Skip to main content

Posts

Showing posts with the label விக்ரமாதித்யன்

நவபாஷாணத்தை இப்படித்தான் எழுதினேன் - கவிஞர் விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யனின் நவபாஷாணத்தை வாசிக்க : https://akazhonline.com/?p=4303 கவிஞர் விக்ரமாதித்யனின் நவபாஷாணம் நீள்கவிதை, தமிழின் சிறந்த நவீன காவியங்களில் ஒன்று. விக்ரமாதித்யனின் நவபாஷாணம் குறித்த எனது கட்டுரைக்காக அதன் பின்னணி பற்றி அவரிடம் நேர்காணல் செய்தேன். அது இங்கே பிரசுரிக்கப்படுகிறது.  நவபாஷாணம் தொடர்பிலான எனது கட்டுரையை வாசிக்க :  https://www.shankarwritings.com/2023/03/blog-post.html உங்களது நவபாஷாணம் எழுதியதற்கான தூண்டுதலைச் சொல்லுங்கள்? முதல் நான்கு கவிதைத் தொகுதிகள் வாயிலாக ஒரு சரளத்தையும் அதேவேளையில் ஒரு பழக்ககதியையும் உணர்ந்த நேரத்தில் நகுலனும் மொழிபெயர்ப்பாளர் ஆர். சிவகுமாரும் என்னை நெடுங்கவிதை ஒன்றை முயற்சி செய்துபாருங்கள் என்று 1987-88 ஆண்டுப்பகுதியில் ஊக்கம் கொடுத்தனர். எதையும் தானாக முயற்சி எடுத்துச் செய்ய விரும்பாத நான் அதெல்லாம் எனக்குச் சரிப்படாது என்று தயங்கிக்கொண்டேதான் இருந்தேன்.   அப்புறம் கோணங்கி வழியாகத் தொடங்குகிறீர்கள் இல்லையா? 1989-ம் ஆண்டு குற்றாலம் கவிதைப் பட்டறைக்குப் பிறகு எழுத்தாளர் கோணங்கியுடன் தேவிப்பட்டிணம், ராமநாதபுரத்தில் உள்ள திர...

விக்ரமாதித்யனின் நவபாஷாணம்

நவபாஷாணம் நெடுங்கவிதையை வாசிக்க  "சைதாபேட்ட கிரோம்பேட்ட ராணிபேட்ட பேட்டராப் இன்று என்ன நாளை என்ன தினசரி அதே காலை என்ன மாலை என்ன மாற்றம் இல்லையே மறந்திருப்போமே கவலை மறந்திருப்போமே அட கெட் அப் அண்ட் டான்ஸ் இதுதான் உன் சான்ஸ் முதல்ல யார் முதல்ல யார் பேட்ட ராப் பேட்ட ராப் அம்மாபேட்ட ஐயம்பேட்ட தேனாம்பேட்ட தேங்காமட்ட”. 1994-ல் வெளியான காதலன் திரைப்படத்தில் அதன் இயக்குனர் ஷங்கர் எழுதிய “பேட்ட ராப்” பாடல்  மிகப் பிரபலமானது. அக்காலத்துக்குப் புதுமையான பாப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியிருந்தார். “விடிய விடிய பேட்ட ராப் வாடக கரன்ட்டு மொரவாசல் பாக்கெட் பாலு புள்ள குட்டி ஸ்கூல் பீஸு நல்லெண்ண மண்ணெண்ன ரவ ரேஷன் பாமாயிலு பச்சரிசி கோதும பத்தல பத்தல காசு கொஞ்சங்கூட பத்தலயே” என்று அப்பாடல் தமிழ் வெகுஜனப் பேச்சு, பொது ஏக்கம், ஆசாபாசம், பொன்மொழி, கழிவிரக்கம், நம்பிக்கை எல்லாவற்றையும் மெட்ராஸ் பேச்சுவழக்கில் வெளிப்படுத்தும். “பேட்டராப்” பாடல் ஆரம்பித்து வைத்த வகைமையில் தமிழ் சினிமாவில் “நாக்கு முக்க நாக்கு முக்க” மாதிரி நிறைய வந்துபோய்விட்டன. “பேட்டராப்” தமிழ் வெகுஜன கலாச்சாரத்தை உள்ளடக்கிய பாப் ...

