Skip to main content

Posts

Showing posts from December, 2019

அருவியை மௌனமாக்கும் சிறு செடி கவிதை

உலகின் வெவ்வேறு தேசங்கள், கலாசாரம், அழகியல், அரசியல் பின்னணிகள் கொண்ட கவிஞர்களையும் கவிதைகளையும் அறிமுகம் செய்து எஸ். ராமகிருஷ்ணன் தடம் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கவிதையின் கையசைப்பு’. இதில் 12 கவிஞர்களும் அவர்கள் கவிதைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு மாத இடைவெளி கொடுத்து அந்தந்தக் கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் வாசிப்பதற்கான அவகாசம் தேவைப்படும் அளவுக்கு திடமான அறிமுகங்கள் இவை. ஒரு ஜப்பானியக் கவிஞரையும் ஒரு ரஷ்யக் கவிஞரையும் அவர்களது கவிதைகளையும் எனக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட இடைவெளியில் படிப்பது மூச்சுமுட்டுவதாக இருந்தது. ஒரு கோள் இன்னொரு கோளுடன் மோதுவது போல மூளையில் கூப்பாட்டையும் ரப்ச்சரையும் உணர்ந்தேன். எஸ். ராமகிருஷ்ணன், ஒவ்வொரு கட்டுரையிலும் அவனது உலகத்தை அறிமுகப்படுத்தும் போது, கவிதை குறித்த அந்தந்தக் கவிஞர்களின் சிந்தனைகளையும் தனது எண்ணங்களையும் சேர்த்தே தொடுத்துச் செல்கிறார். 000 ஒரு கவிதையை எப்போதும் அகத்தில் சமைப்பவனாக, கவிதை ரீதியில், படிமங்கள், உருவகங்களின் அடிப்படையிலேயே சிந்திப்பவனாகவும் பேசுபவனாகவும் இருக்கிறேன். ஆ

நஞ்சுண்டனோடு சில நினைவுகள்

நஞ்சுண்டனைப் பார்ப்பதற்கு முன்னரே அவருடைய ‘சிமெண்ட் பெஞ்சுகள்’ கவிதைத் தொகுதியைப் பார்த்திருந்தேன். நீல நிறத்தில் அப்போது பிரபலமாக இருந்த ஸ்க்ரீன் பிரிண்டிங் முறையில் வெளியான புத்தகம் அது. அமைப்பியல்வாதம் தொடர்பில், தமிழ் சிறுபத்திரிகை சூழலில், புரிந்தும் புரியாமலும் பெங்களூரு முதல் நாகர்கோயில் வரை தாக்கத்தையும் அச்சுறுத்தலையும் செலுத்திய காலகட்டத்தில் அறிமுகமான பெயர்களில் நஞ்சுண்டனும் ஒன்று. ந. பிச்சமூர்த்தி நூற்றாண்டை முன்னிட்டு சென்னை பாரதியார் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தான் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும், மொழி செம்மையாக்குனருமான நஞ்சுண்டன் அறிமுகமானார். பாரதியார் இல்லத்துக்கு கவிஞர் விக்ரமாதித்யனுடன் போயிருந்தேன். கிட்டத்தட்ட நிகழ்ச்சி முடியும் தருவாயில் மதிய உணவு இடைவேளைக்குப் போனதாக எனக்கு நினைவு. ஞானக்கூத்தன், ஜி. கே. மூப்பனார் எல்லாரும் கலந்துகொண்ட கூட்டம் அது. பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களும் கலைந்துகொண்டிருந்த நிலையில், விக்ரமாதித்யன் நேரடியாகப் போய், டேய் நஞ்சுண்டா என்று அருகே போய், அவரது தலையில் இருந்த பாலுமகேந்திரா தொப்பியை கழற்றி எடுத்துவிட்டார்.

