Skip to main content

Posts

Showing posts with the label மொழிபெயர்ப்பு கவிதை

அப்பாவின் ஞானத்திலிருந்து சில பகுதிகள் - ஏ. கே. ராமானுஜன்

  “ மைசூரில் கன்னடம், தமிழ், ஆங்கிலம் சரளமாகப் புழங்கிய குடும்பத்தில் 1929 ஆம் ஆண்டு பிறந்தவர் அத்திப்பட்டே கிருஷ்ணசாமி ராமானுஜன். கணிதம் மற்றும் புள்ளியியல் பேராசிரியராக இருந்த தந்தையார் அறிவுஜீவி வாழ்க்கைக்கான ஆதர்சமாக இருந்திருக்கிறார். அம்மா கல்லூரிப் படிப்புக்குச் சென்றிருக்காவிட்டாலும் தமிழிலும் கன்னடத்திலும் விரிவாக வாசித்தவர். ஆச்சாரமானவர்களாக பெற்றோர் இருந்தாலும், வைதீகம், சடங்குகள், இறுக்கமான நம்பிக்கைகளிலிருந்து ஏ. கே. ராமானுஜன் சிறுவயதிலேயே வெளியேறுவதற்கு அவர் கற்ற கல்வி உதவியிருக்கிறது. கிறிஸ்தவ திருச்சபை பள்ளிக்கல்வி மூலம் ஆங்கில வாசிப்பில் சிறுவயதிலேயே மூழ்கத்தொடங்கியதாகச் சொல்கிறார். தமிழின் சங்க கவிதைகள், கன்னட வசனகவிதைகளை சர்வதேச அளவில் சுவாரசியமாக மொழிபெயர்த்து அறிமுகப்படுத்தியவர் என்பது அவரது பிரபலமான அடையாளம். வாய்மொழிக் கதைகள், தாலாட்டுப் பாடல்கள், நாட்டார் பாடல்கள், பழமொழிகள் மூலம் ஒரு கலாசாரத்தை தீவிரமாக ஆராயமுடியும் என்று வெளியுலகத்துக்கு உணர்த்திய இந்திய அறிஞர்களில் முதன்மையானவர் ராமானுஜன். பேராசிரியர், ஆய்வாளர், மொழியியலாளர் என பல அடையாளங்களைத் தாண்டி முத...

எனது பூனைகள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

  நான் அறிவேன் அவர்களின் வரையறுக்கப்பட்ட தேவைகளை வரையறுக்கப்பட்ட வருத்தங்களை நான் அறிவேன்.   ஆனால் நான் அவர்களைக் கவனிக்கிறேன் அவர்களிடமிருந்து பாடம் படிக்கிறேன். அவர்களுக்குத் தெரிந்த கொஞ்சத்தை நான் விரும்புகிறேன் அதுவே ரொம்ப.   அவர்கள் புகார் சொல்கின்றனர் ஆனால் கவலைப்படுவதில்லை. அவர்களின் மிடுக்கு நடை  ஆச்சரியகரமான கண்ணியம். மனிதர்களால் சற்றும் புரிந்துகொள்ள முடியாதவகையில் எளிமையாக அவர்கள் உறங்குகின்றனர்.   நமது கண்களை விட பூனைகளின் கண்கள்  அபரிதமிதமான அழகு கொண்டவை. அவர்களால் 20 மணிநேரம் ஒரு நாளில் உறங்கமுடியும் எந்தத் தயக்கமும் குற்றவுணர்வும் இன்றி.   நான் சோர்வாக உணரும்போதெல்லாம் எனது பூனைகளைப் பார்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. எனது தைரியமெல்லாம் திரும்ப வந்துவிடும்.   நான் அந்த உயிர்களைப் படிக்கிறேன் அவர்களே எனது ஆசிரியர்கள். (சுஜாவுக்கு)

