Skip to main content

Posts

Showing posts from September, 2012

மகாபாரதம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் சித்திரக்கதி பாணியில் மகாபாரதக் கூத்தின் நிகழ்வுகள் வரையப்பட்ட படங்களுக்கு கவிதைகள் எழுதவேண்டுவம் என்று நண்பர்கள் பாலாஜியும், காந்தியும் சொன்னார்கள். அந்தக் கவிதைகள் படத்திற்கான விளக்கங்களாகவோ , உரைகளாகவோ இல்லாமல் சமகாலப் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்பது அவர்களது ஆசையாக இருந்தது . படத்தின் உள்ளடக்கத்தை ஒட்டியும் ஒட்டாமலும் நவீன கவிதைகளாக அவை இருக்க வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு .   இந்தக் கவிதைகளின் த்வனியை , மூத்தக் கவிஞர்களான நகுலன் , ஞானக்கூத்தன் , விக்கிரமாதித்யன் ஆகியோரின் கவிதைகளிலிரு ந்து அமைத்துக் கொண்டேன் . கவிதையில் நீதி மற்றும் செய்தி அம்சம் இருக்கக்கூடாது என்று நான் எண்ணியிருந்தேன் . ஆனால் நீதி அம்சம் சில கவிதைகளில் தூக்கலாக இடம்பெற்றுவிட்டது . ' பொன்மொழிகளும் ' விரவிவிட்டிருக்கின்றன . நவீன கவிதை தொடர்பாக நான் கொண்டிருக்கும் எண்ணங்களோடு இந்த அம்சங்கள் சண்டை இடக்கூடியவை.   இந்தப் படங்களிலுள்ள கதாபாத்திரங்களின் நிறமும் , உடல்பாவங்களும் , கண்களும் அதீத உணர்வுகளை எ ன்னிடம் எழுப்பின . அது மகாபாரதத்தில் உள்ள அதீதம் த