Skip to main content

Posts

Showing posts with the label முதலைகள்

முதலைகள் எடுக்காத செல்ஃபி

கடும் வெயிலுக்குப் பழக்கமான சென்னைவாசிகளே பகலில் பதங்கமாகி , அலுவலகக் குளிர்சாதன வசதியிலும் மாலைக் கடற்காற்றிலும்தான் தங்களை மீண்டும் சேகரித்துக்கொள்ளும் நாட்கள் இவை . இப்படிப்பட்ட ஒரு நாளில் முட்டுக்காடு முதலைப் பண்ணைக்கு ஏன் சென்றேன் ? வெயிலுக்கு எதிராகப் போரிடும் ஏதோ ஒன்றுதான் , ‘ மெட்ராஸ் முதலைப் பண்ணை ’ யில் தண்ணீரில் இருக்கும் முதலைகளை நோக்கி ஈர்த்திருக்க வேண்டும் . சென்னையிலிருந்து 40 கிமீ தொலைவிலுள்ள இப்பண்ணை ஆசியாவின் முதல் முதலை இனப்பெருக்க மையம் . தோலுக்காகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் முதலைகள் வேட்டையாடப்படத் தொடங்கிய நிலையில் , அருகிவந்த முதலை இனங்களைப் பாதுகாக்கவும் அவைகுறித்து ஆராய்வதற்காகவும் தொடங்கப்பட்டது இது .   குழந்தைகளை ஈர்க்கும் வண்ணங்கள் , சித்திரங்களுடன் வழிகாட்டுத் தகவல் பலகைகள் , அடிக்கத் தொடங்கிவிட்ட வெயிலையும் தாண்டிப் பசிய மரங்களின் நிழலும் நீரின் சத்தமும் மெத்தென்ற மணலும் ஆறுதலைத் தருகின்றன . அழியாமைக்கு அருகே இருப்பவை கற்கள் ; அந்தக் கற்களின் முதல் ...