நண்பனை முன்வைத்து சில ஆய்வுக்(!) குறிப்புகள் உறங்காப்புலி நண்பன் படம் பார்த்து முடித்தபோது சமச்சீர் கல்வி , கும்பகோணம் பள்ளி தீ விபத்து முதல் படிப்பின் அழுத்தம் தாளாமல் சமீபத்தில் ஆசிரியையைக் கொலை செய்த மாணவனைப் பற்றிய செய்தி கள் எல்லாம் எனக்கு ஞாபகத்தில் வந்துபோனது. இந்தியாவில் குழந்தைகளின் பிரத்யேக படைப்பூக்கத்தை ஊக்குவிக்காத கல்வி அமைப்பு , எல்கேஜி முதல் உயர்கல்வி வரை மனப்பாட இயந்திரங்களாக மாணவர்களை மாற்றுவது வரை எல்லாவற்றையும் சிறப்பாக நண்பன் பட மே பேசிவிட்டது. ஆனால் நண்பனை முன்னிட்டு எனக்கு ஏற்பட்ட ஏமாற்ற அம்சம் குறித்து மட்டும் இங்கே பேசலாம் என்று இருக்கிறேன். ஜெண்டில்மேன் படத்திலிருந்து ஷங்கரின் சினிமா என்னும் பிரமாண்டமான விருந்துச் சாப்பாட்டைச் சுவைத்தவர்களுக்கு அவரது கதாநாயகிகள் மற்றும் தனிப் பாடல் நாயகிகளின் முக்கியத்துவம் என்னவென்று நன்றாகவே உணர்வார்கள். ஜெண்டில்மேனில் தேசலான , இழுத்துப் போர்த்திக் கொள்ளும் கட்டுப்பெட்டி நாயகியாக மதுபாலா வந்தாலும் , டெல்லியிலிருந்து வரும் பெண்ணும் , சிக்குபுக்கு கௌதமியும் தீபாவளிப் பட்டாசாக காமத்துய்ப்பை வழங் கத் தவறவில்லை .