Skip to main content

Posts

Showing posts from February, 2013

ஒரு நாள்

நீதிபதிகள் குடியிருப்பில் தனியே வசிக்கிறார் மாவட்ட சார்பு நீதிபதி வீட்டில் ஒரு நாற்காலி ஒரு உணவுத்தட்டு ஒரே ஒரு கத்தியை பராமரித்து வருகிறார் காலை நடைக்குச் செல்லும்போது அழைத்துச் செல்லும் வளர்ப்புநாயை தெருநாய்களுடன் குலாவ நீதிபதி அனுமதிப்பதில்லை குறைந்த கொழுப்புச்சத்து கொண்ட நார்ச்சத்து உணவையே கவனமாக தேர்ந்தெடுத்து உண்கிறார் அத்தியாவசியப் பொருட்கள் காய்கறிகளை சிறுவணிகர்களிடமே வாங்குகிறார் பாதுகாப்பான பரஸ்பரநிதி திட்டங்களிலேயே முதலீடுகளைச் செய்பவர் குழந்தைத் தொழிலாளர் முறை மரணதண்டனைக்கு எதிரானவர் இறைச்சி சாப்பிடாதவர் என்றாலும் நீதிபதியின் வீட்டுக்கத்தி கூர்மையானது நீதிமன்றத்தின் ஓய்வுஅறையில் மதிய உணவுக்குப்பின் சற்று இளைப்பாறி அன்றைய வழக்குவிவரக் கட்டுகளைப் பிரிக்கிறார் தாமதமாகிறது பணிவுடன் உணர்த்துகிறார் ஊழியர் வேகமாக கூடத்துக்குள் நுழைகிறார் நீதிபதி கசகசக்கும் வெயிலில் முடிவில்லாமல் மூச்சைப் பெருக்கியபடி குற்றத்தரப்பும் வழக்காடுபவர்களும் சாட்சி சொல்ல தாமதமாக வந்த மருத்துவரும் போலீஸ்காரர்களும் சேர்ந்து வளாகத்திண...

என் ரோஜாவே

உன் இடைவிளிம்பில் பேண்டிசிலிருந்து நழுவும் நீல,சிகப்புப் பூக்கள் இந்த மாலைச் சூரிய வெளிச்சம் தரும் அகாரண சந்தோஷம் அதில் ஒளிரும் உன் தேகம் நிச்சயமின்மையின் சமுத்திரத்தில் மிதக்கும் என் ரோஜாவே மூன்று சாலைகள் பிரியும் இப்பாலத்தின் முனையில் சிதறிக் கிடப்பதையெல்லாம் என் காதல் என்று / என்றா தொகுப்பேன். (அச்சம் என்றும் மரணம் என்று இரண்டு நாய்குட்டிகள் தொகுப்பிலிருந்து(2008)

என் புத்தகங்கள்

ஜோர்ஜ் லூயி போர்ஹே (மொழிபெயர்ப்பு: அசதா, மணல் புத்தகம்-2) என் புத்தகங்கள் (என் இருப்பை அவை அறியாது) காதோர நரைகளும் சாம்பல் பூத்த கண்களும் கொண்ட இந்த என் முகத்தைப் போல என்னிலொரு பகுதி. நம்பிக்கையற்று க்ளாசுக்குள் பார்க்கிறேன் உள்ளீடற்ற என் கையை வழியவிடுகிறேன் நான் நினைக்கிறேன், தர்க்கத்தின் கசப்பு குறையாது என்னை வெளிப்படுத்தும் இன்றியமையாத அவ்வார்த்தைகள் என்னை யாரென அறியாத பக்கங்களில் இருக்கின்றன நான் எழுதியவற்றில் அல்ல அவ்வகையில் அது நல்லது இறந்தவர்களின் குரல்கள் எப்போதும் எனக்குச் சொல்லும்

தற்கொலை

ஜோர்ஜ் லூயி போர்ஹே இரவில் நட்சத்திரம் இருக்காது, இரவும் இனிமேல் இருக்காது நான் இறப்பேன்  என்னுடன் தாங்க இயலாத பிரபஞ்சம் மொத்தமும். நான் ப்ரமிடுகள், பதக்கங்கள் கண்டங்கள் மற்றும் முகங்களை துடைத்தழிப்பேன். இறந்தகாலத்தின் வண்டலை இல்லாமல் செய்வேன் வரலாற்றை புழுதியாய் புழுதியிலும் புழுதியாய் ஆக்குவேன் நான் இறுதி சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கடைசிப் பறவைக்கு காதுகொடுக்கிறேன் யாருக்கும் நான் இல்லை.

