Skip to main content

Posts

Showing posts with the label லீனா மணிமேகலை

லீனா மணிமேகலை : நிலங்கள் மீது நீந்திக்கடக்கும் சிச்சிலி

 ஷங்கர்ராமசுப்ரமணியன் சுதந்திரம், பாவனை, சாகசவிழைவு, வெளிப்படையான தன்முனைப்பு, திமிறல், முரண்பாடுகள்-இப்படியாக லீனாவின் கவிதைகளையும் அவரது ஆளுமையையும் நான் அடையாளப்படுத்தவும் வரையறை செய்வதற்கு முயற்சி செய்யவும் விரும்புகிறேன். லீனா மணிமேகலை, தனது ஆளுமை குறித்தும் தன் கவிதைகளுடனான பிரச்சினைப்பாடுகள் குறித்தும் பேசும் நேர்காணல் நூலான ‘மொழி எனது எதிரி ’   நூலைப் படிக்கும்போது அவர் குறித்து உருவாகும் மனப்பதிவு இது. லீனாவின் கவிதைகளை ஏற்கனவே அவ்வப்போது படித்திருந்தாலும் முழுமையான தொகுதியாகப்     ‘சிச்சிலி ’ யைத் தான் படிக்கிறேன். தமிழ் கவிதைகளில் ஆண் நவீன கவிகள், பெண் நவீன கவிஞர்கள் இருவருக்கும் அதிகம் வாய்க்காத பகடி மற்றும் தீவிரபாவத்தைக் கவிழ்க்கும் கேலிப்பண்பு, லீனாவிடம் இயல்பாக அமைந்துள்ளது. அந்த இயல்பைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்து லீனா தொடரவேண்டும் தனது படைப்புகளில்.   இந்த இரண்டு புத்தகங்கள் வாயிலாகவும், லீனா என்ற படைப்பு அகத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதற்கு மேலும் ஒரு தூண்டிலை இடுகிறேன்.   குழந்தையின் பேதைமையும், எல்லாம் தெரிந்த தன்மையும்...