Skip to main content

Posts

Showing posts with the label ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தனின் ‘அழிவுப் பாதை’

ஞானக்கூத்தனின் ‘அழிவுப் பாதை’கவிதையில் வரும் காட்சி இன்று பலருக்கும் பரிச்சயம் இல்லாதது. அதுகுறித்த எனது ஞாபகத்தை முதலில் சொல்லவேண்டும்.தென்காசியில் மேட்னி ஷோ பார்ப்பதற்காக கீழப்பாளையத் தெரு வீட்டிலிருந்து கிளம்பி உலகம்மன் கோயிலைக் கடந்தபோதுதான் அக்காட்சியை முதல்முறை பார்த்தேன் – 12 வயதுச் சிறுவனாக. ஒரு பாம்பாட்டி. பக்கத்தில் பாம்புகளோடு சில கூடைகள். ஒரு கூடை மட்டும் லேசாகத் திறக்கப்பட்டு, கருப்பு நிறத்தில் பாம்பு சுருண்டிருந்தது.பாம்பின் வாயிலிருந்து நூலிழையாக இரட்டை நாக்கு அவ்வப்போது தென்பட, பாம்பாட்டி பேசிக்கொண்டிருந்தார். பத்து நிமிடத்துக்கு மேல் பேசிவிட்டு, சுற்றி நின்றிருந்தவர்களை, முட்டியைக் கட்டாமல் குந்தி உட்காரச் சொன்னார். முட்டியைக் கட்டினால் ரத்தம் கக்கிவிடுவீர்கள் என்று சொல்லி வட்டத்தை நெருக்கினார். ஞானக்கூத்தனின் அழிவுப் பாதை கவிதையில் வருவதுபோலவே பாம்பாட்டி பேசியதும்,  மகுடிநாதனுக்குக் கட்டுப்பட்டது போல எட்டுப்புறமும் திறந்திருந்த பஜாரில், சொற்கள் வழியாக உருவான சிறையில்நாங்கள் மயங்கிக் கட்டுண்டோம்.பிறகு, கூட்டத்தில் ஓரு பையனை எழும்பி வரச் செய்தார். அவனை மயக்கித் தரைய...

ஞானக்கூத்தனின் விடுபட்ட நரி

     க டவுள், தத்துவம், அரசு எல்லாவற்றின் பார்வையிலுமே யாரோ எதுவோ எவர்களோ விடுபட்டுவிடுகின்றனர். அந்த விடுபட்டதின் குரலையே இலக்கியம் எடுத்துக் கொள்கிறது என்பதை ஞானக்கூத்தனின் ‘விட்டுப் போன நரி’ கவிதை கூடுதலாகப் புரியவைத்துவிடுகிறது. வரலாறு, தத்துவம் சாராம்சப்படுத்தும் உண்மைக்கு மாறானதொரு மெய்மையாக அதனாலேயே இலக்கியம் திகழ்கிறது. திருவிளையாடற் புராணத்தின் புகழ்பெற்ற படலமான ‘பரி நரியாக்கிய படலம்’- ல் இந்த விடுபட்ட நரியை பரஞ்சோதி முனிவர் பார்க்கவேயில்லை. ஓடுகின்ற நரியில் ஒரு நரியாக முகவரி இன்றி இருந்த அந்த நரிக்கு ஒரு குடியானவனின் உருவத்தையும் குரலையும் ஞானக்கூத்தன் நவீனகவிதையில் தருகிறார். அவன் எப்போதும் எளியவனாக வரலாற்றில் தொடர்பவன்.   சிறுவன் இல்யூஷாவின் இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டி மீது இடப்பட்டிருந்த   பூ உதிர்ந்து விழுகிறது. அந்த நிகழ்ச்சி கடவுளுக்குத் தெரியுமா என்று இறுதி ஊர்வலத்தில் பங்குபெறும் நாயகன் அல்யோஷா கேட்கிறான். சரித்திரம், தத்துவம், அரசு, கடவுள் என கண்டும் காணாமல் விடப்பட்ட, உதிர்க்கப்பட்ட மலர்களை தெரியுமா தெரியுமா என்று கேட்டுக்கொண்டு பி...

