ஒரு இரவு நேரத்தில் மூன்று கார்கள் துருக்கிய கிராமப்புறச் சாலையில் மூன்று கார்கள் பயணிக்கின்றன. அந்தக் கார்களில் ஒரு பிரேதப் பரிசோதனை மருத்துவர், அரசு வழக்கறிஞர், போலீஸ் அதிகாரி, காவல்துறை ஊழியர்கள், குழிதோண்டுபவர்கள், கொலையில் பங்குபெற்றதாக கருதப்படும் அண்ணன்,தம்பி இருவருடன் சேர்ந்து பயணிக்கின்றனர். குடிபோதையில் கொலைசெய்து புதைத்த ஒரு மனிதனின் பிணத்தைத் தோண்டியெடுப்பதே அந்தப் பயணத்தின் நோக்கம். கார்களை அங்கங்கே நிறுத்தி பயணம் தொடர்கிறது. நள்ளிரவில் குடிபோதையில் பிணத்தைப் புதைத்ததாலும், வறண்ட பாலைவனத்தின் நிலப்பரப்பு ஒரே மாதிரியாகத் தோற்றமளிப்பதாலும்,கொலையாளிகளா ல் சரியாக இடத்தைச் சொல்லமுடியாமல் குழப்பம் ஏற்படுகிறது. சீக்கிரம் வேலை முடிந்து விடும் என்ற நினைத்தவர்களுக்கு அந்த நீண்ட பயணம் களைப்பு தருகிறது. ஒரு கட்டத்தில் எல்லாரும் பயணத்தில் பேசிக்கொள்ளத் தொடங்குகிறார்கள். இளம் ஆட்டிறைச்சியின் ருசி, நீரிழிவு நோயால் அடிக்கடி சிறுநீர் வருவது, குடும்பம்,மனைவியர், மரணம், வேலையில் இருக்கும் அதிகாரப் பாகுபாடு, அலுப்பு, குழந்தைகளைக் கவனிக்கமுடியாதது என அந்தப் பேச்சு நீள்கிறது. ஒர