Skip to main content

Posts

Showing posts from June, 2018

டானடா சண்டூகா ஜென் கவிதைகள்

மலைகள் எதிர்பட்டால் மலைகளைப் பார்ப்பேன் மலைகள் எதிர்பட்டால், நான் மலைகளைப் பார்ப்பேன் மழை நாட்களில் நான் மழைக்கு செவிசாய்ப்பேன். இலையுதிர் காலம், வேனில் காலம், மழைக் காலம், குளிர் காலமென்றாலும். நாளையும் நன்றாகவே இருக்கும். இன்றிரவும் நன்றாகவே இருக்கும். உள்ளது உள்ளபடி உள்ளது உள்ளபடி மழை பெய்யும்போது, நான் ஈரமாகிறேன், நான் நடக்கிறேன். எத்தனையளவு உள்ளே போகிறேனோ எத்தனையளவு உள்ளே போகிறேனோ அத்தனை பசுமை மலைகள் எனது பிச்சைப் பாத்திரம் எனது பிச்சைப் பாத்திரம் ஏற்கிறது உதிர்ந்து விழுந்த இலைகளை.  

முல்லாவின் மஞ்சள் குடை

முல்லா நஸ்ரூதின் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார் . வீட்டிலிருந்து அவசரமாகத் தந்தி ஒன்று வந்ததால் அவசர அவசரமாக பெட்டி , படுக்கைகளைக் கட்டி , ரயிலைப் பிடிக்க தரைத்தளத்திற்கு வந்தார் . கட்டணத்தைச் செலுத்தி ரசீதை வாங்கியபிறகு , காரில் ஏறப்போகும்போதுதான் அவருக்கு தன் குடையை அறையிலேயே தவறவிட்டு வந்தது தெரியவந்தது . முல்லா நஸ்ரூதின் விடுதிக்குள் நுழைந்து லிப்டில் ஏறி தனது அறைக்குச் சென்றார் . 14- வது மாடி அது . முல்லா தங்கியிருந்த அறை ஏற்கனவே ஒரு புதுமணத் தம்பதிகளுக்கு ஒதுக்கப்பட்டிப்பதாக தகவல் தெரிய முல்லா தன் அறையின் முன்னால் என்ன செய்வதென்று தெரியாமல் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தார் . ரயிலுக்குச் சீக்கிரமே கிளம்பவேண்டிய நெருக்கடி இருப்பினும் முல்லாவால் சபலத்தைக் கைவிட முடியவில்லை . அறையின் கதவுத் துவாரம் வழியாக உள்ளே நடப்பதைப் பார்க்கத் தொடங்கினார் .   அவர்கள் புதுமணத் தம்பதிகள் . திருமணச் சடங்குகளால் மிகவும் களைப்படைந்து , விருந்தினர்கள் உறவினர்களின் தொல்லையில்லாமல் அப்போ

வெறுமையுடன் ஒரு நடனம்

மார்டின் பட்லர் ( ( போர்ச்சுகீசிய நாட்டில் வசிக்கும் மார்டின் பட்லர், சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த ரஷ்ய மெய்ஞானியான குர்ட்ஜிப் அவர்களின் ஆன்மப் பயிற்சிகளில் பல்லாண்டு காலம் ஈடுபட்டவர். மனித நிலைமைகள் பற்றிய ஆழமான புரிதலுக்கு இவர் வருவதற்கு ஸ்பினோஷா போன்ற தத்துவவாதிகளையும் முறையாகக் கற்றிருக்கிறார்.  martinbutler.eu   என்ற இணையத்தளத்தில் கட்டுரைகளையும் வீடியோக்களையும் தொடர்ந்து இட்டுவருகிறார். என் காலத்தையும் என்னைச் சுற்றியுள்ள நிலைமைகளையும் புரிந்துகொள்வதற்கும் இந்தச் சூழ்நிலைகளுக்குள் எனது விழைவுகள், ஆசைகள், வலிகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்வதற்கும், எனக்கு வழங்கப்பட்டுள்ள வளங்களினூடாக நிறைவாகவும் நீதியாகவும் இருப்பதற்கும் மார்டின் பட்லரின் எழுத்துகள் உதவிகரமாக இருக்கின்றன. அவரது எழுத்துகள் உரிமைத்துறப்பை அறிவித்திருப்பதால் எனக்குப் பிடித்தவற்றை இங்கே மொழிபெயர்த்து வெளியிடுகிறேன். இங்கே தொடர்ந்து அது வெளியாகும். தன்னில் மட்டுமே வேலை சாத்தியம் என்று நம்புபவர்கள் அவரது எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கலாம். மார்டின் பட்லர் என்னிடம் ஏற்படுத்திய பயன்விளைவை இன்னும் சில வாசகர்களும

வாழ்வு ரயில் கவிதைகள்

அகன்ற பள்ளத்தாக்கில் விழுந்து பரந்து சுழித்தோடும் நதி திரும்பும் வழியில் பக்கவாட்டுப் பாறையிலிருந்து நீரோட்டத்தைத் தொட்டபடி ஒரு மரம்   அங்கே இப்போது டினோசர்கள் இல்லை குரங்குகளும் இல்லை பார்த்த நானும் இல்லை வாழ்வு உள்ளது அங்கே கடலில் கலப்பதற்குக் கொஞ்சம் முன்னர் நான் பார்த்துக் கடந்த ரயிலிலிருந்து வெகு ஆழத்தில் கோடையில் இன்னும்   மிச்சமிருக்கும் கரிய நீரில் எருமைகள் வெயிலையும் தண்ணீரின் சில்லிப்பையும் அசைபோட்டபடி ஓய்வெடுக்கின்றன அந்த மனமற்ற எருமைகளைப் பற்றிப் பகிர்ந்துகொள்வதற்கு கழிமுகத்தினருகில் நடை போய்க்கொண்டிருந்த ஜே . கிருஷ்ணமூர்த்தி இல்லை வாழ்வு உள்ளது அங்கே எல்லா அமைதியின்மைகளையும் கொலைத்துடிப்புகளையும் இப்போதுதான் கொண்டுபோனது ஒரு ரயில் அடுத்து வரப்போகிறது ஒரு ரயில் வாழ்வு ரயில் நிலையத்துக்கு 000 நடுவில்   ஒரு இறகு பறக்கிறது நடுவயதைக் கடந்த அவள் ஆள்நடமாட்டமே அற்ற தெருவில் உதிர்ந்த வேப்பிலைகளைப் பெருக்கி ஒதுக்கிக் கொண்டிருக்கிறாள் தெருவின் மறுமுனைய