கவிஞர் பச்சோந்தியிடமிருந்து இரவலாகப் பெற்ற ஷோபாசக்தியின் புதிய சிறுகதைத் தொகுதியான ‘ கருங்குயில் ’- ன் முதல் கதையான ‘ மெய்யெழுத்து ’ எனது பால்யகால வாசிப்பு நினைவின் மங்காமல் இருக்கும் புகைப்பட உருவமான திலீபனைப் பற்றியது என்பதால் காய்ச்சல் வந்தது போல அந்தக் கதையைப் படித்தேன் . கதையில் எட்டாம் வகுப்புச் சிறுவனாக ராகுலனுக்கு திலீபன் அறிமுகமானார் . அதே எட்டாம் வகுப்பில்தான் ஜூனியர் விகடனில் இந்திய அமைதிப்படையிடம் விடுதலைப் புலிகளின் சார்பில் சில கோரிக்கைகளை வைத்து உண்ணாவிரதம் இருந்து இறந்துபோன திலீபனின் புகைப்படங்களையும் செய்திகளாகப் படித்தேன் . ஆயுதப் போராட்டத்தில் இருந்த திலீபன் காந்தியின் வழியில் அமைதிப் போராட்டம் நடத்தி உயிர்நீத்தார் என்பது அப்போதைய புரிதலாக இருந்தது . திலீபனின் கண்ணாடி அணிந்த கண்கள் மறக்க இயலாதவை . நல்லூர் முருகன் கோயில் வீதியில் ஒரு பந்தலின் கீழே கூட்டத்துக்கு நடுவில் திலீபன் படுத்திருக்கும் வண்ணப்புகைப்படம் இந்தச் சிறுகதையைப் படித்தபோது மேலெழுந்துவந்தது . திலீபன் வழியாகவே விடுதல