நஞ்சுண்டனைப் பார்ப்பதற்கு முன்னரே அவருடைய ‘சிமெண்ட் பெஞ்சுகள்’ கவிதைத் தொகுதியைப் பார்த்திருந்தேன். நீல நிறத்தில் அப்போது பிரபலமாக இருந்த ஸ்க்ரீன் பிரிண்டிங் முறையில் வெளியான புத்தகம் அது. அமைப்பியல்வாதம் தொடர்பில், தமிழ் சிறுபத்திரிகை சூழலில், புரிந்தும் புரியாமலும் பெங்களூரு முதல் நாகர்கோயில் வரை தாக்கத்தையும் அச்சுறுத்தலையும் செலுத்திய காலகட்டத்தில் அறிமுகமான பெயர்களில் நஞ்சுண்டனும் ஒன்று. ந. பிச்சமூர்த்தி நூற்றாண்டை முன்னிட்டு சென்னை பாரதியார் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தான் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும், மொழி செம்மையாக்குனருமான நஞ்சுண்டன் அறிமுகமானார். பாரதியார் இல்லத்துக்கு கவிஞர் விக்ரமாதித்யனுடன் போயிருந்தேன். கிட்டத்தட்ட நிகழ்ச்சி முடியும் தருவாயில் மதிய உணவு இடைவேளைக்குப் போனதாக எனக்கு நினைவு. ஞானக்கூத்தன், ஜி. கே. மூப்பனார் எல்லாரும் கலந்துகொண்ட கூட்டம் அது. பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களும் கலைந்துகொண்டிருந்த நிலையில், விக்ரமாதித்யன் நேரடியாகப் போய், டேய் நஞ்சுண்டா என்று அருகே போய், அவரது தலையில் இருந்த பாலுமகேந்திரா தொப்பியை கழற்றி எடுத்துவிட்டார்....