கில மொழியிலும் படித்துத் தேர்ந்தவர். ஆயிரக்கணக்கான நூல்கள் கொண்ட தந்தையின் வீட்டு நூலகம்தான் தன் வாழ்வின் முக்கியமான நிகழ்வு என்று போர்ஹெஸ் கூறுகிறார். அந்த நூலகத்திலுள்ள கலைக்களஞ்சியங்களையும் பிரிட்டிஷ், அமெரிக்க இலக்கியங்களையும் வாசித்து, உலகை அளந்த அனுபவம் கொண்டவர்....

இனவரைவியலாளர் - ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்

     அது டெக்சாசில் நடந்ததாக எனக்குச் சொல்லப்பட்டது. ஆனால் இன்னொரு மாநிலத்தில் நடந்த சம்பவம் அது. அந்தச் சம்பவத்தில் ஒரேயொரு முதன்மைப் பாத்திரம்தான் (ஒவ்வொரு கதையிலும், ஆயிரக்கணக்கான முதன்மைப் பாத்திரங்கள், தெரிந்தும் தெரியாமலும் உயிருடனும் இறந்தும் இருக்கத்தான் செய்கிறார்கள்). அந்த மனிதனின் பெயர், ஃப்ரெட் முர்டாக் என்று கருதுகிறேன். அவன் அமெரிக்கர்களைப் போலவே உயரமானவன்; அவனது முடி பொன்னிறமும் அல்ல, கருப்பும் அல்ல, அவனது தோற்றம் கூர்மையானது, அவன் மிகவும் குறைவாகவே பேசினான். குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த அம்சமும் அவனிடம் இல்லை. இளைஞர்கள் வெளிப்படுத்தும் பாவனையான ஒரு தனித்தன்மைகூட அவனிடம் இல்லை. இயல்பாகவே அவன் மரியாதையுடையவனாக இருந்தான். அத்துடன் அவன் புத்தகங்களையோ அவற்றை எழுதிய ஆண்கள் மற்றும் பெண்கள் மீதோ அவநம்பிக்கை கொண்டவனாக இல்லாமல் இருந்தான். இன்னமும் தான் யார் என்பதை அறியாத வயதில் அவன் இருந்தான். எனவே, தன் வழியில் என்ன வாய்ப்புகள் முன்வைக்கப்படுகின்றனவோ அதற்குள் தன்னைச் செலுத்திக்கொள்வதற்குத் தயாராக இருந்தான் - பாரசீக மறைஞானம் அல்லது ஹங்கேரியர்களின் அறியவராத பூர்...

கவிதை என்னும் இறகு போன்ற வஸ்து - ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்

கவிதை என்பது ஒருவகையில் மிகவும் அந்தரங்கமானது, அத்தியாவசியமானது என்று நம்புகிறேன். அதை அதீதமாக எளிமைப்படுத்தாமல் அதை வரையறுக்கவும் முடியாது என்றும் கருதுகிறேன்.  மஞ்சள் நிறம், காதல், இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகள் ஆகியவற்றை வரையறுக்க முயற்சிப்பதைப் போன்ற காரியம் அது. அத்தியாவசியமான விஷயங்களை எப்படி வரையறுப்பதென்று எனக்குத் தெரியவில்லை. ஒரேயொரு சாத்தியமான வரையறையெனில் அது ப்ளேட்டோவினுடையதாகவே இருக்கும். துல்லியமாகச் சொன்னால் அது வரையறை அல்ல, ஒரு கவித்துவச் செயல்பாடு. கவிதையைப் பற்றி குறிப்பிடும்போது அவர், "இறகுகளைக் கொண்டதும் புனிதமானதுமான லேசான வஸ்து" என்கிறார். ஒரு திட்டமான வார்ப்புக்குள் அடையாதென்பதால், ஒரு தேவதையின் வடிவமாகவோ ஒரு பறவையாகவோ கவிதையை வரையறுக்கலாம் என்று நம்புகிறேன். ஆம், கவிதை என்பது அழகியல் செயல்பாடு என்று இன்னும் நம்புகிறேன்; கவிதை என்பது எழுதப்பட்டு கவிதை அல்ல, ஒரு கவிதை வெறுமனே உருவகங்களின் தொடர் வரிசையை மட்டுமே கொண்டதாக இருக்கலாம்.  கவிஞன் எழுதும்போது, வாசகன் வாசிக்கும் போது-அது எப்போதும் சற்று வித்தியாசமான முறையில் நடக்கிறது- நடக்கும் கவித்து...

