ஷங்கர்ராமசுப்ரமணியன் எனது கவிதை ஒரு குட்டிநாயாக வடிவெடுக்கிறது கருதிக்கொள்ளலாம் எனது கவிதை ஒரு முட்டையாக இடப்படுகிறது வைத்துக்கொள்ளலாம் எனது கவிதை ஒரு குழந்தையாகப் பிறக்கிறது எண்ணிக்கொள்ளலாம் எனது கவிதை ஒரு நட்சத்திர மீன் ஆக்கிக்கொள்ளலாம் ஆனால் அந்தக் குட்டிநாயைச் சுற்றி அந்த முட்டையைச் சுற்றி அந்தக் குழந்தையைச் சுற்றி அந்த நட்சத்திர மீனைச் சுற்றி வடிவம் கொண்டது தவிர மீந்த பிறிதொன்று எதுவும் இல்லை என்று கருதும் என் கவிதையின் நியாயம் மட்டும் புரியாத துக்கம் எனக்கு .