காதலின் அளவற்ற ஆற்றலையும் அதன் வசீகர ஈர்ப்பையும் சொல்லும் மகத்தான நவீன செவ்வியல் படைப்பு, காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸின் ‘லவ் இன் தி டைம் ஆஃப் காலரா’. அவர் ஒரு பியானோ இசைஞனாக அளவற்ற காதலை நறுமண இசையாகப் பரப்பிய பிரத்யேகப் படைப்புதான் இந்நாவல். கவித்துவத்தின் இசைமையும் எந்தக் கலாச்சாரத்தவரும் உணரும் அன்றாடத் தருணங்களின் மீதான கூர்மையான அவதானிப்பும் கொண்டது. காதல் என்ற உணர்வுநிலை தரும் நோய்த்தன்மை, ஆறாத ரண உணர்வு ஆகியவற்றோடு அதன் வீண்தன்மையையும் ஆழமாகப் பேசுவது. காதலில் இருக்கும், காதல்கொள்ளப்போகும் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்க வேண்டியது. இந்த நாவலின் தொடக்கமே இப்படி இருக்கிறது. ‘அது தவிர்க்க முடியாதது: கசந்த வாதுமைகளின் வீச்சம் எப்போதும் நிறைவேறாத காதலுக்கு நேரும் விதியைத்தான் அவனுக்கு ஞாபகப்படுத்தும்.’ பிராயத்தில் பித்துப் பிடித்ததைப் போலத் தொடங்குகிறது நாயகன் ப்ளோரென்டினா அரிஸாவின் காதல். நாயகி பெர்மினா டாசா அவளது தந்தையால் வேறு ஊருக்கு அழைத்துச்செல்லப்பட்ட பிறகும், கவித்துவமான கடிதங்களால் பற்றியெரிகிறது. ஒருகட்டத்தில் பிள்ளைப் பருவக் கனவுதான் தனது காதல் என்ற முடிவுக்கு நாயகி ...