Skip to main content

Posts

Showing posts with the label சுரேஷ் குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித்தின் விரித்த கூந்தல்

இருப்பின் ரீங்காரத்தை கவிதை ஒருவகையாகப் பிடிக்கிறது. சிறுகதையில் அந்த ரீங்காரம் இன்னொரு வடிவத்தில் கேட்கிறது. நாவலில் அந்த ரீங்காரம், ஒரு சிம்பொனி ஆக மாறுகிறது என்று தோன்றுகிறது. இந்த மூன்றிலும் உயர்வு, தாழ்வு இல்லை. ஆனால், இலக்கியம் தொடர்பிலான தற்போதைய தொழில் சார் பார்வை உயர்வு, தாழ்வைக் கற்பித்து விட்டது. அந்தப் பார்வை அருமையான கலைஞர்களையும் சேதாரப்படுத்திவிடுகிறது. நேற்று சுரேஷ்குமார இந்திரஜித் நேர்காணல்கள் நூல் எனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அழிசி வெளியீடாக வந்திருக்கிறது. புத்தகத்தைச் சும்மா புரட்டிக் கொண்டிருந்தேன். அந்தப் புத்தகத்தில் கடைசியாக சுரேஷ்குமார இந்திரஜித் எழுதிய இரண்டு கவிதைகளைப் பார்த்தது மிகவும் அதிர்ச்சியையும் வியப்பையும் தந்தது. ஒரு கவிதையை சந்திரகுப்தன் என்ற பெயரில் காலச்சுவடு சிறப்பு மலரில் எழுதியிருந்திருக்கிறார்.  1991-ல் வெளியிடப்பட்ட காலச்சுவடு ஆண்டு மலர் எனது மாணவ நாட்களில் திரும்பத் திரும்ப படித்தது. ஆனாலும் சந்திர குப்தன் என்ற பெயர் அப்போது ஏற்படுத்திய வியப்பு தான் ஞாபகத்தில் இருக்கிறது. கவிதையை நான் படித்தோ படிக்காமலோ கடந்திருக்கிறேன். சுரேஷ் த...