மேற்கத்தியத் தத்துவமும் இந்தியத் தத்துவ மரபுகளும் ஊடாடும் பின்நவீனத்துவப் புனைவுகள், கட்டுரைகள் வழியாகத் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அறிமுகமாகி, சிறுபத்திரிகை வெளியில் காத்திரமாகத் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் ரமேஷ் பிரேதன். எழுத்தாளர் பிரேமுடன் தொடக்கத்தில் இணைந்து இயங்கிய இவர் தற்போது ரமேஷ் பிரேதன் என்ற பெயரில் தனியாக இயங்கிவருகிறார். கவிதை, காவியம், சிறுகதை, நாவல், கட்டுரைகள், நாடகம் எனச் செயல்பட்ட எல்லாத் தளங்களிலும் முத்திரை பதித்த அரிதான கலைஞர். சாதிதான் எல்லா இந்தியர்களையும் தமிழர்களையும் பிரிப்பதாகவும் இணைப்பதாகவும் உள்ளது என்ற கருத்தோட்டப் புள்ளியில் நின்று, ஒரு தமிழ்ப் பொது மனிதனையும் அவனுக்கான விடுதலையையும் கனவுகாணும் மூன்று நாவல்கள் ‘அவன் பெயர் சொல்’, ‘ஐந்தவித்தான்’, ‘நல்ல பாம்பு: நீல அணங்கின் கதை’. மீபுனைவாக இவர் எழுதிய ‘ஆண் எழுத்து பெண் எழுத்து = ஆபெண் எழுத்து’ எனும் நூலும் தனித்துவமானது. உங்கள் கவிதைகளுக்கான மரபாக பாரதி, பாரதிதாசன் இரண்டு பேரையும் குறிப்பிடுகிறீர்கள். பாரதி, பாரதிதாசன் இருவரும் உங்கள் படைப்புகளில் செலுத்தும் செல்வாக்கைப் பற்றி விரிவா