Skip to main content

Posts

Showing posts with the label நகுலன்

ஒருநாள் - நகுலன் (எழுத்து இதழ் - 1959)

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவா...

அவரும் நானும் நீயும் - நகுலன்

  புகைப்படம் : தி. பாண்டியராஜூ அவர் என்னைப் பார்க்க வந்திருந்தார் – வேறு யார் – மனோதான் – தயவுசெய்து ஆராய்ச்சியில் புகுந்துவிடாதீர்கள் – அவர் பெயரே அதுதான் – மனோ – மனோ – னோ னோ னோ னோ – போதும் ஐயா போதும் – என்றாலும் நானும் இதையெல்லாம் படித்தவன்தான் – தானாவது நானாவது – உன் தலை – அவர் தீவிரம் – எதிலும் என்று வைத்துக் கொள்ளுங்கள் – நானோ, னோ னோ – தீ புகைந்துவிட்டது. ஒருபிடி சாம்பலாகிவிட்டேன் – இன்னும் ஒரு பொறி கனல்கிறது – அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள் – அவர் சொன்னார் – என்றுதானே – சாம்பலைக் கரைக்க சந்ததியுமில்லை – அதனால் எல்லாம் சுபம் – அவர் மேலும் தொடர்ந்தார் – ஒரு தவா திருச்சியோ அல்லது மதுரையோ என்னவோ நிச்சயமில்லை – யாரோ ஒரு பெரிய அரசியல் தலை பவனி வருவதாகப் பேச்சு – தலை வரப்போவது என்னவோ 4-மணி – 2 மணிக்கே போக்குவரத்து எல்லாம் தடை செய்யப்பட்டது – ஒரு லாரி டிரைவர் அலுத்துக்கொண்டே இன்னொருவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் அல்லது உசாவினான் “ஜடத்தை எடுத்தாகிவிட்டதா?” எனக்கு உடன் பிடிபடவில்லை. அடுத்த வினாடி பிடிபட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள் – இப்பொழுது தெரிகிறதா?” என்றார். எதுவாயிருந்தால் என்ன...

நகுலனின் நூற்றாண்டில் எனது இன்னொரு புத்தகம் - நினைவின் குற்றவாளி

ஒரு எழுத்தாளனின் ஆக்கங்களாக , அவனது தொனியில் ஈடுபட்டு பிரதிபலித்து திரும்பத் திரும்ப மனத்தில் புறத்தில் புத்தகங்களில் போய் சரிபார்த்துக் கொண்டு ஆளுமையில் அவரைப் புதுக்கிக் கொண்டு நான் அதிக காலம் செலவழித்திருப்பது நகுலனுடன். பொருள் பொதிந்த ஒரு குடித்தனமாகவே நகுலனின் எழுத்துக்களுடன் இருபதாண்டுகளைக் கடந்த இந்த உறவைப் பார்க்கிறேன். 1997- ம் ஆண்டுவாக்கில் சுந்தர ராமசாமி அப்போது பாம்பன்விளையில் நடத்திவந்த நண்பர்கள் சந்திப்புக் கூட்டத்தை முடித்துக் கொண்டு , பெ. அய்யனாருடன் வலியத் தொற்றிக் கொண்டு நானும் தளவாய் சுந்தரமும் சண்முக சுந்தரமும் திருவனந்தபுரத்தில் உள்ள நகுலன் வீட்டுக்குச் சென்றதிலிருந்து அந்த உறவு தொடங்கியது. அவரைத் தீவிரமாக வாசிக்கத் தொடங்கியது 2004- க்குப் பிறகு. கிட்டத்தட்ட சிறியதாகவும் பெரியதாகவும் நகுலன் தொடர்பிலான எனது கட்டுரைகள் , குறிப்புகளை 17 ஆண்டுகளாக எழுதிவந்திருக்கிறேன். நகுலன் எழுத்துகள் குறித்த எனது டைரி இது. நகுலனை நான் தொடர்ந்து வரைந்துவைத்துக் கொண்ட சித்திரங்களின் கையேடு என்றும் சொல்லலாம். ஷ்ரோடிங்கரின் பூனை உள்ளடக்கத்தையே ஒரு பேச்சில் அளித்து எழு...