Skip to main content

Posts

Showing posts with the label ஷோபா சக்தி

சம்பங்கி ஏன் கண்களை மூடினாள்?

  கவிஞர் பச்சோந்தியிடமிருந்து இரவலாகப் பெற்ற ஷோபாசக்தியின் புதிய சிறுகதைத் தொகுதியான ‘ கருங்குயில் ’- ன் முதல் கதையான ‘ மெய்யெழுத்து ’ எனது பால்யகால வாசிப்பு நினைவின் மங்காமல் இருக்கும் புகைப்பட உருவமான திலீபனைப் பற்றியது என்பதால் காய்ச்சல் வந்தது போல அந்தக் கதையைப் படித்தேன் . கதையில் எட்டாம் வகுப்புச் சிறுவனாக ராகுலனுக்கு திலீபன் அறிமுகமானார் . அதே எட்டாம் வகுப்பில்தான் ஜூனியர் விகடனில் இந்திய அமைதிப்படையிடம் விடுதலைப் புலிகளின் சார்பில் சில கோரிக்கைகளை வைத்து உண்ணாவிரதம் இருந்து இறந்துபோன திலீபனின் புகைப்படங்களையும் செய்திகளாகப் படித்தேன் . ஆயுதப் போராட்டத்தில் இருந்த திலீபன் காந்தியின் வழியில் அமைதிப் போராட்டம் நடத்தி உயிர்நீத்தார் என்பது அப்போதைய புரிதலாக இருந்தது . திலீபனின் கண்ணாடி அணிந்த கண்கள் மறக்க இயலாதவை . நல்லூர் முருகன் கோயில் வீதியில் ஒரு பந்தலின் கீழே கூட்டத்துக்கு நடுவில் திலீபன் படுத்திருக்கும் வண்ணப்புகைப்படம் இந்தச் சிறுகதையைப் படித்தபோது மேலெழுந்துவந்தது . திலீபன் வழியாகவே வி...

ஷோபா சக்தி தீட்டியிருக்கும் ஒரு அகதியின் இன்னுமொரு கதை

  நினைவுதான் வாழ்வு என்று கூட ஒரேயடியாக தலையில் போட்டுவிட வேண்டியதில்லை. ஆனால் வாழ்க்கை தொடர்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவது நினைவுதான். அந்த நினைவின் நிலத்தில், ஒரு சுயம், தன் கால்களை நீட்டி, ஆசுவாசமாய், தொடர்ச்சியின் பாதுகாப்பில் பயணிக்க இயலாமல் அவன் காலடியில் துண்டிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் போது, உருவாகும் நிச்சயமற்ற சுயத்தின் பெயர்தான் அகதி என்றும் அந்த அகதியின் கதைகள் வேறு வேறாகத் தெரிந்தாலும் ஒரே கதைதான் என்பதையும் ‘ஸலாம் அலைக்’ நாவல் வழியாக ஷோபா சக்தி வெளிப்படுத்துகிறார். அவனது, அவளது கதை எப்போதும் ஒன்றுதான். பெயர்கள்தான் மாறுபடுகின்றன. காஃப்காவின் யோசப் க.வும் ஸலாம் அலைக்கில் நாம் காணும் சர்வதேச அகதிகள் அனைவரின் கதையும் ஒன்றுதான்.  இல்லாமல் செய்யும் கூர்மையின் முன்னால், இல்லாமல் போவதற்கு முன்னர் ஏற்படும் வலியின் முன்னால் ஒரு சுயம் என்னென்னவாகவெல்லாம் மாறுகிறது என்பதன் விதவிதமான சித்திரங்கள்தான்  ‘ஸலாம் அலைக்’.       அகதி தனது உடன்பிறந்த சகோதரிகளின் பெயரைக் கூட மறந்துபோகும் மரத்த நிலை ஏற்படுகிறது. ஞாபகம் இருக்கும் பெயர்களை தாளில் எழுதிவைத்...

விமர்சனத்தைக் கதைகளாக்கும் உலகுதழுவிய கதைசொல்லி

உருது எழுத்தாளனான சாதத் ஹசன் மண்டோ உலகளாவிய பண்பைத் தனது படைப்புகள் வழியாக அடைவதற்கு தேசப் பிரிவினையின் சுமையும் அதைத் தொடர்ந்த குருதியும் பைத்தியமும் தோய்ந்த பெரும் மானுடத் துயரும் அந்தக் கலைஞன் மீது இறங்கவேண்டியிருந்தது. தமிழ்ச் சிறுகதை கனவு கண்ட உலகுதழுவிய தன்மையைச் சாதிப்பதற்கு மொழி சாமர்த்தியமும் தொழில்நுட்பமும் வடிவ சாகசங்களும் மட்டும் போதாது என்பதன் நிரூபணம் ஷோபா சக்தி. உலகுதழுவிய தன்மையைச் சாதிப்பதற்கு, தமிழ் அடையாளத்தைக் கொண்ட இனமானது அரச பயங்கரவாதத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் யுத்தத்தையும் இனப்படுகொலையையும் கடக்க வேண்டியிருக்கிறது. அத்துடன் சமூகமும் தனி மனிதர்களும் பாதுகாப்பு, பலம் என்று கருதி சாதி, மொழி, இனம், மதம் தொடர்பில் வைத்திருக்கும் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் உடைமைகளைக் கீழேபோட்டு ஓடிச்செல்வதைப் போல துறக்க வேண்டியிருக்கிறது. ஊர், மொழி, உறவினர்கள், நண்பர்கள், சுற்றம், வீடு திரும்பும் உத்தரவாதம் அனைத்தையும் இழந்து உலக வரைபடத்தில்கூட உடனடியாகப் பார்த்துவிட முடியாத குட்டித் தேசங்களின் எல்லைகளைத் தாண்டிப் பயணிக்க வேண்டியிருக்கிறது. வெறும் உயிரைத் தக்கவைக்கவும் நீடிக...