Skip to main content

Posts

Showing posts from 2023

காஃப்காவின் கலக மானுடப் பூச்சிகள்

  “ கடந்து சென்றபடியிருக்கும் கம்பிகளுக்குப் பின்னே எதிலுமே நிலைக்க முடியாதவாறு அவன் பார்வை களைத்திருக்கிறது . ஆயிரம் கம்பிகள் இருப்பது போல அவனுக்கு தோன்றுகிறது கம்பிகளுக்கு அப்பால் உலகமே இல்லாததுப் போலவும் ” - ரில்கே ( சிறுத்தை கவிதையிலிருந்து )   ஒரு சிறுகிராமத்துக்கு வரும் சர்க்கஸின் பின்னணியில் எடுக்கப்பட்ட அரவிந்தனின் ‘ தம்பு ’ திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தபோது , சர்க்கஸின் அனைத்து அங்கங்களையும் இணைக்கும் ஒரே சரடு வன்முறைதான் என்று தோன்றியது . சர்க்கஸ் மேலாளர் , சர்க்கஸ் கலைஞர்கள் , சர்க்கஸ் பார்வையாளர்கள் , சர்க்கஸின் அத்தியாவசிய அம்சங்களான விலங்குகள் என எல்லாவற்றையும் அதுவே இணைக்கிறது . சர்க்கஸை வாய்பிளந்து பார்க்கும் சிறுவர்கள் , யுவதிகள் , இளம் மனைவிகள் , நடுத்தர வயது ஆண்கள் , உயர் வர்க்கத்தினர் முதலிய அனைவரின் கண்களும் சர்க்கஸின் ஒரு பகுதியாகவே நிகழ்கின்றன . படத்தில் சர்க்கஸின் முக்கிய அங்கமான குரங்குக்கு ஒப்பனைக்காரர் சட்டை போட்டு , முகத்தில் பௌடர் அப்பி , கண்மை பூசுவார் . சர்க்கஸின் வன்சங

அலறலில் சாவு …வாழ்க்கையில் குழந்தை

காஸா நிலத்திட்டில் சிக்கியுள்ள பாலஸ்தீன மக்களைக் கிட்டத்தட்ட நெருக்கி அழித்துவிடும் இஸ்ரேல் மற்றும் அதன் நட்புநாடுகளின் மூர்க்கம், அந்த அவலத்தின் மீதான உலக நாடுகளின் தாங்க முடியாத பாராமை இரண்டும் குற்றவுணர்வை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் சென்ற நூற்றாண்டில் யூதர்கள், பெரும் இன அழிப்புக்குள்ளான பின்னணியைப் பேசும் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் உள்ள சிக்கலான சமகால உறவைப் பேசும் மூனிக் திரைப்படத்தையும் மீண்டும் பார்த்தேன். நாஜி கட்சியின் உறுப்பினராகவும், போர் சார்ந்து உருவாகும் வர்த்தகத்தில் கொழிக்கும் வியாபாரியாக ஆஸ்கர் ஷின்ட்லர் நமக்கு அறிமுகமானாலும், ரத்தத்தின் நிறம் கொண்ட சிவப்பு மேலங்கியுடன் வதைமுகாம்களுக்குக் கொண்டுபோகப்படும் யூதர்களின் மத்தியில் அலையும் ஒரு குட்டிச்சிறுமியைப் பார்த்த பின்னரே, தன்னால் முடிந்தளவுக்கு யூதர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதன் மூலம், ஒட்டுமொத்த மானுட குலத்தையும் காப்பாற்ற இயலக்கூடிய மகத்தான காரியத்துக்கு உந்துதலைப் பெறுகிறார். சென்ற நூற்றாண்டில் இத்தனை வாதைகளை அனுபவித்த யூத இனத்தினர்  சேர்ந்து உருவாக்கிய

நகுலனின் நூற்றாண்டில் எனது இன்னொரு புத்தகம் - நினைவின் குற்றவாளி

ஒரு எழுத்தாளனின் ஆக்கங்களாக , அவனது தொனியில் ஈடுபட்டு பிரதிபலித்து திரும்பத் திரும்ப மனத்தில் புறத்தில் புத்தகங்களில் போய் சரிபார்த்துக் கொண்டு ஆளுமையில் அவரைப் புதுக்கிக் கொண்டு நான் அதிக காலம் செலவழித்திருப்பது நகுலனுடன். பொருள் பொதிந்த ஒரு குடித்தனமாகவே நகுலனின் எழுத்துக்களுடன் இருபதாண்டுகளைக் கடந்த இந்த உறவைப் பார்க்கிறேன். 1997- ம் ஆண்டுவாக்கில் சுந்தர ராமசாமி அப்போது பாம்பன்விளையில் நடத்திவந்த நண்பர்கள் சந்திப்புக் கூட்டத்தை முடித்துக் கொண்டு , பெ. அய்யனாருடன் வலியத் தொற்றிக் கொண்டு நானும் தளவாய் சுந்தரமும் சண்முக சுந்தரமும் திருவனந்தபுரத்தில் உள்ள நகுலன் வீட்டுக்குச் சென்றதிலிருந்து அந்த உறவு தொடங்கியது. அவரைத் தீவிரமாக வாசிக்கத் தொடங்கியது 2004- க்குப் பிறகு. கிட்டத்தட்ட சிறியதாகவும் பெரியதாகவும் நகுலன் தொடர்பிலான எனது கட்டுரைகள் , குறிப்புகளை 17 ஆண்டுகளாக எழுதிவந்திருக்கிறேன். நகுலன் எழுத்துகள் குறித்த எனது டைரி இது. நகுலனை நான் தொடர்ந்து வரைந்துவைத்துக் கொண்ட சித்திரங்களின் கையேடு என்றும் சொல்லலாம். ஷ்ரோடிங்கரின் பூனை உள்ளடக்கத்தையே ஒரு பேச்சில் அளித்து எழு