ஜோர்ஜ் லூயி போர்ஹே பிறந்த நாள் ஆகஸ்ட் 24

ஆழ்ந்த வெகுமதி  கலையின் வேலை என்பது, நம்மில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதை மனிதனின் ஞாபகத்தில் தொலைந்து போக இருப்பதை, குறியீடுகளாக, இசையாக மாற்றம் செய்வது. அது தான் நமது வேலை. அதை நிறைவேற்ற முடியாவிட்டால் நாம் கவலை கொள்கிறோம். ஒரு கலைஞனும் எழுத்தாளனும் எல்லாவற்றையும் குறியீடுகளாக மாற்றுவதை ஒரு சமயத்தில் சந்தோஷமான கடமையாக நினைக்கின்றனர். அந்தக் குறியீடுகள் நிறங்களாக இருக்கலாம். வடிவங்களாக, சப்தங்களாக இருக்கலாம். ஒரு கவிஞனுக்கு, குறியீடுகள் என்பவை வார்த்தைகளும் தான்.     நீதிக்கதை,கதை,கவிதை எல்லாமும் தான். கவிஞனின் வேலை முடிவடைவதே இல்லை. எழுதும் மணித்துளிகளுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வெளியுலகிலிருந்து தொடர்ந்து நீங்கள் பெற்றுக்கொண்டே இருக்கிறீர்கள். அவை நிச்சயமாக மாறும். கடைசியில் மாறித்தான் ஆகவேண்டும். இது எந்த சமயத்திலும் வெளிப்படலாம். ஒரு கவிஞன் எப்போதும் ஓய்ந்திருப்பதில்லை. அவன் தொடர்ந்து பணியாற்றியபடியேதான் இருக்கிறான், கனவிலும் கூட. அத்துடன் ஒரு எழுத்தாளனின் வாழ்வென்பது தனிமையான ஒன்று. நீங்கள் தனியானவர் என்று உங்களைக் கருதிக்கொள்கிறீர்க...

குழந்தை ஏற்கனவே புலியைப் பார்த்திருக்கிறது

ஹோர்ஹெ லூயி போர்ஹெஸ் தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்                               ஒரு சின்னஞ்சிறு குழந்தை முதல்முறையாக மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. அந்தக் குழந்தை நம்மில் ஒருவராய் இருக்கலாம், இன்னொரு வகையில் பார்த்தால் அது நாமாகவே இருந்து நாம் அதை மறந்துபோயிருக்கலாம். இந்தப் பின்னணியில் - இந்த வினோத மான பின்னணியில்- அந்தக் குழந்தை இதுவரை பார்த்திராத விலங்குகளைப் பார்க்கிறது .   சிறுத்தைப் புலிகள், ராஜாளி, காட்டெருமைக ள்… இன்னும் வினோதமாக, ஒட்டகச்சிவிங்கிகளையும் பார்க்கிறது. திகைக்கச் செய்யும் அளவுக்கு வகைமை கொண்ட விலங்குக ளின் ரா ஜ்ஜி யத்தை பார்க்கும் வாய்ப்பு முதல் முறையாக அந்தக் குழந்தைக்குக் கிடைக்கிறது. இந்தக் காட்சி எச்சரிக்கையூட்டவோ அச்சமூட்டவோ செய்தாலும் அந்தக் குழந்தை அதை ரசிக்கிறது. விலங்குக் காட்சி சாலைக்குப் போவதை க் குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சிகளில் ஒன்று என்று குதூகலம் அடை கிறது....