நண்பர்களே வணக்கம்...இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நண்பர்களே வணக்கம் என்று கூறுவது எப்படி ஐதீகமாக, பழக்கமாக மாறியுள்ளதோ இன்றைக்கு எழுத்தும் ஒரு பழக்கமாகி விட்டது..வெளி.ரங்கராஜனின் ஊழிக்கூத்து பற்றி எழுதப்பட இருக்கும் கட்டுரையை நீங்கள் கூகுளில் படித்துவிடலாம். கவிதை பழக்கமாகி உள்ளது, சிறுகதை பழக்கமாகியுள்ளது, மேடைப் பேச்சு பழக்கமாகியுள்ளது, நாவல் பழக்கமாக மாறியுள்ளது..தலையங்கங்கள் பழக்கமாக மாறிவிட்டன...மதிப்புரைகளும், கட்டுரைகளும், இரங்கல் எழுத்துகளும்,பத்திகளும் பழக்கமாக மாறியுள்ளன.. 90 களுக்குப் பிறகு கிரானைட் கற்களுக்காக தமிழகத்தில் மலைகள் மறையத் தொடங்கிய போதுதான் பெரிது பெரிதாக புத்தகங்களும் வெளியாகத் தொடங்கின. இதை நாம் தனித்த நிகழ்வுகள் என்று கொள்ளமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இரண்டுக்கும் உள்ள தொடர்பை நாம் பார்க்கத் தவறிவிட்டதும் ஒரு பழக்கத்தின் அடிப்படையில்தான். இந்தப் பழக்கம் உருவாக்கிய மௌடீகத்தில் தான் படைப்பு என்ற செயல்பாட்டின் அடிப்படை லட்சணங்களில் ஒன்றான எதிர்ப்பு, தனிமைக்குணம், பசியுணர்ச்சி, விசாரணை ஆகியவற்றை நாம் இழந்திருக்கிறோம். முரண்பாடுகள்