தமிழில் : ஷங்கர்ராமசுப்ரமணியன் ஷின் ஷின் மிங் என்னும் இந்தப் பாடல், ஜென் குருவான சோசன் அவர்களால் ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஜென்னின் தெளிவான அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக இது கருதப்படுகிறது. ஷின் ஷின் மிங்-க்கு “பரிபூர்ண மனம் மீதான பாடல்கள்” என்று இதன் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் எரிக் புட்கோனன் மொழிபெயர்த்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு நாடுகளில் ஜென் ஆர்வலர்களிடம் புழங்கிவரும் ஷின் ஷின் மிங்-ன் தமிழ் மொழிபெயர்ப்பு இது. இதை நான் செய்வதற்கான ஆங்கில மின்படியை(பிடிஎப்) கவிஞர் ஆனந்த் சரியான தருணத்தில் தந்தார். ஒரு சொல்லோ, ஒரு மகாவாக்கியமோ, ஒரு கவிதையோ, ஒரு நூலோ சரியான சமயத்தில் தான் என்னிடம் வந்து சேர்கிறது என்ற நம்பிக்கை அதிகரித்து வரும் காலம் இது. அப்படி வந்த ஷின் ஷின் மிங்-ஐ மொழிபெயர்த்து இங்கே பகிர்கிறேன்.எனது தானியப் பண்டாரத்தில் சேர்க்கிறேன்... தேர்வென்று எதுவும் இல்லாதவர்களுக்கு மகத்துவப் பாதை சிக்கலானதல்ல. ஏக்கத்தையும் துவேஷத்தையும் விட்டுவிட்டால் அது தன்னாலேயே வெளிப்படுவது. வேறுபாடு சின்னஞ்சிறியதாக...