Skip to main content

Posts

Showing posts with the label ஜானகி லெனி

ஒவ்வொரு உயிரிக்கும் ஒரு கதை இருக்கிறது

அறிவியல் எழுத்து, சுவாரசியமான எழுத்து என்பவை எதிரெதிர் முனைகளிலேயே இன்றும் தொடரும் நிலையில் வன உயிர்களைப் பற்றிய அறிவியல்ரீதியான விவரங்களுடன் கூரிய நகைச்சுவை உணர்வைத் தக்கவைத்துக்கொண்ட எழுத்து ஜானகி லெனினுடையது. ஆங்கிலத்தில் இவர் எழுதிய ‘மை ஹஸ்பெண்ட் அண்ட் அதர் அனிமல்ஸ்’ கட்டுரை நூல், ‘எனது கணவனும் ஏனைய விலங்குகளும்’ பாரதி புத்தகாலயம் வெளியீடாகத் தமிழில் வெளியாகியுள்ளது. சென்னைக்கு வெளியே செங்கல்பட்டில் ஒரு சிறிய வனம் சூழ்ந்த வீட்டில் கணவரும் ஊர்வன உயிரியிலாளருமான ரோமுலஸ் விடேகருடன் வாழ்ந்துவருகிறார். பாம்பு, கீரி, மரநாய், முள்ளம்பன்றி, தவளை, தேரை என பல்லுயிர்கள் நடமாடும் மனமும் இடமும் இவர்களுடையது. ஜானகி லெனினுடன் உரையாடியதிலிருந்து... காட்சி ஊடகத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டிய பிறகு, எழுத்துலகத்துக்குள் முழுமையாக ஈடுபட்டு வெற்றியையும் காண்கிறீர்கள். சினிமாவிலிருந்து எழுத்துக்குத் திரும்பியதற்கான காரணங்கள் என்ன? தொடக்கத்தில் ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரப் படங்களுக்குப் படத்தொகுப்பாளராக இருந்தேன். படத்தொகுப்பாளராக இருந்தையும் சேர்த்து சினிமாவில் 12 ஆண்டுகள் ஈடுப...