சிந்திப்பதென்றால் என்னவென்பதை நாம் புரிந்துகொள்ளும்வரை கவிதை என்றால் என்னவென்பதையும் நாம் புரிந்துகொள்ளவே போவதில்லை என்கிறார் ஹைடக்கர் . அவர் மேலும் சொல்கிறார் . மிக சுவாரஸ்மான விஷயம் என்னவெனில் , சிந்திப்பது இயற்கையாகவே சிந்திப்பதிலிருந்து வேறுபட்ட ஒன்று , விரும்புவதிலிருந்து வேறுபட்ட ஒன்று . இந்த வேறுபட்ட ஒன்றைப் பிடிக்கவே பொறிவைக்கிறது கவிதை . 000 நமது ஆழ் அனுபவங்கள் அனைத்தும் மொழியற்றது என்றே எனது உள்ளுணர்வு கூறுகிறது . காட்சிகள் இருந்தாலும் பார்ப்பதற்கும் சொல்வதற்குமிடையில் வார்த்தைகளால் விவரிப்பதற்குமான இடைவெளியை விவரிப்பதற்கு வார்த்தைகள் இருக்காது , உதாரணத்துக்கு . வார்த்தைகளுக்குள் இடமுடியாததைக் குறிப்பதற்கு மொழிவழியாகக் கண்டுபிடிக்கும் பாதைகளில்தான் கவிதையின் வேலையாக உள்ளது . 000 ஒவ்வொரு புதிய உருவகமும் ஒரு புதிய சிந்தனை , மெய்மை சார்ந்த புராணிகத்தின் ஒரு விள்ளல் . கலையின் அறியாத அம்சத்தின் ஒரு பகுதி உருவகம் , எனினும் சத்தியத்தைத் தேடும் மகத்தான வழி அதுதான் என்பதில் நான் நிச்சயமாக இருக்கிற...