விக்ரமாதித்யனின் கவிதை என்னும் சமயம்

ஓம் அது குறைந்திருக்கிறது இது குறைந்திருக்கிறது குறைவு குறைவினின்று எழுகிறது குறைவினின்று குறைவு எடுத்து குறைவே எஞ்சுகிறது ஓம் அசாந்தி அசாந்தி அசாந்தி இந்த உலகில் பிறக்கும் மனிதஉயிர், மரணிக்கும் வரை தன்னை பின்னமாகவும் அபூர்ணமாகவும் கருதிக்கொள்கிறது. இயற்கையிலிருந்தும் இறைமையிலிருந்தும் ஒரு மனிதன் அல்லது மனுஷி தன்னைப் பிரித்துணரும் நாளிலிருந்து அவனது அவளது தனிமையும் மீட்சிக்கான தேடுதலும் ஆரம்பமாகிறது. அப்போதிருந்துதான் முழுமையை நோக்கிய பிரார்த்தனையும் ஏக்கமும் தன் குறையின்பால் புகார்களும் விசாரணைகளாகத் தொடங்கியிருக்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டு தமிழ் நவீன கவிதைப்பரப்பில் இந்த மனத்தை வைத்துக்கொண்டு அலைக்கழியும் கவிதை உயிரியாக விக்ரமாதித்யன் என்னும் கவிதை ஆளுமையை நாம் வகுத்துக்கொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டு என்னும் காலப்பின்னணியை 1947-ல் பிறந்த நம்பிராஜன் என்னும் உடல் இயங்கும் காலத்தை வைத்து மட்டுமே குறிப்பிடுகிறேன். விக்ரமாதித்யனின் கவிதைகளில் இயங்கும் உடலைப் பார்த்தால் அது சிலசமயங்களில் குரங்கின் கள்ளமின்மையைக் கொண்டிருக்கிறது. சிலவேளைகளில் மத்தியகால உடலின் வன்மையுடன் தோற்றம் தருகிறது...

வள்ளுவர் கோட்டமும் எதிரேயுள்ள பனைமரங்களும்

கவிஞர் விக்ரமாதித்யன் தன் கவிதைகளில் சிலவற்றின் பின்னணி குறித்து எழுதிய கவிமூலம் கட்டுரைகளும், பிற கட்டுரைகளும் சேர்ந்து கங்கோத்ரி என்னும் புதிய தொகுப்பாக வெளிவந்துள்ளது. கயல்கவின் பதிப்பகம் நேர்த்தியாக வெளியிட்டிருக்கும் நூல் இது. கங்கோத்ரி என்று அவர் தன் நூலுக்கு தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பும் கவனிக்கப்பட வேண்டியது. தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தாமிரபரணியின் ஞாபகம் உள்ள ஒருவன், கங்கையை விடுதலையாய், நிவர்த்தியாகப் பாவிக்கும் ஒரு இடத்தில் இத்தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறான். விக்ரமாதித்யனின் உரைநடை ஒய்யாரமான எழிலுடன் இருந்தபோது எழுதப்பட்ட கட்டுரைகள் அவை. இன்று கங்கோத்ரியை வாசிக்கும் போதும் அந்த எண்ணம் மாறவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு கைவந்திருந்த உரைநடை, அதன்பிறகு மேலதிக சாத்தியங்களை அடையவே இல்லை. தன் உரைநடையை, சிறுநகர டவுன் பஸ் போல பராமரிப்பே இல்லாமல் ஆக்கிவிட்டார் அண்ணாச்சி. அதற்கு உதாரணம் தற்போது அவர் தீராநதியில் எழுதிவரும் தன்வரலாற்றுத் தொடர்.   கங்கோத்ரி தொகுப்பில் ‘வள்ளுவர் கோட்டத்துத் தேர் ’ கவிதையின் பின்னணி குறித்து அவர் எழுதிய கட்டுரை முக்கியமானது. வள்ளுவர்...