விலாஸ் சாரங்கின் தம்மம் தந்தவன்

கலைஞர்கள், கவிஞர்கள் தொடங்கி மனிதனின் பேராசையால் சுரண்டப்பட்ட பூமியைப் பற்றிக் கவலைப்படும் சூழலியாளர்கள் வரை புத்தர் இன்றும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார். ப்ளேட்டோவின் சமகாலத்தவராக புத்தரை வைத்து, உலகளவில் நவீன சிந்தனைகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திலிருந்து புத்தரின் வாழ்வையும் மரணத்தையும் சமகாலத்தில் நின்று பரிசீலிக்கும் பரிசீலிக்கும் நாவல் ‘தம்மம் தந்தவன்’. மராத்திய, ஆங்கில எழுத்தாளரான விலாஸ் சாரங், கவிஞரும் கூட. பிறந்த அரண்மனைக்கும் புகுந்த அரண்மனைக்கும் நடுவே நடுக்காட்டில் ஒரு சாலமரத்தின் மடியில் மரத்தைப் பிடித்தபடி தாய் மாயாதேவிக்குப் பிறந்த சித்தார்த்தன், அரச மரத்தடியில் ஞானம் பெறுகிறார். பெரும் கருணையையும் ஈவிரக்கமற்ற தன்மையையும் ஒருசேரக் கொண்ட வெட்டவெளி இயற்கையில் பிறந்து, அதே வெட்டவெளியில் ஞானமென்று சொல்லப்படும் புரிதலை அடையும் புத்தனின் வாழ்க்கையைப் பற்றிய இந்த நாவல், ஒரு கவிஞனால் எழுதப்பட்ட அனுகூலங்களைக் கொண்டிருக்கிறது. தெரியாத கத்திமுனையின் கூரைக் கொண்ட சித்தரிப்பும் மொழியும்.   பழைய உபநிடதங்கள் தொகுக்கப்பட்டு பிரபலமான, புதிய உபநிடதங்களும் எழுதப்பட்ட கி

ஜோஸே ஸரமாகோவின் அறியப்படாத தீவின் கதை

போர்ச்சுகீசிய எழுத்தாளர் ஜோஸே ஸரமாகோ எழுதிய ‘அறியப்படாத தீவின் கதை’ நெடுங்கதையை பத்தாண்டுகளுக்கு முன்னர் புது எழுத்து இதழில் படித்தபோது அடைந்த மனப்பதிவு வேறு. காலச்சுவடு வெளியீடாகப் புத்தகத்தில் படித்து முடித்தபோது, பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்தக் கதை என்னச் சித்திரத்தைக் கொடுத்தது என்பதை நினைவுகூர முயன்றேன். நான் இப்போது அடைந்த உணர்வு, மனப் பிம்பம், அனுபவம் வேறு. ஜோஸே ஸரமாகோ இந்தக் கதை குறித்து அடைய நினைத்த இலக்குக்குப் பக்கத்தில் இப்போதுதான் என்னால் செல்ல முடிந்திருக்கிறது என்றும் சொல்லலாம். ‘அறியப்படாத தீவின் கதை’ முற்றிலும் உருவகக்கதை. இதன் தொடக்கத்தில் ஒரு மனிதன், அரசன் ஆட்சி நடத்தும் இடத்தின் கதவைத் தட்டி ஒரு விண்ணப்பம் செய்கிறான். அவன் மாலுமி இல்லை. கடல் பயணத்தில் அனுபவம் கொண்டவனும் அல்ல. ஆனால், அவன் அறியப்படாத தீவு ஒன்றைக் கண்டுபிடிக்க அரசனிடம் ஒரு கப்பலைக் கேட்டு விண்ணப்பம் செய்கிறான். அந்த அரண்மனையில் விண்ணப்பம் கேட்க ஒரு கதவும், சலுகைகளுக்கான ஒரு கதவும் உள்ளது. ஆனால், அரசன், வழக்கம்போல சலுகைகளுக்கான கதவிலேயே சஞ்சரிக்கிறான். விண்ணப்பம் செலுத்தும் கதவைத் திறப்பவள்