குத்துவாள் - மிகெயில் லெர்மன்தோவ்

ஆமாம், நான் உன்னை நேசிக்கிறேன் என் நம்பகம் வாய்ந்த குத்துவாளே எனது கூட்டாளி நீ உறுதியான டமாஸ்கஸ் தேனிரும்பால் செய்யப்பட்டவன் மனம் முழுக்கப் பழிகொண்ட  கிரிகோரியனால் உருக்கி வார்த்து உருவாக்கப்பட்டவன் காக்கேசியன் ஒருவனால் போருக்காக கூர்மையாக்கப்பட்டவன். தூய்மையான கரமொன்றால்  பிரிவின்போது  நீ எனக்கு அளிக்கப்பட்டாய். நேசத்தின் கடைசி நினைவுப் பரிசு நீ… கசந்து பிரியும்போது  ரத்தம் அல்ல முத்தைப் போன்ற கண்ணீர்  துயரமாக உனது கூர்முனையில்  விழுந்தோடியது.  எஃகாக இருக்கையில் நடுங்கும் தீயில் உன்னை இட்டபோது நீ ஒருகணம் மங்கி பின்னர் சுடர்ந்தொளிர்ந்ததைப் போல  துயரம் தோய்ந்த மர்மக் கனவால் நிறைந்த அவளிரண்டு கருவிழிகளும் எனக்குள்ளேயே நிலைத்துறைந்தன. சாலைகளில் நீ எனக்கு நண்பன் – வார்த்தையற்ற நேசத்தின் நற்கொடை ஒரு பயணிக்கோ – நம்பிக்கை வைக்கக்கூடிய கருவி: நான் ஒருபோதும் மாறப்போவதில்லை என் ஆன்மா  உன்னைப் போல உறுதியான டமாஸ்கஸ் தேனிரும்பால் செய்யப்பட்ட உன்னைப் போல. 

யாசகன் - மிகெயில் லெர்மன்தோவ்

கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு இல்லம் அதன் வாசலில் ஒருவன்  பசி, தாகம், வறுமையின் காரணமாக நன்கொடை கேட்டுக் கொண்டிருந்தான். அவன் யாசகன் குரூரமாய் ஒடுக்குதலுக்குள்ளானவன். அவன் ஒரு ரொட்டித் துண்டை மட்டுமே கேட்டான் அவன் தோற்றத்தில் அத்தனை வேதனை மெலிந்து, நலிந்து அவன் நீட்டியிருக்கும் கரத்தில் ஒரு கூழாங்கல். இப்படித்தான் நான் வீணே  உன் நேசத்துக்காகப் பிரார்த்தித்தேன் கசந்த கண்ணீர், ஏக்கம் மற்றும் உன்மத்தம் கொண்டு. மகத்துவமாகச் செழித்திருந்த எனது புலன்கள்  இப்படித்தான்  உன்னால் என்றென்றைக்குமாகத் தண்டிக்கப்பட்டன.

ஒரு அஞ்சல் அலுவலகமும் இல்லாத நாடு - மூன்றாம் பகுதி - ஆஹா சாகித் அலி

"தொலைந்தவற்றின் முழுமையான வரைபடமும் தீவைக்கப்படும். தொழுகைக்கு அழைப்பவர் இறந்ததிலிருந்து மினாரெட்டின் பாதுகாவலன் நான். நான் உயிர்பிரிவதற்குள் வா. சூரிய ஒளிக்கு நேரே உள்ள, சில சமயங்களில் வெள்ளை, பின்னர் கருப்பாக, ஒரு பைஸ்லி மலராகத் தான் இருக்க வேண்டும்.  அதன் புறத்திலோ பசைகொண்ட தூய்மை, ஈரமாக இலையுதிர் காலத்தின் கடைசி நாட்டை நோக்கி மலர்கிறது -  அதை விலைக்கு வாங்கு, நான் ஒரேயொரு முறை வெளியிட்டு விடுகிறேன், இரவில். நான் கொல்லப்படுவதற்குள், எனது குரல் ரத்து செய்யப்படுவதற்குள் வா.” இந்த கருத்த மழையில், விசுவாசமாய் இரு, மாய இதயமே, இது உன்னுடைய வலி. அதை உணர். அதை நீ உணரவே வேண்டும்.  “எதுவும் மிஞ்சப் போவதில்லை. எல்லாமும் முடிந்துவிட்டது,” அவனது குரலை நான் திரும்பக் கேட்கிறேன் : “இது வார்த்தைகளின் சன்னிதி. எனக்கெழுதிய கடிதங்களை நீ இங்கே கண்டடையலாம். அத்துடன் என்னுடைய கடிதங்களையும். சீக்கிரம் வா, வந்து இந்த காணாமலாக்கப்பட்ட கடித உறைகளைத் திற.”  நான் மினாரெட்டை அடைகிறேன் : நான் நெருப்பு வட்டத்துள் இருக்கிறேன். நான் இருட்டைக் கண்டடைந்துவிட்டேன்.  இது உன்னுடைய வலி. அதை நீ உணர...