நிலவு - இரண்டு மொழிபெயர்ப்புகள்

 ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் (மரியா கோடமாவுக்கு) அந்தப் பொன்னில்தான் எவ்வளவு தனிமை இரவுகளின் நிலவு ஆதாம் முதலில் கண்ட நிலவு அல்ல நெடிய நூற்றாண்டுகளாகத் தொடரும் மனிதனின் பார்வை புராதன ஆற்றாமையுடன் அவளை நிறைத்துள்ளது அவளைப் பார் அவள் உன் கண்ணாடி. (புகைப்படத்தில் போர்ஹே தனது காதலி மரியா கோடமாவுடன்) நிலவு - இன்னொரு மொழிபெயர்ப்பு அப்படியொரு தனிமை பொன்னில் இரவுகளின் நிலவு முதன்முதலில் ஆதாம் பார்த்த நிலவு அல்ல நீண்ட நூற்றாண்டுகளின் மனிதக் கண்காணிப்பு அவளைப் புராதன வருத்தங்களால் நிரப்பியுள்ளது அவளைப் பார் அவள் உன் கண்ணாடி (மொழிபெயர்ப்பு: அசதா, மணல்புத்தகம்-2)

எம்ஜிஆரின் அரசாங்கம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் பொங்கல் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாகவே எம்ஜிஆரின் பிறந்த நாளும் வந்துபோய் விடுகிறது. நாங்கள் வசிக்கும் வேளச்சேரி தண்டீஸ்வரம் மார்க்கெட் பகுதியின் முனையில் அண்ணா திமுக கொடிக்குக் கீழே எம்ஜிஆரின் புகைப்படத்துக்கு மாலையிட்டு, ஒரு ஸ்பீக்கரும் கட்டி எம்ஜிஆரின் பாடல்களை காலையிலேயே அன்று ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். காலை ஏழு, ஏழரை மணிவாக்கில், அந்த மார்க்கெட்டில் தென்படும் நடுவயதைக் கடந்த கூலித்தொழிலாளர்கள் வரிசையாக அமர்ந்து பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த நாளில்தான் அவர்கள் எல்லாம் சேர்ந்து இருந்தார்களா? இல்லை எனக்கு சேர்ந்து தெரிந்தார்களா?. தண்டீஸ்வரம் தேவாலயத்தைச் சுற்றியும், மார்க்கெட்டிலும் பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் பார்த்துவரும் தாடி வைத்த நான்கைந்து கந்தல் சட்டைகளை உடுத்தி வலம்வரும் கருப்பு மனிதர், அந்தக் கூலித்தொழிலாளர்களின் உற்சாக குரல்களுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தார்.  எம்ஜிஆரின் சகல உடல்மொழிகளையும் அவர் பாவனை செய்தார். தாடி அடர்ந்திருக்கும் அவர் முகத்தில் கண்கள் மட்டும் வெள்ளையாக சிரிப்பவை. அவர் நடுத்தர வயதைக் கடந்தவர். யாரிடம...

உழைப்பாளர் சிலை மீது சலனத்தின் காகம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் சென்னையின் பொது அடையாளங்களில் ஒன்று   உழைப்பாளர் சிலை. அதை வடித்த சிற்பி , தமிழகத்தின் நவீன கலை முன்னோடிகளில் ஒருவரான ராய் சௌத்ரி. அந்தச் சிலையை எனக்குத் ' தெரியும் ' என்று நினைத்திருந்ததால் அதன் மேல் எனக்கு கூடுதல் கவனம் இருந்ததில்லை. மனதின் மழுங்கலான  நினைவுகளில் ஒன்றாக அச்சிலை சில நாட்களுக்கு முன்பு வரை இருந்துவந்தது. வளர்ந்தபிறகு உழைப்பு , உழைப்பு தொடர்பாக பொதுப்புத்தி வைத்திருக்கும் புனிதம் , கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற பத ம் இன்று கொண்டிருக்கும் பொருள் , அந்தப் பதத்தின் மீதான எரிச்சல், தொழில்மயமான உலகில் மனிதன் , நவீன எந்திரத்தின் இன்னொரு உறுப்பாக சுருங்குதல் போன்றவற்றால் உழைப்பு என்ற விஷயத்தின் மீது மிகுந்த வெறுப்பே இன்னமும் எனக்கு இருக்கிறது. அந்த வெறுப்பு எனக்கு உழைப்பாளர் சிலை   மீதான அலட்சியமாகவும் மாறி யிருக்கலாம். நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் எழுத்தாளர் சி.மோகன் போன்றோர் , ராய் சௌத்ரி பற்றி எழுதிய கட்டுரையில்   உழைப்பாளர் சிலை பற்றியும் எழுதியிருந்தும் ஏனோ நான் உழைப்பாளர் சிலையை விலக்கிய...