ஒரு கப்பல் பயணத்தின் போது நடந்த சம்பவம் இது. கப்பலில் இருந்த கிளி மிகவும் சலிப்புற்றுப் போயிருந்த சமயத்தில் அங்கு ஒரு குரங்கும் இருப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டது. பொழுதைப் போக்கும் எண்ணத்துடன் குரங்கிடம், “ ஒளிந்து விளையாடு விளையாட்டில் ஈடுபடலாமா? ” என்று கிளி கேட்டது. அதற்கு குரங்கு, “ அந்த ஆட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது எப்படி விளையாடுவது? ” என்றது. கிளி விளக்கிச் சொன்னது. “ மிகவும் எளிய விஷயம் அது. கண்களை மூடிக்கொண்டு சுவரைப் பார்த்தபடி நின்று நூறுவரை எண்ண வேண்டும். அந்த நேரத்தில் நான் எங்காவது சென்று ஒளிந்து கொள்வேன். எண்ணி முடித்த பிறகு நீ என்னைத் தேடிப்பிடிக்க வேண்டும். அவர்கள் விளையாட்டில் ஈடுபட்ட சமயம் கப்பல் வெடித்து விட்டது. குரங்கு நூறு என்று எண்ணி முடித்தபோது கப்பல் வெடித்தது. கடலில் மிதந்த ஒரு மரப்பலகையில் சென்று கிளி அமர்ந்து கொண்டது. குரங்கு அந்தப் பலகையை நோக்கி நீந்தி வருவதற்கு முயன்று சோர்ந்து போனதைக் கிளி கவனித்தது. பலகை மீது ஏறிய குரங்கு கிளியைப் பார்த்து, “ என்ன முட்டாள்தனமான விளையாட்டு இது? ” என்று சீறிய...