மலை மீது ஓய்வு கொள்ளும் கவிஞன்

விக்ரமாதித்யன் எழுதிய பெருந்தொகையான கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் ஒரு சிறுதொகுதியைக் கொண்டுவர வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுதியைப் பொறுத்தவரை அந்த ஆசை பாதியே நிறைவேறியுள்ளது; கொஞ்சம் பெரியதாகிவிட்டது. இதிலிருந்து ஒரு குட்டித்தொகுதியை இன்னொருவரோ நானோ எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும்.   தமிழ்ப் புதுக்கவிதையில் சிறுபத்திரிகை வட்டத்திலும், பொதுவாசகர் பரப்பிலும் (தமிழர்களின் ஜனத்தொகையை ஒப்பிடும்போது அவர்கள் குறைவானவர்களாகவே இருந்தாலும்) தான் எழுதிய கவிதை வரிகளால் அதிகம் நினைவுகூரப்படுபவர் விக்ரமாதித்யனாகவே இருப்பார். தமிழ் சாதாரணனின் அறிவு, ஞானம், சமய நம்பிக்கை, உலகப் பார்வை என்னென்ன வளர்ச்சிகளையும் வரையறைகளையும் கொண்டனவோ அதுதான் விக்ரமாதித்யனின் வளர்ச்சியும் வரையறையும் வெற்றியும். என் அனுபவ அளவில் தமிழ் வாழ்க்கைதான் அதிகப் பரிச்சயம் என்பதால் இக்கூற்றைச் சொல்கிறேன். இதற்கு ஒரு உலகளாவிய தன்மையும் இருக்கலாம். அந்த அடிப்படையில் விக்ரமாதித்யன் சார்ந்து  பலராலும் நினைவுகூரப்படும் கவிதைகளைக் கூடுமானவரை விட்ட...

சக்தியை வணங்குவதே எண்ணம்

தமிழ் நவீன கவிதையில் அதிக வாசகர்கள் நினைவில் மனப்பாடமாகச் சொல்லக்கூடிய வரிகளை எழுதிய மக்கள் கவிஞர் என்ற வரையறைக்கு அருகில் வரக்கூடிய கவிஞர் விக்ரமாதித்யன் . கு றுந்தொகை   தொடங்கி   தமிழ்   மரபிலக்கியத்தில்   தேர்ந்த அறிவும் அதன் செழுமையான தாக்கத்தையும் பெற்ற அரிதான தமிழ் கவிஞர்களில் ஒருவர் . அவரிடம் இந்து தமிழ் திசைக்காக எடுத்த பேட்டியின் முழுவடிவம் இது ... கவிதையின் இன்றியமையாத அம்சம் , தேவை என்னவென்று சொல்லுங்கள் ? கவிதைதான் மொழியின் கொடுமுடி . அதில்தான் உச்சபட்சமும் சாத்தியம் . லண்டன் மெட்ரோ ரயிலில் இடம்பெற்ற ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்று தொடங்கும் குறுந்தொகை கவிதை ஏ . கே . ராமானுஜத்தின் மொழிபெயர்ப்பாக , ஒரு உலகப்பொதுவான விஷயத்தை அழகுபடப் பேசுகிறது . அத்தனை நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அது புதிதாகவும் உள்ளது . ‘ சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கிவள் / உயிர்தவச் சிறிதே காமமோ நனிபெரிதே’ என்று ஈரடிகளில் பெண்ணொருத்தியின் நிலையைக் காண்பிக்க முடியும் . எல்லாவற்றுக்கும் மேலாக , கவிதை தோன்றுவது ; தோன்றுவது என்பதனாலேயே உயர்வானது . சங்கத...