Skip to main content

Posts

Showing posts with the label டெரன்ஸ் மாலிக்

மனித அகந்தைக்கு மேலே இயற்கை

பிரபஞ்சத்தின் இயக்கத்துக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையிலான தொடர்பை தனது சினிமாக்கள் மூலம் விசாரிக்கும் அபூர்வமான சினிமா இயக்குனர்களில் ஒருவர் டெரன்ஸ் மாலிக். அவரது சமீபத்திய படைப்பான 'எ ஹிட்டன் லைப்' எழுத்தாளர் ஜார்ஜ் எலியட்டின் வார்த்தைகளுடன் முடிகிறது. ‘உலகம் வாழ்வதற்கான இடமாக ஆவதற்கு வரலாற்று ரீதியாகப் பதிவாகாத செயல்பாடுகளும் ஒருபங்கு காரணமாக உள்ளன. உலகம் அத்தனை மோசமாக உங்களுக்கும் எனக்கும் இல்லாமல் இருக்கிறதென்றால் அதன் பாதிப் பொறுப்பு, விசுவாசத்துடன் கூடிய ஒரு வாழ்க்கையை யாருடைய கண்களுக்கும் படாமல் வாழ்ந்த தனிநபர்களையே சாரும். அதிக எண்ணிக்கையில் போய் காணப்படாத சமாதிகளில் அவர்கள் ஓய்வெடுக்கிறார்கள்.’ கொடுங்கோலன் ஹிட்லருக்கு ஆதரவான உறுதிமொழியை எடுப்பது கிறிஸ்துவுக்கு எதிரான செயல் என்று கருதி, மரண தண்டனையை அடைந்த குடியானவன் பிரான்ஸ் ஜெகர்ஸ்டாட்டர் என்ற சாதாரணனின் கதை இது. மரணம் அவன் மீது விதிக்கப்பட்டதா? இல்லை. தான் நம்பும் சத்தியத்துக்காக அவன் மேற்கொண்ட தேர்வு அது. இயற்கையோடு சேர்ந்து வாழும் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த செயின்ட் ரேட்கண்ட் கிராமத்தின் நடுத்தர விவசாயி ...