இடையில் பிரிக்கும் நதி

ஷங்கர்ராமசுப்ரமணியன் ஞானக்கூத்தனின் மறைவுக்குப் பிறகு வெளியாகியுள்ள ‘இம்பர் உலகம்’கவிதைத் தொகுதி அவரது நீடித்த தரத்தையும் உள்ளடக்கத்தின் வளமையையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒரு வடிவத்தில் நீண்ட காலம் புழங்கியவர்கள் என்ற கவுரவம், பணிமூப்புத் தகுதி மட்டுமே கோராத புதுமையும் வளர்ச்சியும் கொண்டது ஞானக்கூத்தனின் கவிதை உலகம். இப்படித் தங்களையும் தங்கள் மொழியையும் உள்ளடக்கத்தையும் புதுப்பித்தபடி இளம் கவிஞர்களின் மொழியையும் பாதிப்பவர்கள் என்று ஞானக்கூத்தனையும் தேவதச்சனையும் சொல்ல முடியும். இம்பர் உலகம் என்றால் இந்த உலகம் என்று பொருள். இந்த உலகத்தைப் பற்றி மட்டுமே எழுதிக்கொண்டிருந்தவர் ஞானக்கூத்தன். இத்தொகுதியில் வரும் ஏழாவது கவிதையான ‘குருதியின் குரல்’எதிர்வினைகளே எதிர்ப்புகளாக மயங்கித் தெரியும் இக்காலகட்டத்துக்குப் பொருத்தமானதாகத் தோன்றுகிறது. நாயை, அதன் குரைப்பைப் பரிசீலனை செய்யும் கவிதை குருதியின் குரல். எனக்கு சமீபத்தில் நாய்களை, குறிப்பாக, தெருநாய்களைப் பார்க்கும் போது, நேசமும் அவற்றுடனான அடையாள உணர்ச்சியும் பெருகி வருகிறது. நாய்கள் மழையையும் கோடை யையும் வயோதிகத்...

ஞானக்கூத்தன் நேர்காணல் இடிபாடுகளுக்கிடையே எனது கவிதை இருக்கிறது

எள்ளல் மற்றும் சிரிப்பை தமிழ் புதுக்கவிதைக்குத் தந்தவர் அரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் ஞானக்கூத்தன். புதுக்கவிதை வடிவத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடனும், உற்சாகத்துடனும் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருபவர். விஷ்ணுபுரம் விருது   அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது.. தி இந்து கலை இலக்கியம் இணைப்பிதழில் வெளியான நேர்காணலின் எடிட் செய்யப்படாத வடிவம் இது.. உங்களது சமீபத்திய பென்சில் படங்கள் கவிதை நூலில் உங்களது குழந்தைப்பருவம் மற்றும் இளம்பிராயத்து சித்திரங்கள் நிறைய இடம்பெறுகின்றன.. ஆறு, கடல், மரங்கள், விலங்குகள், கோவில்கள் எல்லாமே ஒரு குழந்தைக்கு முதல் முறையாக அறிமுகமாகிறது. அவைதான் மனதில் ஆழமாகப் பதிகிறது. அதிலிருந்து தான் உலகத்தை ஒரு குழந்தை புரிந்துகொள்கிறது. வளர வளர இன்னொரு உலகம் அந்தக் குழந்தைக்கு அறிமுகமாகிறது. ஏற்கனவே மனதில் இருக்கும் உலகத்தை ஒப்பிட்டுப் பார்த்து அது இன்னொரு உலகத்தைப் புரிந்துகொள்கிறது. வாலிப வயதில்  எதிர்பாலினம்,குடும்பம், அதைக் கட்டுப்படுத்தற சமூகம், சமூகத்தைக் கட்டுப்படுத்தற நாடு,மொழி எல்லாம் பற்றிய...