Skip to main content

Posts

Showing posts from January, 2015

ஆயிரம் சந்தோஷ இலைகள் கவிதைத் தொகுதி முன்னுரை

ஆற்றிடைத் தீவு ஷங்கர்ராமசுப்ரமணியன் எனது தொடக்கநிலைக் கவிதைகளை இப்போது   படிக்கும்போது ,  அவை கருத்துகளால் , கதைகளால் ,  நாடகங்களால் நால்திசையிலும் இருந்து   ஒளிவீசும் வீடாய் இருந்துள்ளதை உணரமுடிகிறது. மொழிப்பிரக்ஞை ,  வடிவ உணர்வு ,  அர்த்த   அணுக்கம் ,  வார்த்தைச் சிக்கனம் கூடிவராத நிலையில் அவை இருந்தாலும் அவற்றின் மேல்   படர்ந்திருக்கும் ஒளியைப் பார்க்கும்போது எனக்கு ஏக்கமாக உள்ளது. அந்தக் கவிதைகள்   கடந்த நிலப்பரப்புகள் ,  முகங்கள் , உணர்வுகள் எல்லாம் மேலெழுந்து சமநிலையின்மையை   உருவாக்குகிறது. பெருமிதம் , அசூயை , கூச்சம் , சுயகிண்டல் எனக் கலவையான உணர்வுகளை அடைகிறேன். அடுத்தடுத்த தொகுதிகளில் வெளிச்சம் குறைந்து ,  பயம் மிகுந்து ,  பேச்சொலியும் குறைவதை உணரமுடிகிறது. கதை   முற்றிலும் அகன்று சிறுகாட்சிகளாக ,  ஒரு மின்னல்வெட்டாக கவிதைகள் மாறின. பேச்சின் அரவம் குறைந்துவிட்டது. நான் பேசுவதற்கு விரும்புவன். எனது கவிதைகள் என்னைப் பேசாத இடத்துக்கு இழுத்துப்போகிற தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். காலப்போக்கில் வடிவங்களின் மீது   பெரும் ஏக்கம் உருவாகியுள்ளது. புதிய நிலப்பர

குற்றால லிங்கங்கள்

ஷங்கர்ராமசுப்ரமணியன் காலங்கள் முகூர்த்தங்கள் வேளைகள் தாண்டி அருவியில் குளித்துக் கொண்டிருக்கின்றன குற்றாலத்து லிங்கங்கள்

இளங்கோ புரோட்டா ஸ்டால்

ஷங்கர்ராமசுப்ரமணியன் ஊருக்கு வரும்போதேல்லாம் திருநெல்வேலி சந்திப்பிள்ளையார் முக்கு இளங்கோ புரோட்டாக் கடையில் ஆஜர் ஆகிவிடுவான் சங்கரன் . நள்ளிரவில் இரண்டாம் காட்சி பார்த்துவிட்டு வீடு திரும்பும்போதும் இளங்கோவை அவன் புறக்கணித்ததில்லை. இப்போது அவனுக்கு வயது நாற்பது. மஞ்சள், கரும்பழுப்பு, செக்கச்சிவப்பு மூன்று குழம்புகளையும் ஊற்றச்சொல்வான் முதிய பரிசாரகனின் கருப்புக் கைகளும் சேரவேண்டும். புரோட்டோவை ஆசையோடு பிய்க்கச் சொல்வான். எலும்புத் துணுக்குகளை இலையோரம் ஒதுக்கி  வைப்பான் சைவக்குடும்பத்தில் பிறந்த சங்கரன் . முதல்முறையாக ஒன்பது வயதில் அப்பாவோடு ரொட்டி சால்னா அறிமுகம் ஆனது . கோழி எலும்புகள் தான் செதில்செதிலாக புரோட்டா ஆகிறது என்று கற்பனையும் செய்தான் இப்போதும்  சொந்த ஊர் திருநெல்வேலிக்கு வரும்போது தாபத்துடன் ஏலக்காய் மணக்க மணக்க புரோட்டா சாப்பிடுகிறான். அல்வாவைப் போலவே புரோட்டாவையும் தாமிரபரணிதான் ருசிக்கவைக்கிறது  என்பது அவன் முடிவு. வெங்காயம் நிறைந்த உடல் பூரித்த ஆம்லேட்டை அசௌகரியத்தோடும் வலியோடு