க லாச்சாரங்கள், வாழ்க்கை முறைகள், பார்வைகள் வேறுபட்டிருந்தாலும், ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பல்வேறு இடர்பாடுகளுக்கிடையிலும் வாழ்ந்து கனிவது என்பது எல்லோரும் விரும்பும் கனவாகவே இருக்கிறது. உராய்வுகள், கசப்புகள், விரிசல்கள், துரோகங்களைத் தாண்டி நீடிக்கும் தாம்பத்தியத்துக்குள் இருக்கும் அமரத்தன்மையையும் இனிப்பையும் இந்தச் சிறிய படைப்பு மௌனமாக நமக்குள் படரவிடுகிறது. தற்போது 71 வயதாகும் பெண் நாவலாசிரியர் டயன் ப்ரோகோவன் ஃப்ளெமிஷ் மொழியில் எழுதிய இப்படைப்பின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு மட்டுமே ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது. முதுமையைக் கடந்துகொண்டிருக்கும் ஆலிஸ், வழக்கமாகத் தன் கணவர் ஜூல்ஸ் சமையலறையில் தயார் செய்யும் காபியின் நறுமணத்தில் கண் விழிக்கிறாள். ஆனால், காபித் தூளை வடிகட்டியில் தயார் செய்துவிட்டு, சோபாவில் உட்கார்ந்தபடியே ஜூல்ஸ் இந்த உலகைத் துறந்துவிட்டதை எழுந்த பிறகே ஆலிஸ் பார்க்கிறாள். காலையில் நம் எல்லாரையும் போலவே எழுவதற்குச் சோம்பி, சுகமாய் ஆலிஸ் உறங்கும் அற்புத அரை மணி நேரத்தில், ஜூல்ஸ் மரணமடைந்துவிட்டதை முதலில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்குப் பிறகு அவள