Skip to main content

Posts

Showing posts with the label ததௌஸ் ரோசவிச்

என் வாழ்வின் நடுவில் – ததௌஸ் ரோசவிச்

    இரண்டாம் உலகப்போர் வெடித்து 60 ஆண்டுகளாகிவிட்டது இப்போது. நான் ஒரு கவிஞன். எனக்கு 77, 78 வயதாகிறது. ஒருநாள் கவிஞன் ஆவேன் என்ற அற்புதத்தில், பயணத்தைத் தொடங்கியபோது எனக்கு நம்பிக்கை கொள்ள முடிந்ததேயில்லை. துர்க்கனவுகள் மற்றும் ஆவிகளால் எழுப்பப்பட்டு இரவுகளில் எப்போதாவது விழிக்கும்போது “நான் கவிஞன் ஆகலாம்” என்ற எண்ணத்தால் பீடிக்கப்பட்டேன்…நான் ஆவிகளை இருட்டை மரணத்தை விரட்டுவேன்…நான் கவிதையின் வெளிச்சத்துக்குள் புகுவேன், கவிதையின் இசைக்கு, கவிதையின் நிசப்தத்துக்கு. நான் இந்த வார்த்தைகளை எழுதும்போது, அம்மாவின் அமைதியான மனம்நிறைந்த கண்கள் என்மீதுள்ளன. மறுமையிலிருந்து அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள், நான் நம்பாத மறுபக்கத்திலிலிருந்து. இவ்வுலகிலோ இன்னொரு போர் மூண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவுக்கப்புறம் இன்றுவரை தொடர்ந்து மூண்ட நூற்றுக்கணக்கான போர்களில் ஒன்று அது. அரை நூற்றாண்டாக நான் கட்டியெழுப்ப முயன்ற உலகம் வீடுகள் மருத்துவமனைகள் மற்றும் ஆலயங்களின் கட்டிடக் குவியலுக்கிடையே நொறுங்கிவிழுந்துகொண்டிருக்கிறது…மனிதனும் கடவுளும் செத்துகொண்டிருக்கிறார்கள், மனி...

நான் ஒரு கவிஞன் - ததௌஸ் ரோசவிச்

    இப்போது , இந்த வார்த்தைகளை நான் எழுதும்போது , என் அம்மாவின் கண்கள் என்மீது நிலைத்திருக்கின்றன . அந்தக் கண்கள் , மனம்நிறை கவனத்துடனும் கனிவுடனும் என்னைக் கேட்காமல் கேட்கின்றன . “ எனது செல்லமே , உன்னை எது தொந்தரவு செய்கிறது … ?” ஒரு புன்னகையுடன் நான் பதிலளிக்கிறேன் . “ ஒன்றும் இல்லை ... நல்லபடியாகவே சென்றுகொண்டிருக்கிறது , அம்மா ” . “ ஆனாலும் , என்ன விஷயமென்று சொல்லேன் ” என்று அம்மா கேட்கிறாள் . நான் என் தலையை திருப்பி , ஜன்னல்வழியாகப் பார்க்கத் தொடங்குகிறேன் . அம்மாவின் கண்களால் எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது பிறப்பைப் பார்க்க முடிகிறது வாழ்க்கை முழுக்கவும் ‘ மறு உலகத்திலிருந்து ’ சாவுக்குப் பிறகும் அவள் எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது . அவளது மகனை அவர்கள் ஒரு கொலை எந்திரமாகவோ அல்லது ஒரு விலங்காகவோ மாற்றிவிட்டாலும் , ஒரு கொலைகாரனுடைய தாயின் கண்கள் அவனை நேசத்தோடுதான் பார்த்துக் கொண்டிருக்கிறது … பார்த்துக் கொண்டிருக்கிறது .   எப்போது ஒரு அம்மா தனது கண்களை எடுக்கிறாளோ , அவளது குழந்தை திரியத் ...

ஒரு கவிஞனின் உறுதிமொழிகள் – ததௌஸ் ரோசவிச்

  பல ஆண்டுகளாக நான் எனது அம்மாவுக்கு மூன்று உறுதிமொழிகளைத் தொடர்ந்து கொடுத்துவந்திருக்கிறேன்: அவளை நான் க்ரகோவ் நகரத்துக்கு வரவழைத்து ஷாக்கபனாவுக்கும் மலைப்பகுதிகளுக்கும் கடலோரப் பகுதிகளுக்கும் அழைத்துச் செல்வேன் என்று. ஆனால் அம்மாவுக்கு க்ரக்கோவைப் பார்க்கும் சந்தர்ப்பமே வரவில்லை. க்ரக்கோ மட்டுமில்லாமல் மலைகளையும் கடலையும் அவள் பார்க்கவேயில்லை. நான் எனது வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை. அம்மாவின் மரணம் நிகழ்ந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. க்ரகோவுக்கு அழைத்துவந்து சுகியன்னிஸ், புனித மேரியின் தேவாலயம், வாவல் கோட்டை, விஸ்துலா எதையும் நான் ஏன் அவளுக்குக் காட்டவேயில்லை. ஆமாம். அவளது மகன் க்ரகோவில் வாழ்ந்துவந்தான்…’நம்பிக்கையளிக்கும்’ இளம் கவிஞனாக…அவனது அம்மாவைப் பற்றி நிறைய கவிதைகளை எழுதியவன்… எல்லா அம்மாக்களைப் பற்றியும் இன்னும் நிறைய கவிதைகளை எழுதியவன்…1947-ம் ஆண்டிலோ 1949-ம் ஆண்டிலோ அவன் தனது அம்மாவை க்ரகோவுக்கு அழைத்து வரவேயில்லை. அவள் என்னிடம் வலியுறுத்தியதே இல்லை. அதுகுறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதும் இல்லை. அம்மா வார்சாவைப் பார்த்ததேயில்லை. அம்மா விமானத்தில் ...