புதிய நிறங்கள் புதிய புரட்சிகள் கேஎப்சியில் கோழி வறுபடும் நறுமணம் காற்றில் எண்ணைக்கான யுத்தங்கள் சொல்கிறார்கள் வனங்கள் அருகிவிட்டன தண்ணீர் விஷமாகிவிட்டது புலிகள் , குட்டிகள் தலைகுனிந்து கடவுளிடம் திரும்பிக்கொண்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள் போக்குவரத்து சிக்னல்களில் அலை அலையாக யாசிக்கும் பசி எமது காமத்தைவிட வன்மைகொண்ட ஆனால் மென்மையானதும் நுட்பமானதுமான ஆடைகள் உள்ளாடைகள் நட்பும் காதலும் சிக்கலும் , புதிருமாக மாறிய அந்தத் திருப்பத்தில் நாகலிங்க மரநிழலில் அவன் அவளுக்காகக் காத்திருந்தான் இன்னும் சில நொடிகளில் முழுவதும் இருட்டப் போகிறது அவனை நோக்கி தெற்கிலிருந்து வந்தாள் அவளின் முகம் தெரியவில்லை எல்லாம் கோடுகளாகி விட்டன தூத்துக்குடி சிங்காநல்லூர் பிரம்மபுத்ராவின் கரையோரம் சியரோ லியான் எந்த முகமாகவும் இருக்கலாம் புறங்கழுத்திலிருந்து உயரும் காலர்கொண்ட ஸ்வெட்டர் அணிந்திருந்தாள் அவள் அவனை நோக்கி வரும்போதே தோள்களை உயர்த்திவிட்டாள் அவனும் உற்சாகத்தில் முன் நகர்ந்தான் நான் பரவசம் கொண்டேன் ழாக் ப்ரெவரை...