தமிழ்நாட்டில் சில ஆயிரங்கள் கணக்கில் வாசகர்களிடம் புழங்கி, அதிகார, ஆட்சி செல்வாக்கு இல்லாத மணிக்கொடி, எழுத்து, கசடதபற சிறுபத்திரிகைகளும் அதில் வந்த படைப்புகளும் ஆவணமாக்கத்துக்கும் விரிவான ஆய்வுகளுக்கும் உள்ளாகியிருக்கின்றன. ஆனால், வெகுஜன அரசியலும் வெகுஜன சினிமாவும் வெகுஜனப் பத்திரிகைகளும் அன்றாட உணவாகவும் பேச்சாகவும் மூச்சாகவும் இருந்த ஒரு நூற்றாண்டு தமிழ் வாழ்க்கையில் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஒரு சினிமா போஸ்டர் கூட ஆவணப்படுத்தப்படவில்லை. குமுதம், ஆனந்த விகடன் தொடங்கி சரோஜாதேவி வரை சென்ற நூற்றாண்டில் நம் தமிழ் சமூகம் நவீனமடைந்த வரலாற்றைக் காட்டும் வெகுஜன பத்திரிகை எழுத்து, சித்திரங்கள் ஆகியவற்றுக்கு பதிவே இல்லாமல் பெரும் மறதியின் புதைசேற்றில் உள்ளன. சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் ஆண்கள், தமிழ் பெண்கள், அணிந்த ஆடைகள், புழங்கிய வீடுகள், பயணித்த வாகனங்கள் ஆகியவற்றுக்கு நம்மிடம் இருக்கும் அரிதான ஆவணங்களில் ஒன்றான ஓவியர் ஜெயராஜின் சித்திரங்களும் அப்படித்தான் நமது மறதிக்குள் போய்விட்டன. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 86 வயதில் மனைவி ரெஜினாவுடன் சென்னை சூளைமேட்டில் உள்ள வீட்டி...