ஷோபா சக்தியின் இச்சா

துயரம் , இழப்பு , மரணம் , சித்திரவதைகள் , ரத்தக் கோரங்கள் நிகழ்ந்த பிறகு சொல்லப்படுகையில் அவை எத்தனை கொடூரமானதாக இருந்திருந்தாலும் அவை கதையாய் , காவியத்தின் சுவையாய் ஆகிவிடுகின்றன. காலத்தின் தொலைவில் நினைவெல்லாம் துய்க்கும் பொருளாகிறது. தீவிரமும் அதேவேளையில் , சுவாரசியமும் பொதுத்தன்மையும் கொண்ட சர்வதேசக் கதையாக தமிழ் நவீன இலக்கியம் மாறுவதற்கு இனப் படுகொலையும் யுத்தமும் தேவையாக இருந்திருக்கிறது. அந்தக் கதையாடலின் நட்சத்திரமாக எழுந்த கதைசொல்லி ஷோபா சக்தி. தமிழ் நவீன இலக்கியத்தில் அவலத்தின் அத்தனை லட்சணங்களையும் கொண்டு யுத்தச் சுவையைத் தனது தனித்தன்மையான அழகியலாக ஆக்கியவர். யுத்தம் என்ற பெரிய பாம்பின் வாயாகத் திகழும் காமம் , வாலான மரணத்தைக் கவ்வ முயன்றுகொண்டேயிருக்கும் படைப்புதான் ‘ இச்சா ’. காவியச் சுவைகள் என்று ஒன்றைக்கூட விடாமல் , நகைச்சுவை வரை அனைத்துக் குணங்களையும் சேர்த்து ஷோபா சக்தி சமைத்த துல்லியமான சர்வதேச உணவு ‘ இச்சா ’. இதற்கு முந்தைய ‘ பாக்ஸ் ’ நாவலில் இலங்கையின் ஒரு கற்பனைப் பிராந்தியத்தை வைத்துக் கதைசொன்ன ஷோபா சக்தி , இதில் கற்பனை மொழியான ‘ உரோவன் ’ மொழியில் ‘ ஆலா

புதுச்சேரி என்னும் விடுதலை நிலம்

சென்ற நூற்றாண்டின் இறுதியில் தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் சிறுபத்திரிகைகளை ஊடகமாகக் கொண்டு இலக்கியக் கோட்பாடுகளும் புதிய எழுத்துமுறைகளும் முயற்சிக்கப்பட்டன. சோவியத் யூனியனின் உடைவு, தலித் அரசியல் எழுச்சி, உலகமயமாதல் பின்னணியில் மாறிவரும் வாழ்வைப் புரிந்துகொள்வதற்கும் எதிர்கொள்வதற்குமான புதிய தத்துவக் கருவிகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டன. அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம், மாந்திரீக யதார்த்தவாதம் தொடர்பில் நடந்த விவாதங்கள், எழுத்துமுறைகளின் அதிகபட்சத் தடயங்களைக் காணவேண்டுமென்றால் ரமேஷ் பிரேதனின் படைப்புகள் அதற்கு உதாரணமாகத் திகழ்பவை. கலையும் தத்துவமும், மெய்யியலும் அரசியலும், புனைவும் அபுனைவும், வரலாறும் புராணங்களும் அருகே அமர்ந்து உரையாடும் எழுத்துகள் அவை. தமிழ் வாழ்க்கை, தமிழ் எதார்த்தம், தமிழ் அரசியல், தமிழ் மெய்யியலின் அடையாளங்கள் நவீன கதைகளில் அரிதாகவே தென்பட்ட   ஒரு காலகட்டத்தில் செய்யப்பட்ட அரிதான தலையீடு இது. இந்திய, தமிழ் வாழ்க்கையில் பொது மனிதன் என்ற ஒருவன் இன்னும் உருவாகவில்லை; சாதி என்ற ஒன்றுதான் எல்லா இந்தியர்களையும் தமிழர்களையும் பிரிப்பதாகவு