“ கடந்து சென்றபடியிருக்கும் கம்பிகளுக்குப் பின்னே எதிலுமே நிலைக்க முடியாதவாறு அவன் பார்வை களைத்திருக்கிறது . ஆயிரம் கம்பிகள் இருப்பது போல அவனுக்கு தோன்றுகிறது கம்பிகளுக்கு அப்பால் உலகமே இல்லாததுப் போலவும் ” - ரில்கே ( சிறுத்தை கவிதையிலிருந்து ) ஒரு சிறுகிராமத்துக்கு வரும் சர்க்கஸின் பின்னணியில் எடுக்கப்பட்ட அரவிந்தனின் ‘ தம்பு ’ திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தபோது , சர்க்கஸின் அனைத்து அங்கங்களையும் இணைக்கும் ஒரே சரடு வன்முறைதான் என்று தோன்றியது . சர்க்கஸ் மேலாளர் , சர்க்கஸ் கலைஞர்கள் , சர்க்கஸ் பார்வையாளர்கள் , சர்க்கஸின் அத்தியாவசிய அம்சங்களான விலங்குகள் என எல்லாவற்றையும் அதுவே இணைக்கிறது . சர்க்கஸை வாய்பிளந்து பார்க்கும் சிறுவர்கள் , யுவதிகள் , இளம் மனைவிகள் , நடுத்தர வயது ஆண்கள் , உயர் வர்க்கத்தினர் முதலிய அனைவரின் கண்களும் சர்க்கஸின் ஒரு பகுதியாகவே நிகழ்கின்றன . படத்தில் சர்க்கஸின் முக்கிய அங்கமான குரங்குக்கு ஒப்பனைக்காரர் சட்டை போட்டு , முகத்தில் பௌடர் அப்பி , கண்மை பூசுவார் . சர்க்கஸின் வன்சங