Skip to main content

Posts

Showing posts with the label மேரி ஆலிவர்

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக...

கயிறுகள் - மேரி ஆலிவர்

பழைய நாட்களில் நாய்கள் சுதந்திரமாக எங்கள் டவுனில் திரிந்துகொண்டிருந்தன. ஆனால் பழைய வழிமுறைகள் மாறிவிட்டன. ஒரு காலையில் கழுத்துப்பட்டியில் நீளமாகத் தொங்கும் கயிறுடன் எங்கள் வீட்டுமுற்றத்தில் ஒரு நாய்க்குட்டி வந்துநின்றது. எங்கள் வீட்டிலுள்ள நாய்களுடன் அவன் விளையாடத் தொடங்கினான்; அதற்குப் பிறகு தொலைந்துவிட்டான் அடுத்த நாள் காலை இன்னொரு கயிறு கழுத்தில் தொங்க எங்கள் வீட்டில் தென்பட்டான். இப்படியாக நிறைய நாட்கள் நிகழ்ந்தன – அவன் துருதுருப்பாகவும் நேசத்துடனும் இருந்தான். அத்துடன் கடித்து சவைத்துத் துண்டாக்கிய ஒரு கயிறு அவனுடன் எப்போதும் இருந்தது.  ஒருசமயம் நாங்கள் இன்னொரு வீட்டுக்கு நகர்ந்தோம். ஒரே சாயங்காலத்தில் அத்தனையையும் நகர்த்திவிட்டோம். ஒரு நாளோ அதற்கும் கழித்தோ, ஒரு குறுகுறுப்பின் காரணமாக, பழைய வீட்டுக்கு வண்டியை விட்டேன். எங்கள் வீட்டின் வாசலில் புல்தரையில் அவன் படுத்திருந்ததைப் பார்த்தேன். நான் அவனை காரில் ஏற்றி எங்கள் புதிய வீடு எங்கிருக்கிறதென்று காட்டினேன். உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய் என்று சொன்னேன். கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு பின்னர் போய்விட்டான். ஆனால், அடுத்த நாள் காலை...

ஒவ்வொரு நாயின் கதையும் - மேரி ஆலிவர்

எனக்கு மட்டுமே சொந்தமான படுக்கை ஒன்று உள்ளது அது என்னுடைய அளவே இருக்கும் சிலவேளை கண்களுக்குள் கனவுகளோடு தனியாக உறங்க விரும்புகிறேன் ஆனால் அவ்வப்போது கனவுகள் இருண்மையாகவும் மூர்க்கமாகவும் சஞ்சலம் உண்டாக்குவதாகவும் இருக்கும் ஏனென்று காரணம் தெரியாவிட்டாலும் நான் பயந்தெழுந்து விடுவேன் அப்புறம் எனக்குத் தூக்கம் இருக்காது மிக மந்தமாக மணிகள் கழியும் அப்போது நிலவின் ஒளி சுடரும் உன் முகம் இருக்கும் படுக்கையில் நான் ஏறுகிறேன் சீக்கிரம் விடியல் வந்துவிடும்  எனக்குத் தெரியும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாதுகாப்பான இடம் தேவைப்படுகிறது.

பெர்சி - மேரி ஆலிவர்

உன் விருப்பம் என்னவென்று சொல் பெர்சி? வெளியே மணல்பரப்பில் உட்கார்ந்து உதயமாகும் நிலவைப் பார்க்கலாமென்று நினைக்கிறேன் இன்றிரவு நிறைமதி. நாங்கள் போகிறோம் நிலவும் எழுகிறது, அதன் அபாரமான எழில் என்னை நடுங்கவைக்கிறது காலம் மற்றும் வெளியைப் பற்றி  என்னை யோசிக்கச் செய்கிறது என் குறித்து என்னை அளவெடுக்கச் செய்கிறது. ஒரு சிறுஅம்சம் சொர்க்கத்தைத் தியானிக்கிறது இப்படி நாங்கள் அமர்ந்திருக்கிறோம். நிலவின் முழுமையான இந்த அழகுக்காக எத்தனை நன்றிக்கடன்பட்டவள் நான் என்குறித்து நினைத்துக்கொண்டேன் நேசிப்பதற்கு உலகம் எவ்வளவு செழுமையை வைத்திருக்கிறதென்றும் வியந்தேன். அவ்வேளையில் பெர்சி என் முன்னால்  கால்களை மடித்து அமர்ந்து முகமுயர்த்தி என் முகத்துக்குள் ஆழமாக நோக்குகிறது முழுமையும் அற்புதமும் துலங்கும் அந்த நிலவைப் போல் நான் இருக்கக்கூடும்.

லூக் - மேரி ஆலிவர்

மலர்களை நேசித்த ஒரு நாய் என்னிடம் இருந்தது. வயல் வழியாக பரபரப்பாக ஓடும்போதும் தேன்குழல் பூ அல்லது ரோஜாவுக்காக நின்றுவிடுவாள் அவளின் கருத்த தலையும் ஈர மூக்கும் ஒவ்வொரு மலரின் முகத்தையும் பட்டிதழ்களோடு ஸ்பரிசிக்கும். மலர்களின் நறுமணம் காற்றில் எழும்வேளையில் தேனீக்கள் அவற்றின் உடல்கள் மகரந்தத் துகள்களால் கனத்து மிதந்துகொண்டிருக்கும் போது அவள் ஒவ்வொரு பூவையும் அனாயசமாக ஆராதித்தாள் இந்த பூ அல்லது அந்தப் பூவென்று கவனமாக நாம் தேர்ந்தெடுக்கும் தீவிரகதியில் அல்ல- நாம் பாராட்டும் அல்லது பாராட்டாத வழியில் அல்ல- நாம் நேசிக்கும் அல்லது நேசிக்காத வழியில் அல்ல— ஆனால் அந்த வழி நாம் ஏங்குவது- பூவுலகில் உள்ள சொர்க்கத்தின் மகிழ்ச்சி அது- அந்தளவு மூர்க்கமானது அவ்வளவு விரும்பத்தக்கது. 

எப்படி ஆரம்பித்தது - மேரி ஆலிவர்

ஒரு குட்டி நாய் குட்டிநாய்தான் குட்டிநாய்தான் ஒரு கூடையில் கொத்தாக மற்ற நாய்க்குட்டிகளுடன் அவன் இருக்கக்கூடும். அதையடுத்து அவன் சற்றே மூத்தவன் அத்துடன் ஒரு பிடி ஏக்கம் தவிர அவன் வேறெதுவும் இல்லை. அதை அவனால் புரிந்துகொள்ளவும் இயலாது. அப்புறம் யாரோ ஒருவர் அவனைத் தேர்ந்தெடுத்துவிட்டு  சொல்லவும் செய்கிறார் “எனக்கு இது வேண்டும்.”