Skip to main content

Posts

Showing posts from January, 2024

நிமோனியா பூனை

ஓவியம் : ஆர் பி பாஸ்கரன் மார்கழிப் பனியில் வெளியே சுற்றுலாபோன மாடிவீட்டுப் பூனைக்குட்டி நிமோனியாவுடன் திரும்பியது இரண்டே நாட்களில் முதுமையேறி கெட்ட குமரனின்  குற்றவுணர்வுடன்  அலமந்து அருந்தியது முதல் நீரை மருந்துடன் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு நீட்டிப் படுத்திருக்கிறது   பூனைக்குட்டி  அது உறங்கும் அறையில் இன்னும் விளக்கணைக்கப்படவில்லை  மீண்ட பூனைக்குட்டி உறங்கிக் கொண்டிருக்கும் மெத்தென்ற பஞ்சணை மீது அமைதி தற்போதுதான் திரும்பிக்கொண்டிருக்கும் அதன் நுரையீரல் மீது முழுக்கப் பருகாமல்  மிச்சம் வைத்திருக்கும் கோழிச்சாறு கிண்ணத்தின் மீது அப்போதுதான் அசதியும் சேர்ந்த நிம்மதியுடன் உறங்கத்தொடங்கியிருக்கும்  வளர்ப்பவள் மீது பிரகாசமாய் இரண்டு வெளிச்சங்கள்.  

அந்த ஆலயத்தில் கடவுள் இல்லை – ரவீந்திரநாத் தாகூர்

  அரச சபை ஊழியன் சொன்னான்.  “மன்னா, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக் கிடக்கிறது. “புதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு, பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள்  போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் இருக்கும் மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில்.” அதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து துறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார். துறவியின் முன

நாவலெனும் பிரம்மாண்ட உலைக்களம்

  நாவல் பற்றிய பி . கே . பாலகிருஷ்ணனின் முழு சிந்தனைகளும் தமிழில் கிடைக்கத்தான் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கிறதே தவிர , அவர் இந்த நூலை எழுதிய மூன்று ஆண்டுகளிலேயே தமிழ் சூழலில் நாவல் பற்றிய விவாதம் தொடங்குவதற்குக் காரணமாகிவிட்டார் . 1968- ல் நகுலன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட “ குருக்ஷேத்திரம் – ஓர் இலக்கியத் தொகுப்பு ” நூலில் பி . கே . பாலகிருஷ்ணனின் “ நல்ல நாவலும் மகத்தான நாவலும் ” என்ற கட்டுரை , நீல . பத்மநாபனின் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது . அந்த அடிப்படையில் பி . கே . பாலகிருஷ்ணன் துவக்கி வைத்த நாவல் குறித்த உரையாடலின் தொடர்ச்சியையும் தாக்கத்தையும் சுந்தர ராமசாமி , சி . மோகன் , ஜெயமோகன் ஆகியோர் ஓரளவு பரந்த அளவில் விவாதமாக ஆக்கியுள்ளனர் . நவீன நாவல்களைத் தாண்டி , செவ்வியல் , பின்நவீனத்துவ வடிவிலும் சிறந்த படைப்புகள் தமிழில் கடந்த கால் நூற்றாண்டில் வெளியாகியிருக்கின்றன . நாவல் பற்றிய விவாதங்களும் இந்தச் சாதனைக்கு நிச்சயம் உரமூட்டியிருக்க வேண்டும் . 1965- ல் மலையாளத்தில் எழுதி , ஐம்பது ஆண்டுகளுக்குப்