Skip to main content

Posts

Showing posts from April, 2012

க.நா.சுவில் தொடங்கலாம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் இன்று செழுமையும் , பன்மைத்தன்மையும் , பலபடித்தான பாதைகளும் கொண்ட நவீனத் தமிழ்க் கவிதைகளைப் புதிதாக படிக்கத் தொடங்கும் வாசகன் , நவீன கவிதையின் இன்றைய உருவம் , எதேச்சையாக , எதிர்ப்புகளற்று , வசதிகள் கொண்ட ஒரு சூழலில் பிறந்ததாகவே எண்ணக்கூடும் . புதுக்கவிதை தன்னை நிறுவிக் கொண்ட கதை அவ்வளவு எளிதானதல்ல .. இலக்கண வயப்பட்ட சட்டகங்களிலிருந்து மட்டுமல்ல , பழமையின் இறுகிய தடைகொண்ட மனோபாவங்களிலிருந்தும் , சிந்தனை மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரத்தை பெற்ற உருவம் புதுக்கவிதை . பழைய வெளியீட்டு வடிவத்திலிருந்து புதிய வெளியீட்டு வடிவத்தை தமிழ்க் கவிதை அடைந்தது உடல் ஒரு சட்டையைத் துறந்து , மற்றொரு சட்டையை அணிவது போன்றதல்ல . ஒரு உயிர் தன் உடலையை மறு தகவமைப்புக்கு உட்படுத்தியதற்கு சமமானது . தமிழில் பாரதியால் வசனகவிதை என்ற பெயரில் தொடங்கப்பட்டு , புதுமைப்பித்தன் , கு . ப . ரா . ஆகியோரால் ஓரளவு முயற்சிக்கப்பட்டு , ந . பிச்சமூர்த்தியும் , க . நா . சுவும் நிலைநிறுத்திய வடிவம் புதுக்கவிதை . ந . பிச்சமூர்த்தி மற்றும் க . நா . சு ஆகியோர் முயன்ற கவிதைகளை இப்போது ஒப்பிடும்போது , க

சரிதான்

ஷங்கர்ராமசுப்ரமணியன் சரிதான் உலர் ஓலையாக இருந்தாலும் நானோ நீயோ வாழ்வோ எதுவாய் இருந்தாலும் சர் ... ரி தான் கீழே விழுந்தால் சரசரவென்று சத்தமாய் தெரியவேணும்

கதையின் காகம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் வெயில் வேகும் நிலத்தில் பயணியொருவன் விட்டுச்சென்ற பானையின் மிஞ்சிய அடிநீராய் இருந்தேன் வெகுநாட்களாக . நிலமெங்கும் நீர்தேடி தாகத்துடன் ஒருநாள் காகமும் வந்தது .. பானையின அடியில் தன் அலகால் எட்டமுடியாத என்னை அன்பின் கூழாங்கற்கள் கொண்டு நிரப்பிப் பருகத் துணிந்தது காகம் . என் கடன் தீர்க்க நானும் ஆரவாரித்துத் ததும்பினேன் .. என் உயிரின் வேகத்திலா கூழாங்கல்லின் கனத்திலா காகத்தின் தாக தாபப் பரபரப்பிலா தெரியவில்லை பானை உடைந்தது நான் மீண்டும் கல்லாய் காய்ந்தேன் ..