Skip to main content

Posts

Showing posts with the label எம் டி முத்துக்குமாரசாமி

என்னிடம் உருவாகும் ஆதிசொல் நாடகமல்ல, கவிதைதான் – எம். டி. முத்துக்குமாரசாமி

இலக்கியம், பண்பாடு, தத்துவம் மற்றும் கோட்பாடுகளை உரையாடலின் அந்தரங்கத்தோடும் படைப்பூக்கம் வெளிப்படும் தீவிரத்தோடும் எழுதக்கூடிய அரிதான விமர்சகர், நாட்டுப்புறவியல், பண்பாட்டு அறிஞர் எம் டி முத்துக்குமாரசாமி. 1980-களின் இறுதியில் தமிழில் அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் சார்ந்து நடைபெற்ற கோட்பாட்டு அறிமுகங்கள், விவாதங்களில் தாக்கம் செலுத்தியவை இவரது எழுத்துகள். தமிழ் சிறுகதை எழுத்தில் நிகழ்ந்த சோதனைகளில் எம் டி முத்துக்குமாரசாமியின் சிறுகதைகள் குறிப்பிடத்தகுந்தவை. தமிழ் எதார்த்தவாத சிறுகதைகளைப் படித்துச் சலித்து, நூதனம் தேடுவோருக்கு, இவரது ‘மைத்ரேயி மற்றும் பிற கதைகள்’ ரசமான அனுபவத்தைத் தரும். இவரது முதல் கவிதைத் தொகுதியான நீர் அளைதல்-க்குப் பிறகு சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ தமிழ் நவீன கவிதை சார்ந்து காத்திரமான இடையீடாகும். நாம் இனி வெறுமனே கதையை நிகழ்த்திக் கொண்டிருக்க முடியாது. எண்ணற்ற கதைகளும், கதைச் சட்டகங்களும் நிலைத்து வாழ்ந்து பின்னர் உளுத்துப் புதைந்து அழிந்துவிட்ட ஒரு கலாசார நினைவில், கதை மேல் கதைபோன்ற ஒன்றை, கவிதைமீது கவி...

எம். டி. முத்துக்குமாரசாமியின் மொழிப் பாவனைகளும் அவர் உருவாக்கும் அதீதங்களும்

  எம். டி. முத்துக்குமாரசாமியின் புதிய கவிதைத் தொகுதியான ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு தேர்ந்த நடிகனின் மொழி பாவிப்புகள் இவரது படைப்புகள் என்ற பதிவு ஏற்பட்டது. உணர்ச்சி, மொழி, வெளியீடு எல்லாம் தீவிரமாக வெளிப்பட்டாலும் எல்லாமே பாவனை என்ற உணர்வை வாசிப்பவனிடம் ஏற்படுத்தியபடியே தான் வாசிப்பைத் தொடரச் சொல்பவை அவரது புனைவுகள். ஆனால் உணர்ச்சியோ, மொழியோ, வெளியீடோ, படிமங்களோ கேலிச் சித்திரமாகாமல் படைப்பு உத்தேசிக்கும் விளைவையும் எம் டி முத்துக்குமாரசாமி, நம் கலாசார நினைவுகளை மொழிவழியாக  அதீதமாகப் பெருக்கி உருவாக்கி விடுகிறார்.   ஒரு கதாபாத்திரம் தன் கதையிலிருந்து அவ்வப்போது நழுவி விழும்போது, ஒரு கதாபாத்திரம் தன் கதையையே சந்தேகப்படும் போது நாடகம் தொடங்குகிறது. இது உண்மை அல்ல பொய் ; இது உண்மை அல்ல நடிப்பு; இது உண்மை அல்ல பாவனை; இது உண்மை அல்ல ஒரு கூத்து; இது கதை அல்ல, கதை யின் மேல் நிகழ்த்தப்படும் உரை ; மொழிவழியாக தானே இங்கு எதுவும் நிகழ்வதில்லை ; நிகழ்த்தப்படுகிறது. இந்த உணர்வை எம். டி. முத்துக்குமாரசாமியின் சிறுகதை...

சிகரெட்டைத் திருடிய இன்னொரு எருமைமாடு

நாட்டார் வழக்காற்றியல் அறிஞர், இலக்கிய நுண்ணுணர்வும் தெளிவும் கொண்ட தமிழின் அரிதான கோட்பாட்டு விமர்சகர், சிறுகதை எழுத்தாளர் என்ற பல அடையாளங்களை கொண்ட எம். டி. முத்துக்குமாரசாமி, தனது வலைப்பூவில் திடீரென்று கவிதைகளை எழுதத் தொடங்கிய காலத்தில் (2011, 2012 ஆண்டுகளாக இருக்கலாம்) அவரிடம் விடுபட்டிருந்த தொடர்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்டேன்.  அவர் தனது வலைப்பூவில் தொடர்ந்து எழுதிய கவிதைகளைத் தொடர்ந்து படித்து உற்சாகமாக அவருக்கு உடனுக்குடன் தொலைபேசியில் வினையாற்றிக் கொண்டே இருந்தேன். அந்தக் கவிதைகள் எனது கவிதைப் புலனைப் புதுப்பித்த நாட்கள் அவை. ‘நீர் அளைதல்’ என்று அது பின்னர் நற்றிணை பதிப்பகத்திலிருந்து தொகுப்பாகவும் வெளிவந்தது. மினிமலிஸ்ட் கவிதை என்னும் வடிவம் குறித்த ஆழமான பிரக்ஞையுடன் எம். டி. எம்-மின் கேலி, பரந்த வாசிப்பறிவு, உணர்வு உச்சங்கள், திருநெல்வேலி பண்பாடு சார்ந்த தனியானதும், பொதுவானதுமான நினைவுக் குறிப்புகள் விளையாட்டுத் தன்மையோடு அநாயசமாக வெளிப்பட்ட கவிதைகள் அவை; தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுக் கூறுகளும் வெளிப்படும் எழுத்து மொழியும், பேச்சு மொழியும் இசைமையோடு கலக்கும்...