கல்கத்தா, மும்பையை மையமாகக் கொண்டு உருவான இந்தியக் கலை மரபின் தொடர்ச்சியில் சுதந்திரத்துக்குப் பிறகு தன் சுயமரபிலிருந்து எழுந்த கலை இயக்கம் மெட்ராஸ் கலை இயக்கம். சென்னை கவின்கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்த கே. சி. எஸ். பணிக்கர், சிற்பி தனபால் ஆகியோரால் உத்வேகம் பெற்று ஆதிமூலம், சந்தானராஜ், கே. ராமானுஜம் என உருவான கலைமேதைகளின் தொடர்ச்சியில் உருவானவர் சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி. தேசிய விருதுகளையும் சர்வதேசப் புகழையும் பெற்ற படைப்புகள் இவருடையவை. கும்பகோணம் கவின்கலை கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வுபெற்றவர். சுவாமிமலை ஸ்தபதிகள் குடும்பப் பாரம்பரியத்தில், 11-ம் நூற்றாண்டிலிருந்து நீளும் சிற்பிகளின் கால்வழி மரபில் வந்த நவீன சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதியிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது... தாத்தா, தாத்தாவுக்கு அப்பா என்ற நீண்ட மரபு கொண்ட சுவாமிலை ஸ்தபதிகள் குடும்பத்தில் பிறந்து படிக்க வந்தவர் நீங்கள். அந்த அடிப்படையில், மரபு உங்கள் மீது எப்படியான செல்வாக்கைச் செலுத்தியது....சொல்லுங்கள்... 1880-களில் சென்னை கவின்கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்த இ. பி. ஹெவ...