நிர்வாணப் பூச்சி - ஹான்ஷான்

ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சீனக்கவிஞர் ஹான்ஷான் எழுதி சசிகலா பாபு மொழிபெயர்த்திருக்கும் 'குளிர்மலை' தொகுப்பிலுள்ள 79-வது கவிதையில் வரும் நிர்வாணப் பூச்சி என்னைத் தூண்டிக் கொண்டிருக்கிறது. அதன் கையிலோ இரண்டு புத்தகங்கள் வேறு உள்ளன. வெள்ளை உடல், கருப்புத் தலையுள்ள பூச்சி. நெடிய தூரம் நடைபயிலும் போது கோணல் மாணலான உடைகளை அணியும் பூச்சி அது. நிர்வாணமாய் இருந்தாலும் அந்தப் பூச்சியின் இடுப்பில் மெய்யறிவின் வாள் உள்ளதாம்.  எதற்கு? அர்த்தமற்ற ஏக்கத்தை வெட்டியெறிவதற்கு.  எல்லாப் பூச்சியும் நிர்வாணமாகவே இருக்கிறது. அப்படியென்றால், குளிர்மலையில் வாழும் இந்தப் பூச்சியின் நிர்வாணம் எதைக் குறிக்கிறது?  தாவோவின் தாக்கத்தைக் கொண்ட சீனக்கவிஞர் ஹான்ஷானின் கவிதைகளில், பூரண அறிவின் வெளிச்சமும் நிறைவும் மட்டும் அல்ல, ஒரு ஏழையின் அல்லல், கவிஞனின் விந்தை, நிறைவின்மையிலிருந்து எழும் பிதற்றல் எல்லாம் உண்டு.  ஹான்ஷானின் வாழ்க்கை பற்றித் திரட்டப்பட்ட விவரங்களைப் படிக்கும்போது, அந்த நிர்வாணப் பூச்சி யார் என்று சில குறிப்புகள் கிடைக்கின்றன. வெளியே ஏழை போலவும் பைத்தியம் போலவும் கோமாளி போலவ...

இதாகா

காண்ஸ்டாண்டைன் பி. கவாஃபி இதாகாவுக்குச் செல்லத் தயாராகும் போது உங்கள் பாதை நெடியதாகவும் முழுக்க முழுக்க சாகச ங்கள்   கண்டுபிடிப்புகளைக் கொண்டதாகவும் இருக்கட்டுமென்று பிரார்த்தியுங்கள் . லஸ்ட்ரிகோனியன்ஸ் , சைக்லோப்ஸ் ,  கோபம் உமிழும் பொசீடியானைப் பார்த்து அச்சம் வேண்டாம் . உங்களது எண்ணங்களை உயரத்தில்   வைத்திருக்கும் வரை அபூர்வமான ஒரு கிளர்ச்சி உங்கள் உயிரையும் உடலையும் கிண்டிக்   கொண்டிருக்கும் வரை அதைப் போன்றவற்றை உங்கள் வழியில்   காணவே மாட்டீர்கள் . உங்கள் ஆன்மாவுக்குள் அவர்களை நீங்கள்   கொண்டு வராவிட்டால் உங்கள் ஆன்மா உங்களுக்கு முன்   அவர்களைக் கொண்டு வந்து   நிறுத்தியிருக்காவிட்டால் லஸ்ட்ரிகோனியன்ஸ் , சைக்ளோப்ஸ் ,  காட்டுமிராண்டி பொசீடியானை நீங்கள் எதிர்கொள்ளவே மாட்டீர்கள் உங்கள் பயணத்தடம் நீண்டதாக   இருக்கவேண்டுமென   வேண்டிக்கொள்ளுங்கள் நீங்கள் இதுவரை பார்த்திராத ...