Skip to main content

Posts

Showing posts with the label அம்பேத்கர்

சவிதாவின் காதலராக பாபாசாகேப் அம்பேத்கர்

  நாம் பொதுவில் அறிந்த பாபா சாகேப் அம்பேத்கர் - சுதந்திர இந்தியாவின் அரசமைப்பைச் செதுக்கிய முதன்மைச் சிற்பி . இந்தியக் குடியரசின் முதல் சட்ட அமைச்சர் . உலகின் தலைசிறந்த அறிவுஜீவிகளில் ஒருவர் . ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒடுக்கப்பட்டு நிராதரவாக நின்றிருந்த மக்களின் மீட்பர் . சட்டஞானி . மனிதநேயவாதி . திறன்மிக்க நாடாளுமன்றவாதி . இப்படி பல குணாம்சங்களால் அறியப்படுபவர் . சவிதா அம்பேத்கரின்   நூலில் அம்பேத்கர் வேறுவிதமாய் வெளிப்படுகிறார் . ஐந்து வயதிலேயே தாயை இழந்தவராக . பிறகு பிரியமான அண்ணனையும் , தொடர்ந்து முதல் மனைவியையும் தந்தையையும் இழந்தவராக . தனிமையின் மாபெரும் கசப்பும் துயரமும் உடலில் நோய்களாக உருமாறி அலைக்கழித்தவராக . சிறுவயது தொடங்கி , கடைசிவரை தீண்டப்படாதவராக . வரலாற்றுக் கொடூரங்களையும் நோய்களையும் தாங்கிய உடலாக . இப்படி , அம்பேத்கர் வரலாற்று நாயகராக மட்டுமில்லாமல் பிறிதொரு ஆழமான இருப்பாகவும் இந்நூலில் காட்சியளிக்கிறார் . சவீதா அம்பேத்கரின் நூலில் , காந்தியின் மகாத்மாத்துவத்தையே தார்மீகமாக கேள்விக்கும் சந்...